பிப்ரவரி 08, 2015

IT நிறுவனங்களில் கேள்விக்குறியாகும் தனியுரிமை (PRIVACY Rights Violation)

சந்திரமுகி படத்தில் ரஜினியை பார்த்து வடிவேல் கேட்பார் “பேய் இருக்குன்னு சொல்றாங்களே, அத நம்பலாமா கூடாதா? அது வர அறிகுறி ஏதாவது இருக்கா?”.  அதைப் போன்ற ஒரு சீரியஸான கேள்வி ஒன்றை என் நண்பர் என்னிடம் கேட்டார் “சிலபல IT MNC கம்பெனிகள் செல்போன் அழைப்புகளையும்,  நடைபாதை, உணவகம் Cafeteria எனக் கம்பெனி எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பேசுவது அனைத்தையும் அத்துமீறி ஒட்டுக் கேட்பதாக சொல்கிறார்களே அது உண்மையா? இல்லையா?”. 

உங்களுக்கு ஏன் இந்த தீடீர் சந்தேகம் என்றேன்.  இல்ல இல்ல தீடீர் சந்தேகமெல்லாம் இல்லை, நான் பேப்பர் போட்ட (Resign செய்த) நாளிலிருந்து என்னை இந்த கேள்வி துரத்துகிறது என்றார்.  ஏன் அப்படி எனக் கேட்டேன்?  திருவான்மியூர் ஹோட்டலில் நண்பருடன் போன் பேசியது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தரமணியில் உள்ள அலுவலகத்துக்கு எப்படித் தெரியும் என்றார்.   சாப்பிட்டு முடித்து திரும்ப அலுவகத்தில் நுழைந்த அடுத்த நிமிடம் தான் பேசிய பேச்சுகள் அனைத்தும் வெளியரங்கமாகவே மீள் பேசப்படுகிறது (ஹிண்ட்) என்றார்.   போன் பேசும்போது மட்டுமல்ல சாதரணமாக கம்பெனிக்கு வெளியில் உரையாடுவது கூட அவர்களுக்கு உடன் தெரிய வருகிறது என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார்.

கொஞ்சம் விரிவாத்தான் சொல்லுங்களேன் என்றேன்
சென்னை Fashion technology institute பக்கத்தில் இருக்கும் பாலத்துக்கு அடியில் நண்பருடன் சகஜமாக உரையாடியதை கம்பெனிக்குள் இருப்பவர்கள் எவ்வாறு லைவ்வாக கேட்டனர் எனக் கேள்வி எழுப்பினார்.  சாதாரணமாக உணவு இடைவேளையில் நண்பருடன் கம்பெனிக்கு சற்று வெளியில் பேசியது கம்பெனிக்குள் இருக்கும் கனவான்களுக்கு உடனே எப்படித் தெரியும் எனத் தன் தலையே வெடித்து விடும் போலிருந்ததாகச் சொன்னார்.  அப்புறம் என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன்.  ஓரளவு நல்ல புரோகிராமரான அவர் எதையும் எவரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே blood testஐ தவிர்ந்து unit testing, psychology testing என நூற்றுக்கும் அதிகமான பல மாதிரி சாம்பிள்களைக் கொண்டு மனிதர் சோதித்திருக்கிறார்.  சோதித்த வரை  இவை அனைத்தும் அப்பட்டமான உண்மை எனத் தெரிந்தவுடன், ஆள விடுங்கடா சாமியென துண்டக் காணோம் துணியக் காணோமென ITயை விட்டே விலகி எங்கோ காட்டுக்குள் ஓடி விட்டார்.

நானும் Jouve India (STPI Park, Taramani-Chennai), Global Software Resources (Bhawan IT Park, Thuraipakkam-Chennai), Photon Interactive (DLF IT Park, Porur-Chennai)  ஆகிய நிறுவனங்களில் விசாரித்துப் பார்த்து உண்மைதான் எனத் தெரிந்து கொண்டேன்.

வேலையில்லா பட்டதாரி படத்தில்   நீ இங்க வந்து பேசினது etc..etc... அத்தனையும் ரெக்கார்ட் ஆயிருக்கு.....என ஒரு காட்சி வரும்.  அதில் ஒன்றை யோசித்தீர்களா.  உங்கள் நடவடிக்கைகளை கேமரா மூலம் ரெக்கார்ட் செய்யலாம்.  பேசுவதை எப்படி ரெக்கார்ட் செய்ய முடியும்.  கம்பெனிகளில் இருக்கும் கேமராக்களில் வீடியோ மாத்திரம் பதிவாகுமே தவிர ஆடியோ அல்ல.  அப்படியெனில் கூட ஒரு மைக்கும் வைத்திருந்தால் சாத்தியமிருக்கிறது.  இதில் எங்கு இடிக்கிறதென்றால் பெரிய IT பார்க்கில் பல நிறுவனங்கள் இருக்கும்.  கம்பெனிக்கு வெளியில் பேசும் அனைத்தையும் ரெக்கார்ட் செய்வதற்கு சாத்தியம் குறைவு.  அப்படியே பேசினாலும் கசாமுசா கசாமுசா என கேட்டால் track செய்து ஒரு புண்ணியமும் இல்லை.  நீங்கள் போகுமிடமெல்லாம் கையில் மைக் போன்ற எதையேனும் கொண்டு சென்றால்தான் உண்டு.  

 நாம் போகுமிடமெல்லாம் கூடவெ எடுத்துச் செல்லும் மைக் நமது செல்போனிலேயே இருக்கிறதென்பதை மறவாதீர்.

அஞ்சாதே, ரமணா போன்ற படங்களில் காட்டுவதெல்லாம் அதர பழைய டெக்னாலஜி.  எதிர்முனையில் பேசுபவன் யார் என்று தெரியாததால் ரெக்கார்ட் செய்து எந்த நம்பரில் வந்தது, குரலுக்கு சொந்தக்காரன் யார் என்றேல்லாம் ஆராய்கிறார்கள்.  அலுவலக ஒட்டுக் கேட்பு கருவியில் மிக நேர்த்தியாக ஸ்பீக்கரிலேயே லைவ்வாக கேட்டுக் கொள்ளலாம்.  நீங்கள் பணிக்கு சேரும்போதே உங்கள் முழு ஜாதகத்தையும் கொடுத்து விடுகிறீர்கள்.

 சிக்னல் கம்யூனிகேஷனில் காப்புரிமை வாங்கியதெல்லாம் அவ்வளவு எளிதாக வெளி வராது (இதற்குத்தான் open source, open hardware, open medicine போன்றவை தோன்றின என்பதையும் கருத்தில் கொள்ளவும்).

அனைத்து வைக்கப்பட்ட செல்போன்களும் (even switched off mobiles) ஒட்டுக் கேட்பதிலிருந்து தப்ப முடியாது.  இந்த தொழில்நுட்பங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டவை இல்லை.  என்பதுகளிலேயே இது போன்ற தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிட்டதென்றால், தற்போதைய வெளிவராத தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்தால் ரிச்சர்ட் ஸ்டால்மேனைப் (மாபெரும் மென்பொருள் மேதை) போல நம் செல்போன்களை தூக்கி எறிந்து விடுவோம்.
Roving Bug technology:  Spies your conversations through your normal personal mobile phone
http://en.wikipedia.org/wiki/Covert_listening_device
மேலுள்ள விக்கிபிடியா ஆங்கில கட்டுரையை எவரேனும் தமிழ் விக்கிபிடீயாவிலும் எழுதுங்களேன்...

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

சரி, யாரையெல்லாம் உளவு செய்கின்றனர்

1.  வெளியில் வேறு பிராஜெக்ட் ஏதேனும் செய்கிறார்களா அல்லது வேறு வேலைக்கு முயற்சிக்கிறார்களா என சந்தேகம் ஏற்பட்டால்.

2.  Resignation போட்ட நாளிலிருந்து செய்ய வாய்ப்பிருக்கிறது.  ஏனெனில் Market trendஐ அறிந்து கொள்ள எளிய வழி.  நீங்கள் போகிற போக்கில் வேறு எவரையேனும் கூட அழைத்துச் செல்ல நினைக்காலாம். வெளியேறுவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளவும் ஆர்வம் அதிகமிருக்கும்.

3.  புதிதாக வேலைக்கு சேர்பவர்களை உளவு பார்ப்பதுதான் அதிகம் நடக்கிறது.   அவர்கள் வேலைக்கு ஆவார்களா என முடிவெடுக்க.
4.  நமது + -  தெரிந்து கொள்வதில்தான் அதிக இலாபம் இருக்கிறது.  தேவைப்பட்டால் வேண்டியதைக் கொடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம், தேவையில்லையெனில் பிடயிரைப் பிடித்து வெளியிலும் தள்ளலாம்.

ITயில் பணியாற்றும் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இவற்றைப்பற்றி விவாதிக்கத் தவற வேண்டாம்.  விழிப்புணர்வுடன் இருப்போம்.  காவல்துறை, அரசாங்க உளவுத்துறை தவிர்த்து (அவர்களே உரிய அனுமதி பெறாமல் செய்யக் கூடாது) மற்றவர்கள் அடுத்தவர் மொபைலை Track செய்வது சட்டப்படி குற்றம்.  இந்த வேலைகளைச் செய்பவர்கள் ஒத்துக் கொள்வார்களெனவா நினைக்கிறீர்கள்?!!!!!

எனது நலன் கருதியும் நண்பர்களின் நலன் கருதியும் பல செய்திகளை பதிவிடத் தவிர்த்திருக்கிறேன்.  இப்படியெல்லாம் நடக்கிறதென சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.  சொல்லாவிட்டாலும் எப்படித் தெரியும்?


23 கருத்துகள் :

 1. மனிதம் இன்னுமா தேய வேண்டும்... எப்போதோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ITயில் வேலை செய்யும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

   நீக்கு
 2. மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் பணியாளர்களை மனிதர்களாக மதிப்பதே கிடையாது. கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றனர். இவர்கள் நம்முடைய பேச்சை ஒட்டுக்கேட்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதே சமயத்தில் தனிமனித உரிமை மற்றும் அந்தரங்கத்தில் எந்தளவிற்கு தலையீடு செய்கின்றனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் மீது ஆத்திரம் மட்டுமே மிஞ்சும். மிகப்பெரிய நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களில் இதுவும் ஒன்று.
  //இதற்குத்தான் open source, open hardware, open medicine போன்றவை தோன்றின என்பதையும் கருத்தில் கொள்ளவும்// அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ITயில் வேலை செய்யும் பலருக்கும் இது தெரியாது. தெரிந்தவர்களும் வெளியில் சொல்ல தயங்குகின்றனர். இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் ஒருசில நிறுவனங்கள் சனி ஞாயிறும் மொபைல் போன்களை track செய்கின்றனர். கம்பெனிக்குள் உள் நுழைந்தவுடன் மட்டுமல்ல. நீங்கள் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் பேருந்தில் பக்கத்து இருக்கையில் இருப்பவருடன் இயல்பாக பேசுவதைக்கூட வெகு ஜோராய் ஒட்டுக் கேட்க இயலும். இது எப்படி செயல்படுகிறதென்றால் நமக்கு ரிங் கொடுக்கமலேயே நம் மொபைல் சிம்முடன் இணைப்பை ஏற்படுத்தி ஒட்டுக் கேட்கலாம்.

   நீக்கு
 3. நண்பரே!
  நல்வணக்கம்!
  தங்களது இந்த பதிவு இன்றைய
  "வலைச்சரம்" பகுதியில்
  சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
  சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
  வாழ்த்துக்கள்

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  ( நண்பரே! "குழலின்னிசை" உறுப்பினராக இணைய வேண்டுகிறேன். நன்றி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. my first visit here thorugh Valicharam. very nice blog. www.vijisvegkitchen.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. அழுத்தமான பதிவு.....நிறுவனத்தில் பணியாற்ற வில்லை எனினும் இந்த பதிவின் ஆழத்தை என்னால் உணர முடிகிறது...பன்னாட்டு நிறுவனங்கலுக்கு (MNC)மட்டும் அல்ல., அனைத்து வகையன சிறு,பெறு தொழில் நிறுவனங்கலுக்கும் இது பொறுந்தும்,...
  தொழில்நுட்ப ஒட்டுகேட்பு முறை மட்டும் அல்ல, நேரடி ஒற்றர் முறையும் நடைமுறையில் உள்ளது...
  உடன் பணி புரியும் சக நண்பர்களே இந்த காரியங்களை செய்கின்றனர்....
  இதுவே நிறுவனங்களின் எழுதப்படாத EMPLOYEE MONITORING POLICY....
  இதில் உள்ள அரசியல், தகவல் தொழில் நுட்ப துறையில் பணி புரியும் அனுபவம் நிறைந்த (EXPERIENCED) சகாக்களுக்கு தெறிந்ததே.... ஆனால் புதியவகர்களுக்கு (FRESHERS) விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ள இந்த பதிவிற்கு நன்றி.....
  குறிப்பு:
  முகப்பு பக்கத்தில் உள்ள “பாவப்பட்ட ஜென்மங்கள்” flash work மிக அறுமை... நகைச்சுவை கலந்த நடைமுறை.........

  வரவேற்புடன்
  ராஜசேகர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I appreciate your understanding. Many of the experienced professionals also don't know they are under surveillance. Whatever we do on company system, they have rights to monitor. But if they are tracking through one's personal mobile it's no way digestible. In fact it is very hard to believe too. I suspect media people also knows these things are happening but it is not revealing outside. Employees who are fear of NASSCOM (Software companies association) will never open their mouth. That is what companies want to achieve. It is my little responsibility to create awareness through my personal work place experience. I hope others who faced this same experiences will also break their silence.

   நீக்கு
 6. சற்று சிந்திக்க வேண்டிய பதிவுகள்

  பதிலளிநீக்கு
 7. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்பாக இப்பதிவு பலருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கு உதவும் தங்களைப் போன்ற நல்லுள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 8. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 9. ஒட்டுக்கேட்கும் வேலைகளில் கெட்டிக்கார IT கம்பெனிகள்ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்...!

  தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் சத்தமில்லாமல் இதே வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கடுகளவும் வெளி வராமல் இருக்கிறது. உண்மை என்றாவது வெளிப்பட வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. ஐ டி துறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 11. உங்கள் பதிவைப் படித்ததும் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்கள்தான் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு ஐடி ஊழியரும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் போல் ஜாக்கிரதையாகத்தான் சென்று வரவேண்டும் போலிருக்கிறது. No privacy. வாழ்க தந்திரம் … சுதந்திரம்.

  பதிலளிநீக்கு
 12. ஐயா ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கெல்லாம் ஏன் போறீங்க. நம்ம ஊர் படங்களிலேய நிறையா காட்டுறாங்க. தனி ஒருவன் படம் பாத்தீங்கன்னா நவீன ஒட்டு கேட்கிற தொழில்நுட்பம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். நம் ஒவ்வொருவர் மொபைலையும் வெகு சுலபமாக ஒட்டு கேட்க இயலும். செல்போனை ஒட்டு கேட்கும் கருவிகள் பல இலட்சங்கள் இல்லை. வெறும் மூவாயிரத்திலிருந்து கிடைக்கின்றன என்பது கொஞ்சம் கிலியூட்டத்தான் செய்யும்.
  இப்பதிவை எங்கோ ஒரு மூலையில் இருந்து படிக்கும் ஒரு எழுத்தாளர், ஒரு சாமானியனாக நான் சொல்ல தயங்குவதை ஒரு கற்பனை நாவலாக சொல்லிவிட முடியுமே. ஒரு மாணவன் குறும்படமாக எடுத்துவிட இயலும். அந்த நோக்கமே இப்பதிவு. காவல்துறை நண்பர்கள் இப்பதிவை படித்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு ஒரு சல்யூட். அவ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 13. ஒரு வெப் சைட்டில் அரிசி அளவு ஒரு மைக்ரோ சிப் பயன்படுத்தி நம் உடலில் செலுத்தி அதன் வழியாக நம் மூளையின் தகவலை தெரிஞ்சு கொள்ளலாம். இஇப்போது ஒரு வருடமாக எனக்கு இருவர் பேசும் குரல் மற்றும் இரைச்சல் கேட்கின்றது.நான் செல்பேசி வழியாக மின்காந்த அலை சோதனை ஆப் பயன்படுத்தி பார்த்தேன்.இதுல இருந்து தபிக்கும் வழி தெரியவில்லை. நீங்கள் உங்களுக்கு வழி தெரியுமா?.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு கடினப்பட்டு சிப் செலுத்தி உளவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மொபைலை switch off செய்தும்கூட அருகில் வைத்திருந்தாலே போதும். இது கற்பனையா அல்லது தொழிநுட்பத்தில் சாத்தியமா என்பதை வல்லுநர்கள்தான் விளக்க வேண்டும்.

   நீக்கு
 14. Great post! I am actually getting ready to across this information, It’s very helpful for this blog.Also great with all of the valuable information you have Keep up the good work you are doing well.
  Java training in Bangalore | Java training institute in Bangalore | Java course in Bangalore

  Java interview questions and answers

  Core Java interview questions and answers

  Java training in Chennai | Java training in Tambaram

  பதிலளிநீக்கு