அக்டோபர் 16, 2010

MySQL Database எளிமையாகக் கையாள MySQL Query Browser

MySQL என்பது ஒரு database (தரவுதளம்) ஆகும்.  Databaseல் நமக்குத் தேவையான தகவல்களை வைத்துக் கொண்டு வேண்டிய நேரத்தில் அதை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.  உங்கள் வீட்டு மின்சார கட்டணத்தையோ, தொலைபேசி கட்டணத்தையோ செலுத்த செல்கிறீர்கள். அங்கு computerல் (கணினி) உங்கள் கட்டண billல் உள்ள எண்ணை உள்ளீடு செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களுடைய databaseல் பதிவாகிறது.  FMல் (பன்பலை) கேட்டவுடன் பாட்டு போடுவது, சமையல் எரிவாயு வேண்டி தொலைபேசியில் பதிய உங்கள் எண்ணை சொன்ன உடனேயே உங்கள் பெயரைச் சொல்லி வியப்படையச் செய்வது அத்துனையும் அதிவேகமாகத் தகவல்களைத் தரும் databaseஆல்தான்.  கல்லூரி பாடத்திட்டத்திலும் இது ஒரு தவிர்க்க முடியாத, கட்டாயம் கற்க வேண்டிய பாடமாகும்.

நிறைய கல்லூரிகளில் அதிகளவில் தகுந்த உரிமமில்லாமல் ஆயிரக்கணக்கான விலையுடைய காப்புரிமை மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.  DBMS Database Managaement System பாடத்தில் செய்முறைப் பயிற்சியும் (practical) கட்டாயம் இருக்கும்.  Database என்பது ஒரு பொதுவான பாடத்திட்டம்.  Databaseல் உள்ள தகவல்களை கேட்டுப் பெறுவதற்கு ஒரு மொழி உண்டு.  அதுதான் SQL Structured Query Language.  SQL வழியாகத்தான் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்வதிலிருந்து, அதை பராமரிப்பது, மேம்படுத்துவது, தகவல்களை கேட்டுப் பெறுவது என அனைத்து வேலைகளையும் செய்கிறோம்.  இதன் சாராம்சம் பெரும்பாலும் அனைத்து databaseகளிலும் ஒரே மாதிரித்தான் இருக்கும்.  அப்படி இருக்கையில் ஏன் ஒரு குறிப்பிட்ட மென்பொருளை மட்டும் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டிற்கு Oracle database இல்லாத கல்லூரியையோ, பல்கலைக்கழகத்தையோ காண்பது அரிது.  Oracleலிலும் இலவசப் பதிப்பு இருக்கிறது, நாம் அதையா பயன்படுத்துகிறோம்.  நாம் பயன்படுதுவதெல்லாம் தொன்றுதொட்டு பயன்படுத்திவரும் Oracle Personal edition 7 தானே. இது இலவச பதிப்பு இல்லை. உங்களுக்கு ஆரக்கிள்தான் பயன்படுத்த வேண்டுமென்றால் Oracale Xpress Edition பயன்படுத்தவும். இது விண்டோஸ் OSற்கு (இயங்குதளம்) மட்டுமல்லாமல் லினக்சுக்கும் கிடைக்கும்.

மாணவர்களின் பயிற்சிக்கு ஆரக்கிள்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.  Open Source (திறமூல மென்பொருள்) databaseகளையும் பயன்படுத்தலாம்.  இவற்றில் முக்கியமான இரண்டு databaseகள் MySQLலும், Postgree SQLலும்.  MySQL தற்போது ஆரக்கிள் வசம் இருக்கிறது.  Postgree SQL முழுக்க முழுக்க சுதந்திரமாகப் பயன்படுத்தலாம்.  MySQL ஏற்கனவே அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்ததால் அதனை எளிமையாக நிர்வகிக்க பல தரமான applications (மென்கலம்) உள்ளன.



