ஜனவரி 02, 2011

அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள்

அழகான தமிழ் எழுத்துருக்களை (tamil fonts) இந்த http://sites.google.com/site/tamilcpufiles சுட்டியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்.  இந்த எழுத்துருக்கள் பனேசியா சாப்ட்வேர் நிறுவனத்தால் இலவசமாய் வழங்கப்பட்டவை.  வெவ்வேறு வகையான தமிழ் எழுத்துருக்களை நம் கணினியில் பயன்படுத்த இயலும்.  TAM, TAB, Unicode, TSCII என பல வகைகள் இருந்தாலும் இணையத்தில் நாம் தமிழ் ஒருங்குறி (tamil unicode) எழுத்துருக்களை பயன்படுத்துகிறோம்.  



தமிழ் யுனிகோட் எழுத்துக்கள் சிக்கல்மிகு கட்டமைப்பைக் கொண்டவை. எடு ‘கி’ என்பது  ஒரே எழுத்தாக கையாளப் படாது. ‘க’ + ‘ி’ சேர்ந்து கி என வரும். பழைய மென்பொருட்கள் இதனை ஆதரிப்பதில்லை (எடு: போட்டோஷாப் 7). ஆகவே பதிப்புத் துறையில் (publishing / DTP) தனியெழுத்தாகவே கையாளப்படும் TAM அல்லது தனியார் குறியீட்டு முறைமைகளான (private encodings) செந்தமிழ் ஃபாண்ட்கள் போன்றவை பயன்படுத்தப் படுகிறது.  தனியார் ஃபாண்ட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். நம்மிடம் எவ்வளவு அழகான எழுத்துருக்கள் இருந்தாலும், அதை உள்ளீடு செய்ய (டைப் செய்ய) முடியவில்லையெனில் பயனில்லை.



    
தமிழை உள்ளீடு செய்ய பல மென்கலங்கள் (software) இருந்தாலும், நான் விரும்பிப் பயன்ப்டுத்துவது NHM Writer மென்பொருளை. இந்த மென்பொருளை பதிவிறக்குவதற்கான சுட்டி download NHMWriterSetup1511.exe
உங்களுக்கு வசதியான கீபோர்ட் லேயவுட்டை தெர்ந்தெடுக்கவும்.
அம்மா என்பதற்கு ammaa என டைப் செய்ய ஆசைப் படுவோர் பொனடிக்கை தேர்ந்தெடுக்கவும். தமிழ்99, தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை பழகியிருந்தால் தங்களுக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும். NHM Writerல் சுருக்கு விசையும் (shortcut) வைத்துக் கொள்ளலாம்.


என் கணினியில் பொனடிக் தமிழ் யுனிகோட்  Alt + 1ம், பொனடிக் TAM தமிழ் Alt + 2ம் வைத்துள்ளேன்.  நாம் அதிகம் பயன்படுத்தாதவைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.






இன்னொரு முக்கியமான சேதி எல்லா எழுத்துருக்களையும் நிறுவி கணினியை சிரமப் படுத்தாதீர்கள்.  

வேண்டிய எழுத்துருக்களை மட்டும் நிறுவங்கள்.  உங்களுக்கு பிடித்த எழுத்துருக்களை உடன் வரும் pdf கோப்பின் மூலம் தேர்ந்தெடுங்கள்.

16 கருத்துகள் :

  1. thank u for giving tamil fonts and some important valuable note by prakasam

    பதிலளிநீக்கு
  2. @vella தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ..valuable note by prakasam ????????????????!!!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவுக்கு நன்றி.ஒரு மாதமாக அழகான எழுத்துருக்களை தேடிகொண்டு இருந்தேன். உங்கள் பதிவு உதவியாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயனடைந்ததைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.

      நீக்கு
  4. பதிப்புத் துறையில் (publishing / DTP) பயன்படுத்தும் அழகர், அக்‌ஷயா, அழகிரி, ஐஷ்நர்யா, அபிராமி, அமலா, அம்பிகா போன்ற எழுத்துருக்களை வைத்து தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? வழிகாட்டவும்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் வழங்கிய அழகிய எழுத்துருக்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாளைக்கு முன் எழுதிய பதிவு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். நான் சேமித்து வைத்திருந்ததை பதிவேற்றினேன் அவ்வளவுதான். அதை உருவாக்கி வழங்கிய திண்டுக்கலை சேர்ந்த பனேசியா நிறுவனத்திற்கே நன்றிக் கடன் பட்டுள்ளோம். மத்திய அரசு வழங்கிய இலவச குறந்தகட்டின் (கம்ப்யூட்டர் உலகம் மாத இதழுடன் வந்தது) மூலம் கிடைக்கப் பெற்றேன். எங்கள் ஊர் காரைக்காலில் அப்போது அந்த இதழ் கிடைக்காததால் நண்பனின் மூலமா நாகபட்டனித்திலிருந்து வாங்கி வந்தேன்.

      நீக்கு
  6. Thank you so much for this. these fonts are beautiful, cant wait to use them. some beautiful tamil fonts are used in Kumudam/Ananda Vikatan mags. where can I buy/get them?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. For individual users I think these free fonts are enough to do. I know in some photo studio they prefer using Senthamizh (Typed with Keyman keyboard driver) fonts. Problem in using private standard font is the compatibility with the rest of world.

      நீக்கு
    2. Thanks Ravi, Yes, I'm a graphic designer & liked to use different kind of typography in my works. as you mentioned I have quite a few beautiful Senthamizh fonts but problem with typing in Mac. I'm currently trying to convert some of the Senthamizh fonts to unicode. hope they turn out well. thanks for your time.

      நீக்கு
    3. Best wishes to convert them to Unicode. If there is some online service or tool to convert to Senthamizh fonts we can use. I am not sure any exists. ex: http://www.suratha.com/reader.htm
      Few years back I wrote a tool for friend to convert from TAM to Senthamizh (Windows), but missed that code and tool. You can install Windows in a virtual machine in your MAC. By so you can type in windows and parellely copy to MAC.

      நீக்கு
  7. இதைத்தானய்யா தேடிக்கொண்டிருக்கிறேன், நல்ல தகவல் என்போன்ற கவிஞர்களுக்கு

    நன்றியுடன் கவிஞர் பெருவை பார்த்தசாரதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவு தங்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

      நீக்கு