ஏப்ரல் 21, 2010

மேக் ஓ.எஸ்10.6ல் யுனிகோட் தமிழ்

      
         அண்மையில் என் நண்பருடைய மேக் மினி இயக்கிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.     அதில் மேக் ஓஎஸ் 10.6 நிறுவப்பெற்றிருந்தது.   அதில் தமிழுக்கென எந்த எழுத்துரு இருக்கிறது என்று ஆவலாய்த் தேடிப் பார்த்தேன்.

விண்டோசில் தமிழுக்கு லதா ஒருங்குறி எழுத்துரு Latha.ttf இருப்பதுபோல மேக் இயங்கு தளத்தில் இணைமதி Inaimathi.ttf இருக்கிறது.
இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, தமிழை உள்ளிட அஞ்சல்(phonetic) மற்றும் ஒலியியல் தமிழ்99(Tamil99) விசைப்பலகைகளை Mac osX தன்னியல்பாக(by default) பெற்றிருப்பதுதான்.IME-Input Method Editorஆக இருப்பதால் விண்டோஸில் NHM Writerரை பயன்படுத்துவது போல மேக்கிலும் பயன்படுத்தலாம்.  நேரடியாக நம் ஆவணங்களிலும்(.txt, .doc...) இணைய பக்கத்திலும் எளிதாய் தமிழை உள்ளிடலாம்.

தற்போது வெளிவரும் புதிய லினக்ஸ் வகைகளிலும் இதே வசதி இருக்கிறது.   விண்டோசிலும் இதுபோன்று உட்பதிந்து(bundled) வந்தால் இன்னும் பல அறிவு களஞ்சியங்களை தமிழில் பெற முடியும்.

தமிழை தட்டச்சு செய்து காண்பித்ததும் நண்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லைஇன்னும் யாரும் பயன்படுத்தாத Inscript Layoutஐ மட்டும் தன்னியல்பாக பெற்றுவரும் விண்டோஸின் பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

NHM Writer, e-kalappai...போன்ற மென்பொருட்கள் விண்டோசுக்கு கிடைத்திருக்காவிட்டால் இவ்வளவு தமிழ் வலைப்பதிவுகளை படிக்க நமக்கு வாய்த்திருக்காதுஇனிமேலாவது தமிழ் மென்பொருட்களை குறிப்பிட்ட ஓர் இயங்குதளத்திற்கென உருவாக்குவதில்லை என உறுதி கொள்வோம்.


பின்குறிப்பு: 
இந்த கட்டுரை கண்ணைக் கவரும் மேக் இயங்குதளத்தில் கட்டற்ற மென்பொருள் வரமான ஓப்பன் ஆபிஸ் உதவியுடன் எழுதப்பட்டது.  

ஆங்கிலத்தைப் போல மற்ற மொழிகளையும் எளிதாய் பயன்படுத்த உதவும் யுனிகோட் வாழ்க. தமிழை தட்டச்சு செய்யும் எளியமுறை வாழ்க வாழ்க.   

6 கருத்துகள் :

 1. பெயரில்லாஏப்ரல் 21, 2010

  //தமிழை தட்டச்சு செய்து காண்பித்ததும் நண்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.//

  இருக்காதா பின்னே? தாய்மொழியாச்சே.
  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. இன்னும் நிறைய பேருக்கு கணினியிலும் தமிழை எளிதாக பயன்படுத்தலாம் என்பது தெரியாமலேயே இருக்கிறது. என்னால் முடிந்தவரை நண்பர்களை ஊக்கப்படுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. // இன்னும் யாரும் பயன்படுத்தாத Inscript Layoutஐ மட்டும் தன்னியல்பாக பெற்றுவரும் விண்டோஸின் பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.//
  லினக்ஸுடன் விண்டோஸை ஒப்பிடும் பொழுது பெருமையாக சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை

  //NHM Writer, e-kalappai...போன்ற மென்பொருட்கள் விண்டோசுக்கு கிடைத்திருக்காவிட்டால் இவ்வளவு தமிழ் வலைப்பதிவுகளை படிக்க நமக்கு வாய்த்திருக்காது.//

  கண்டிப்பாக நண்பரே நீங்கள் கூறுவது உண்மை

  // இனிமேலாவது தமிழ் மென்பொருட்களை குறிப்பிட்ட ஓர் இயங்குதளத்திற்கென உருவாக்குவதில்லை என உறுதி கொள்வோம்.//

  தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழை வளர்ப்போம்.

  பதிலளிநீக்கு
 4. //தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழை வளர்ப்போம்.

  நம்மை இணைக்கும் இணையத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மிக்க மகிழ்ச்சி. உங்கள் கட்டுரையை 'செந்தழல் ரவி' அண்ணா அனுப்பினார்கள். அதைப் படித்தபின்புதான் 'Inaimathi.tff" பற்றி தெரிந்துகொண்டேன். இப்போது அதை நிறுவியபின் எனது மேக்புக்கில் தமிழ் எழுத்துக்கள் கட்டம்கட்டமாக இல்லாமல் தெளிவாகத் தெரிகின்றன. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு