செப்டம்பர் 20, 2011

JSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி?


ஜாவா புரோகிராமிங் மொழி வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.   வெப் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க ஜாவா platformல் JSP, Servlet போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன.  JSPயும் serveltம் தனி மொழிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.  இவை J2EE (specification)லிருக்கும் அம்சங்கள்.   J2EE என்பது Java 2 Enterprise Edition என்பதைக் குறிக்கிறது.  J2EE platform என்பது Servlet,jsp,java mail,ejb போன்ற பல்வேறு ஜாவா தொழில்நுட்பங்கள் சேர்ந்த தொகுப்பாகும்.  J2EEல் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஜாவா மூலமாக புரோகிராம் செய்கிறோம்.

ஒரு ஜாவா புரோகிராம் இயங்க, அந்தக் கணினியில் ஜாவா (JDK/JRE) நிறுவப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிவோம்.  அதுபோல jsp, servlet, asp, php... போன்ற தொழில்நுட்பங்களில் உருவாக்கும் புரோகிராம்கள் இயங்க வெப் சர்வர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  பெரும்பாலான புதியவர்கள் தவறு செய்வது இங்கேதான்.  இரட்டை க்ளிக் செய்து .html fileஐ ரன் செய்வது போல இயக்க முடியாது.  சர்வரில் பதிவேற்றி (deploy) இயக்க வேண்டும்.  எப்படி ஒரு இணையதளத்தை அணுக ப்ரவுசரில் அதன் முகவரியை சுட்டுகிறோமோ, நீங்கள் பதிவேற்றியிருக்கும் சர்வரின் முகவரியைக் கொடுக்க வேண்டும்.  அது உங்கள் கணினியிலேயே இருந்தால் localhost எனக் குறிப்பிடலாம் (எடு:  http://localhost:8080/myproject/login.html, http://localhost/xampp/test).

JSP மற்றும் Servlet நிரல்களை இயக்க பெரும்பாலும் Apache Tomcat எனும் சர்வரை பயன்படுத்துகின்றனர்.  இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் சர்வராகும்.  இது போன்ற சர்வர்களில் இயங்கக்கூடிய புரோகிராம்களை எக்லிப்ஸ், நெட்பீன்ஸ், விசுவல் ஸ்டூடியோ.net போன்ற IDEக்கள் மூலம் உருவாக்கலாம்.

ஜாவாவில் J2SE, J2EE, J2ME பிரிவுகளுக்கேற்ப எக்லிபிஸ் பதிப்பையும் பணிச்சூழலுக்கு தகுந்தற்போல பயன்படுத்தலாம்.  எடுத்துகாட்டிற்கு ஜாவா command line புரோகிராம், அல்லது டெஸ்க்டாப் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கு நிரலெழுத Eclipse For Java Developers போதுமானது.  வெப் அப்ளிகேஷன்ஸை உருவாக்க Eclipse For J2EE Development பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

   - தொடரும்
       

13 கருத்துகள் :

 1. கட்டுரை இன்னும் முழுசா முடியிலிங்க. ஏகப்பட்ட இடைச்சொருகல்கள் சேர்க்க வேண்டியிருக்கு. நீங்க கூகிள் ரீடர் மூலம் படித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள பதிவு. தலைப்பு வைக்க மறந்துட்டிங்களா?

  பதிலளிநீக்கு
 3. @ பொன்மலர்
  சுட்டிக் காட்டியதற்கு நன்றி. Draftல் சேமித்து பிறது வெளியிடத்தான் நினைத்திருந்தேன், தூக்கக் கலக்கத்தில் அவசர கதியில் பொறுமையில்லாமல் பதிவிட்டிருக்கிறேன். என்ன செய்ய? பிழைப்பு அப்படி.

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள கட்டுரை. ஸ்கிரின்ஷாட் லாம் நல்லா எடுத்திருக்கிங்க.கஷ்டப்பட்டு எழுதியிருக்கிங்க. ஆனா யாரும் ஓட்டுப் போட வர மாட்டறாங்க. வருத்தமா இருக்கு. என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 5. நானும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. அருமையான உதவி பக்கம். ஆனால், இது குறிப்பிட்ட ரீடர்ஸ்க்கு மட்டும்தான் புரியும்.

  பதிலளிநீக்கு
 7. @ சாகம்பரி //... ஆனால், இது குறிப்பிட்ட ரீடர்ஸ்க்கு மட்டும்தான் புரியும்.

  சரிதான், ஏதேனும் ஒரு மாணவர் பயனடைந்தால் கூட மகிழ்ச்சிதான். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் அடிப்படையிலேயே தடுமாறுவது வேதணை. சிறிது காலம் கழித்து உங்களைப் போல ஒரு ஆசிரியராகிவிட வேண்டுமென்பதே என் விருப்பம்.

  பதிலளிநீக்கு
 8. பகிர்வுக்கு நன்றி தோழரே .தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பணி தொடர்க.
  வாழ்த்துகளுடன்

  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

  பதிலளிநீக்கு
 10. Thank u so much Mr.Rajkumar. plz continue. very useful for me and new comers.

  Selva

  பதிலளிநீக்கு