Project செய்யும் மாணவர்களிடம் அடிக்கடிக் கேட்கப் படும் கேள்வி என்ன Frontend? எந்த Backend? பயன்படுத்துகிறாய் என்பதுதான்.  Frontend என்பது தகவல்களை சாதாரண பயனாளார் எளிமையாக (user friendly) உள்ளீடு செய்வதற்காக வடிவமைப்பது.  Backend என்பது பின்புலத்தில் என்ன database பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிக்கிறது.  அதுசரி projectற்கு frontend வடிவமைப்பது இருக்கட்டும்.  பின்புல databaseஐ வடிவமைப்பதற்கு நமக்கொரு frontend இருந்தால் எப்படியிருக்கும். Databaseல் தகவல்கள் Tableகளில் சேமிக்கப் படுகிறது.  இந்த tableகளை வடிவமைப்பதே போதும் போதுமென்றாகி விடும். இந்த வடிவமைப்புகளை எளிமைப் படுத்த தற்போது வரும் அனைத்து databaseகளிலும் (MS Access, MySQL, Microsoft SQLServer, Oracle, SQLite...) tableகளை எளிமையாக வடிமைக்கவும், அதில் எளிதாக தகவல்களை உள்ளீடு செய்யவும், நமக்கு வேண்டிய SQL queryகளை வடிவமைக்கவும் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றது.


எடுத்துக்காட்டிற்கு MySQL databaseக்கு உள்ள ஒரு visual toolஐ காண்போம்.  MySQL பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் MySQL Query Browserஐயும் பயன்படுத்துங்கள். எழுத்தில் தரும் விளக்கதைவிட ஒரு படம் எளிதாகச் சொல்ல வேண்டியதை சொல்லிவிடும் என நினைக்கிறேன். கீழ்காணும் MySQL Query Browser படங்களைக் காணுங்கள். நீங்கள் விண்டோசிலோ, லினக்சிலோ இந்த tool பயன்படுத்தாமல் MySQLஐ command promptட்டிலும், terminalலிலும் பயன்படுத்துவராக இருந்தால் உடனே உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய இந்த மென்பொருளை install செய்து கொள்ளுங்கள்







10 கருத்துகள் :

  1. சிறப்பான தகவல் உண்மையில் டேடாபேஸ் பற்றி குழப்பம் எனக்கு இப்போதுதான் தீர்ந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி திரு.எஸ்.கே

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஅக்டோபர் 17, 2010

    //Oracale Xpress Edition பயன்படுத்தவும். இது லினக்சுக்கும் கிடைக்கும்.//

    அப்படியா. எனக்கு தெரியாதே. சுட்டி கொடுங்களேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு ரவி...நல்ல விளக்கம்..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு.பிரபு.
    // சுட்டி கொடுங்களேன்...
    http://www.oracle.com/technetwork/database/express-edition/downloads/102xelinsoft-102048.html

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி திரு.சந்தோஷ். என் பெயர் ராஜ்குமார். ரவி எனது தந்தையார் பெயர். ந.ர.செ என குடும்பப் பெயருடன் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஐயா
    mysql Data Base வைத்து எவ்வாறு வெப்சைட் உருவாக்குவது?
    (dynamic Web Page
    Ex:www.example.com/index.php?tamil=view

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் பகிர்வு. தொடர்க உங்கள் திருப்பணி...

    அன்புடன் தினேஷ்

    பதிலளிநீக்கு
  9. திரு.ஹிஜாஸ், திரு.தினேஷ் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    //Hijas said...
    mysql Data Base வைத்து எவ்வாறு வெப்சைட் உருவாக்குவது?
    இன்னும் கொஞ்சம் விளக்கமாய்க் கூறுங்களேன். mysql வைத்து வெப் பக்கம் உருவாக்கிப் பார்க்கப் போகிறீர்களா? இணைய தளமாகவே உருவாக்க வேண்டுமா? front end என்ன? mysqlல் தமிழ் பயன்படுத்த வேண்டுமா??????.... என் பதில் ஒன்றுதான், ஜாவாவிலும் ஜே.எஸ்.பி யிலும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு