பிப்ரவரி 14, 2016

நிழலுலக ஆயுதம் - Chemtrails

ஹெலிகாப்டர் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் வானத்தை பார்ப்பது நம் மரபணுவில் வந்தது.  அதை வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு அற்ப ஆனந்தம்.    ஜெட் விமானம் பறந்து சென்ற தடத்தை நீல நிறப் பின்னனியில் பார்ப்பது ஒரு அழகான ஓவியம் போலிருக்கும்.   இந்தத் தடங்கள் ஆங்கிலத்தில் Contrail என்று அழைக்கப் படுகிறது.   வேதியல் தெளிப்பு எச்சங்களுடன் Chemical sprayed வானில் தெரியும் விமானப் புகைத்தடமே Chemtrails.  Chemical + Trail  —>  Chemtrail.  
வேதிப் பொருட்கள் (இரசாயன) + தடம்  —> வேதித்தடம் என பெயர் வைக்கலாமா?  செயற்கை மழையைப் (Cloud Seeding) பற்றி தமிழ்நாடு அறிவியல் பாடப் புத்தக்கத்திலேயே உள்ளது.  அதீத பஞ்சம் வரும்போது விமானங்கள் மூலம் சில இரசாயண பொருட்களைத் தூவி செயற்கையாய் மழை வரவைக்க இயலும்.  இதனுடைய உல்ட்டாவும் சாத்தியமே.  அதே விமானங்கள் கொண்டு செயற்கையாய் மழையை தடுத்து நிறுத்தி பஞ்சம் கொண்டுவர இயலும்.  

இதெல்லாம் அந்தந்த வான்பரப்பில் மட்டுமே செய்ய வேண்டிய அவசியமில்லை.  சர்வேதச கடல் பகுதியில் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், எப்படி வெளியில் தெரியும்.Contrail, Chemtrail இதெல்லாம் நமக்கு புதிய வார்த்தைகள்.  நேற்றைக்குதான் இந்த சொற்களை நான் கேள்விப்படுகிறேன்.   Chemtrail மனிதன் அறிவியலில் பலமடங்கு முன்னேறியதின் ஒரு சிறு துளி.   NASA (அமேரிக்க வின்வெளி திட்டம்), UN (ஐநா சபை), DARPA (அமேரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம்)  போன்ற பல அமைப்புகளின் இரகிய திட்டமே Chemtrails.   அறிவியல் மனிதனின் கையில் இருக்கும் ஆயுதம்.  அதை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் விதைக்கலாம்.  மனித குலத்தை அழிவுக்கு அழைத்து செல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இராணுவ திட்டமே Chemtrails.  
பற்றி எரியும் வளைகுடா நாடுகள், நரகத்தை நோக்கிப் போகும் உலகப் பொருளாதாரம், அமேரிக்காவை மிரட்டும் Martial Law ஆகியவை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  சவுதி அரேபியாவில் நடக்கும் சண்டையையும், உக்ரேன், சிரியா பற்றிய செய்திகளை படிக்கும் போதே மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டு இருப்பதை அறியலாம்.

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் படித்து பார்த்தீர்களேயானால், அணு ஆயதங்களையும், டாங்கிகளையும் கொண்டு நடக்கும் போராக இருக்காது.  அது தண்ணீர்ப் பஞ்சத்தினால்  நடக்கக் கூடியது.  உணவு உற்பத்தியை அழிக்க நடக்கக் கூடியது.  இந்த இடத்தில் ஒன்று நமக்கு புரியவில்லை, ஏன் மனிதர்களை அழிக்க வேண்டும்.   இதை அறிந்து கொள்ள புதிய உலக ஒழுங்கு New World Order என்றால் என்ன?  Illuminati இல்லுமினாட்டி என்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?  உலகை எவ்வாறு ஒரு சிலர் ஆட்டிப் படைக்கிறார்கள்?  என ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க புதுப் புது முடிச்சுகள் மர்மங்கள் திறந்து கொண்டே இருக்கும்.   இல்லுமினாட்டி பற்றிய எனது கடந்த ஒரு மாத தேடலில் Chemtrail பற்றி அறிந்து கொண்டது தற்செயலான ஒன்று.  மொத்தத்தில் ஜனத்தொகையை எந்தெந்த வழிகளிலெல்லாம் குறைக்க முடியுமோ அவைகளைக் கையாளுவது.  HIV, Ebola, Zika வைரஸ்கள் மட்டும் போதுமா?  மனிதனை அழிக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், கொத்துக் கொத்தாக கொல்லும் ஆயுதங்கள் போன்றவை வெளியில் விவாதிக்கப்படும் அளவு Chemtrails பற்றிய பேச்சே எடுக்கப்படுவதில்லை.  விக்கிபிடீயா Chemtrail ஒரு சதிக் கோட்பாடு என்றே அறிமுகம் செய்கிறது.  அது யார் செய்கிற சதி என்பதே கேள்வி.

உலகில் பல்வேறு சதிக் கோட்பாடுகள் Conspiracy Theories உள்ளன.  நிலவில் மனிதன் கால் வைக்கவே இல்லை, நாம் இந்த கிரகத்தை சேர்ந்தவர்களே இல்லை, டார்வின் பரிணாம அறிவியலே டுபாக்கூர், வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட உலகப் போரை பற்றிய தவறான தகவல்கள், தடுப்பூசியின் உண்மை நோக்கம் என நீண்டு கொண்டே செல்கிறது.  Chemtrailsசும் பத்தோடு பதினைந்தான சதிக் கோட்பாடு என கடந்து சென்றுவிட முடியாது.  இதைப் பற்றிய உண்மைகளை உலகெங்கிலும் இருக்கும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் நிரூபித்து விட்டனர்.   இன்னும் நம் காதுகளுக்குத்தான் வந்தடையவில்லை.  யாராவது சொன்னால்தானே நமக்கும் தெரியும்.  மானாட மயிலாட பார்ப்பதற்கும் சூப்பர் சிங்கருக்குமே நேரம் போதவில்லை.  குழந்தைகளுக்காவது பாடப் புத்தகத்தில் சொல்லித் தருகிறார்களா? அதுவும் இல்லை.   நமக்கு ஊட்டப்பட்ட வரலாறுகள், அறிவியல், மருத்துவம், அரசியல், புரட்சி, மதம் என அத்தனையிலும் உண்மை நிறம் காட்டப்படுவதில்லை, அத்தனையும் திணிக்கப் படுகிறது என்பதே உண்மை.

1958ல் வெளிவந்த ஒரு புத்தகத்திலிருந்து

வானிலையை ஆயுதமாக பயன்படுத்தத் தெரிந்த நாடே ஹைட்ரஜன் குண்டுகளைவிட அதிக வல்லமை கொண்ட வல்லரசாக இருக்கும்.

தற்போது உள்ள அறிவின்படி (1958ல்) ஏழு வழிகளில் வானிலையை உலகளவில் மாற்ற முடியும்

*   ராக்கெட் மூலமான புகை மேகங்களைக் கொண்டு பூமியில் விழும் சூரிய சக்தியை கூட்டவோ குறைக்கவோ இயலும்
*   அயனிமண்டலத்த்தில் (ionosphere) எலக்ட்டரான் வெடிப்புகளின் மூலம் அதன் மின் சக்தியை மாற்ற இயலும்
*   கட்டுப்படுத்தப்பட்ட வெப்பாற்றல் (thermonuclear) மூலம் வான்வெளியின் வெப்பத்தை அதிகரிக்கலாம்
*   வானில் பிரதிபலிப்பான்களின் மூலம் பூமியில் விழும் சூரிய ஒளியின் தாக்கத்தை அதிகரிக்க இயலும்
*   வெப்பத்தை உறுஞ்சும் பொருட்களை பனித் துருவப் பகுதிகளில் தெளிக்கலாம்
*   கடற்பரப்பின் மேல் சாயம், எண்ணை, தாவரங்கள் மூலம் அதன் பிரதிபலிக்கும் தன்மையை மாற்ற முடியும்
*   சமுத்திரங்களின் மேல் இரசாயண பொருட்களை தூவி ஆவியாதலை குறைத்து மழையைத் தடுக்க முடியும்மேலுள்ள புத்தக பக்கத்தினை முழு அளவில் பார்க்க/படிக்க
http://www.geoengineeringwatch.org/wp-content/uploads/2015/10/GeoengineeringWatch-magazine1-.jpg


சரி இயற்கையை மனிதன் வெல்ல முடியுமா?  ஒருநாளும் இயலாது.  இருந்தாலும் முயற்சியை விட்டுவிட முடியுமா.  பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடுத்து கடவுளாக நினைக்கிறான்.  அதற்குத் துணையாக ஏற்கனவே தன்னை மிஞ்சியிருக்கும் ஒரு சக்தியை துணைக்கு அழைக்கிறான்.  நன்மையை விரும்பும் இறைவனோ அனைத்து ஜீவராசிகளுடன் நம்மை இசைந்து வாழச் சொல்கிறான்.  அதற்கு நேரதிர் சக்தியே அனைத்தையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும்.  அதற்கு அசுரர்கள், ஏலியன்கள், சாத்தான், லூசிபர், தஜ்ஜால், இல்லுமினாட்டிகள் என அவரவருக்கு தோன்றும் பெயரை வைத்துக் கொள்ளுங்கள்.   புவி வெப்பமயமாதல், ஓசோன் ஓட்டை, எல் நினோ, சுனாமி, வரலாறு காணாத வறட்சி, சென்னையில் வந்ததுபோன்ற பெருமழை, நிலநடுக்கம் என  நூற்றுக்கணக்கான அன்றாட செய்திகளை கடந்து செல்கிறோம்.   இயற்கையாய் நடப்பது கொஞ்சம் என்றால் செயற்கையாய் பேரழிவுகளை ஏற்படுத்துவது அதிகம் நடக்கிறது.  எங்கப்பா பாமர மொழியில் சொல்லுவார் “தீடீர் தீடிருன்னு ப்ளேட்டு நவறுதுங்குறானுவோ, நிலநடுக்கம் வருதுங்குங்குறானுவோ எவன் எவன் எங்க அணுகுண்டு சோதனை நடத்துறான்னு தெரியில.. அதையெல்லாம் யாரு பார்த்துக்கிட்டு இருக்கா?”  இதே கேள்விகள் நமக்கும் எழுந்திருக்கும்.  மாணவர்களின் தெய்வம் இரமணன் ஐயாவையும், சினிமா புகழ் இடி அமீனையும் நினைத்துக் கொள்வதே நம்மில் பெரும்பாலானோர் அறிந்த வானிலை அறிவு.  இயற்கையின் அறிவு பெற்றிருந்த நம் முன்னோரே மனிதகுலத்திற்கான நல்ல வழிகாட்டிகள்.  கழுத்தில டையையும், வாயில் பொய்யையும் வைத்திருக்கும் மேற்குலக மேதாவிகளின் விபரீத விளையாட்டு உலகிலுள்ள அனைவருக்கும் சமாதி கட்டிவிடும்.  அவர்கள் எதிர்பார்ப்பதும் அதையேதான்.அறுபதுகளின் தொடக்கத்திலேயே வானிலையை கட்டுப்படுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு விட்டனர்.  இப்போது அதன் முன்னேற்றங்களை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் தூக்கம் தொலைத்து விடுவோம்.   பனி உருகுகிறது, எல்-நினோ பஞ்சத்தை கொண்டு வருகிறது என நமக்கு சொல்லப்பட்டது மட்டும்தான் தெரியும், அவை தானாக நடக்கிறதா நடபிக்கப் படுகிறதா என்பது அனைத்தையும் படைத்தவனுக்கே வெளிச்சம்.


பூமியை பலாத்காரம் செய்யும் Chemtrails பற்றி நிறைய இணையத்தில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்.  முடிந்தவரை மற்றவருக்கு சொல்லுங்கள்.  சில உண்மைகள் வாழ்க்கைப் பயணத்தையே திசை திருப்பிவிடும்.  அது நல்ல திசையாக இருக்க வேண்டுமென்று ஏக இறைவனைப் பிரார்த்திப்போம்.

இணைப்புகள்

8 கருத்துகள் :

 1. Chemtrails என்ற சொல்லையும், அதன் பயன்பாட்டையும் தங்களது இப்பதிவு மூலமாகவே அறிந்தேன். மிகவும் பயனுள்ள, எச்சரிக்கின்ற பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றை அழகான தமிழில் தந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகை சிறப்பு சேர்க்கிறது.

   நீக்கு
 2. இந்த உலகத்திலே ஏற்கனவே இருக்கும் பல பிரச்சனைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை இப்ப இந்த Chemtrails வேறையா! அறிவியல் என்னும் கத்தி ஆக்கதிற்கு விட, அழிவிற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பச்சைநாடா வாழைப்பழம் இருந்த இடத்தை இப்போது மஞ்சள் கலரில் பெங்களூரு வாழைப்பழம் ஆக்கிரமித்துக்கொண்டது. அதனைச் சாப்பிடுபவர்களுக்கு தொண்டையில் வலி, அலர்ஜி, இனம்புரியாத தொந்தரவுகள் போன்றவைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். பழுத்த வாழைப்பழம் இரண்டு நாள்களுக்கு மேல் இருந்தால் அழுகிவிட வேண்டும் ஆனால் இந்த வாழைப்பழம் இரண்டு மாதம் ஆனாலும் ஆழுகாமல் அப்படியே இருக்கிறது. பி.டி கத்தரிக்காயைப் போல இது பி.டி வாழைப்பழம். குடிநீர்குழாயில் வரும் தண்ணீர்தான் பாதுகாப்பானது என்று ஆய்வாளர்களே சொல்லியும் கூட மக்கள் கேன்வாட்டரைத்தான் வாங்கி குடிக்கின்றனர். 3-வயது குழந்தை பள்ளிக்கு கொண்டு போகும் சாப்பாட்டிலிருந்து 30-வயது இளைஞர் அலுவலகத்துக்கு கொண்டு போகும் சாப்பாடு வரை அனைத்தும் பிளாஸ்டிக் டாப்பாவில்.

  எஸ்.ராமகிருஷ்ணனின் 'உணவு யுத்தம்' புத்தகத்தைபடித்தால் இதயம் படபடக்கிறது. எந்த அறிவியல் கண்டுபிடிப்பு கண்டுபிடித்தாலும் அது ஆக்கத்திற்கு விட அதிகமாக அழிவுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஐன்ஸ்டீனின் சூத்திரம் அணுகுண்டுக்கு வித்திட்டதுபோல. மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பது நம் மரபணுவிலேயே ஊறி விட்டது என நினைக்கிறேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்ய துணிகின்றனர். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களில்தான் இதைப் போன்ற செய்திகளைச் சொல்லி புனைவுகளை திரைப்படமாக எடுப்பார்கள். ஆனால் உண்டமையிலேயே அந்த படத்தில் காண்பிப்பதெல்லாம் நடந்துவிட வாய்ப்பிருக்கிறதோ என பயமாக இருக்கிறது. உலக வல்லரசு நாடுகள் இந்தியாவை சந்தையாகத்தான் இன்னும் பார்க்கின்றனர். அண்மையில் பெரம்பலூர் புத்தக் கண்காட்சியில் பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்(https://www.youtube.com/watch?v=z2P-i6BIpxg) தண்ணீருக்காகத்தான் இந்தியா சூரையாடப்பட்டு வருகிறது என்பதை விளக்கி கூறினார். அவர் கூறியதில் சில, காட்டன் ஆடைகளுக்காக திருப்பூரில் பயன்படுத்தப்படும் தண்ணீர், சூ, கார் இதுபோன்ற இன்னும் எத்தையோ பொருட்கள் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது அதை அமெரிக்க போன்ற நாடுகள் செலவு செய்யாமல் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு, இந்தியா போன்ற நாட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி அந்த பொருட்களை தயார் செய்து பெற்றுக்கொள்கின்றனர்.

  இராசயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இவையெல்லாம் நம் மண்ணை மடலாக்கி பல வருடங்கள் ஆகிறது. நம் காலத்திலேயே எண்டோசல்பான் தெளித்ததால் கேரளாவில் பிறந்த குழந்தைகளைப் பார்த்தோமே. அதற்கு யார் பொறுப்பேற்பது.

  கல்விக்கூடங்கள் எல்லாம் மனிதனை பணம் கொடுக்கும் இயந்திரங்களாக வடிவமைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த இயந்திரங்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பாசம், பற்று, மொழியைக் காக்க வேண்டும், மண்ணைக் காக்க வேண்டும், சமுதாயத்தைக் காக்க வேண்டும், மனிதன் மீது அன்பு செலுத்த வேண்டும், உயிரினங்கள் மீது அன்புச் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி? பணம் கிடைத்தால் அந்த இயந்திரங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யும். இயந்திரங்களாகிவிட்டப் பிறகு இயந்திரத்திற்கு பாசம் தெரியுமா பற்று வருமா?

  //மானாட மயிலாட பார்ப்பதற்கும் சூப்பர் சிங்கருக்குமே நேரம் போதவில்லை. குழந்தைகளுக்காவது பாடப் புத்தகத்தில் சொல்லித் தருகிறார்களா? அதுவும் இல்லை. நமக்கு ஊட்டப்பட்ட வரலாறுகள், அறிவியல், மருத்துவம், அரசியல், புரட்சி, மதம் என அத்தனையிலும் உண்மை நிறம் காட்டப்படுவதில்லை, அத்தனையும் திணிக்கப் படுகிறது என்பதே உண்மை.
  //

  அண்ணன் பாவலர் அறிவுமதி கூறியது போல இந்த தொலைக்காட்சிகள் திரைப்படங்கள் தமிழர்களுக்கு காட்ட வேண்டிய செய்திகள் வேறு, காட்டிக்கொண்டிருக்கும் செய்திகள் வேறு(https://www.youtube.com/watch?v=KhqbsMD2YJI)
  மேலே நீங்கள் சொல்லியிருக்கும் சூப்பர் சிங்கர்..... கருத்தில் நான் 200% உட்படுகிறேன். உங்கள் போன்றவர்கள் என்னைப் போன்றோர்களுக்கு இதுபோன்ற ஆபத்துகளைக் கூறிக்கொண்டேயிருங்கள் அப்படியாவது நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களில்தான் இதைப் போன்ற செய்திகளைச் சொல்லி புனைவுகளை திரைப்படமாக எடுப்பார்கள்.
   நூறு சதவீதம் உண்மை கதிர்வேல். திரைபடங்கள் மட்டுமல்ல குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்கள் மூலமாகவும் நடப்பிக்கப்போவதை சொல்லியே செய்கின்றனர். உலகிலுள்ள அனைத்து மீடியாக்களையும் ஒருசில தீய நிறுவனங்களே ஆளுகின்றன. இது நம்மூர் விஜய் டிவி என நினைத்தால் நாம் முட்டாள்கள். அதன் கனிசமான பங்குகள் Fox Media வசம் உள்ளது. நல்லதை ஒளிபரப்பவே மாட்டனர். நாம்தான் விழிப்புணர்வுடன் இருந்து மற்றவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

   நீக்கு
  2. http://www.vinavu.com/2011/12/21/rupert-murdoch/
   http://www.vinavu.com/2011/09/20/murdochisation-of-the-indian-media/

   இந்த இரண்டு கட்டுரைகளில் மீடியாக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? என தெளிவாக இருக்கிறது. வினவு தளத்தில் சொல்லப்படும் செய்திகளில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்துக்கள் உண்டு என்றாலும் சில செய்திகளை நம்மால் அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியவில்லை. VIJAY TV யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் 99% மண்டைக்குள் குப்பைகளையே அள்ளிக்கொட்டிக் கொண்டிருக்கின்றது.

   நீக்கு
  3. நானும் எங்கயோ படிச்ச் ஞாபகம் இந்திய அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்ச்சிகள் கனிசமான பங்குகள் ரிலையன்ஸ் வசம் உள்ளது என்று.

   நீக்கு
 3. ஜெட் விமானம் பறக்கையில் அதன் பின்னே வழித்தடம் போல தெரியும் புகை மண்டலம், வேகம் காரணமாக காற்று மூலக்கூறுகள் சட்டென்று வெப்பமாவதால் ஏற்படும் மாயத் தோற்றம் என்று எங்கோ படித்த ஞாபகம் . ஆனால் நீங்கள் புதிய செய்தி கொடுத்திருக்கிறீர்கள் . chemtrail கேள்விப்படாத ஒரு புதிய விஷயம் . தெரியப்படுத்தியமைக்கு நன்றி .

  எத்தனை வழிகளில் இந்த பூமியில் உள்ள உயிரினங்களை அழிக்கலாம் என்று மனிதனே சிந்தித்துக் கொண்டிருக்கிறானே ! இந்த அசுரர்கள் வானிலை மாற்றம் என்ற பெயரில் ஹைட்ரஜன் குண்டை விட மோசமான விசயத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் பயமுறுத்தும் செய்தி .

  அறிவுறுத்த வேண்டிய ஊடகங்கள் மக்களை அறிவிலிகளாக வைக்கத்தான் பொழுது போக்கு என்ற பெயரில் சீரியல்களையும் சினிமாக்களையும் புகுத்திக் கொண்டு தங்களின் பணப்பைகளை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன .

  தங்களின் இந்தப் பதிவு அறிவுப் பூர்வமாகவும் அறிவியற் பூர்வமாகவும் அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chemtrails என்பது வேதியல் தெளிப்புக்கு பின் தெரியும் தடம் மட்டுமே. ஒட்டுமொத்தமாக வானிலையை மாற்ற HARP தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வேதித்தடங்கள் அதில் ஒரு பகுதி மட்டுமே. செயற்கையாய் பூகம்பம் போன்ற எந்த சீற்றங்களையும் வரவழைக்க முடியும். உலகம் போற போக்கு ஒன்னும் சரியில்லை. காளி/கலி யுகமாச்சே (விவிலிய இறுதி நாட்கள்/ வெளிப்படுத்தல் அதிகாரம்), அழிந்தே தீரும்.

   நீக்கு