அக்டோபர் 18, 2015

வலைப்பூ நமது தொடக்கமென்றால் முடிவு விக்கிபீடியாவில் இருக்கட்டும்

2015 வலைப்பதிவர் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற விக்கி மீடியா-இந்தியா திட்ட இயக்குநர் திருமிகு அ. இரவிசங்கர் அவர்கள் விக்கிபீடியாவில் எழுதவதற்கும் வலைப்பூக்களில் எழுவதற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைத்தார்.   வலைப்பூக்களில் எழுத எல்லையற்ற சுதந்திரம் இருக்கிறது.  யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  விக்கிபீடியா களஞ்சியம் ஒரு முறைபடுத்தப்பட்ட அமைப்பு.  எப்படி பின்னூட்டங்கள் வலைப்பூவின் ஆசிரியர் மட்டறுத்தலுக்கு (comment moderation) பின் வெளியிடப்படுகிறதோ, விக்கிபிடீயாவில் எழுதப் படும் கட்டுரை அதன் தர நெறிமுறைகளுக்கு இருந்தால் மட்டும்தான் வெளியிடப்படும்.  வலைப்பூவின் ஆசிரியர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்து எந்தெந்த பின்னூட்டங்கள் வெளிவர வேண்டும் என முடிவெடுக்கலாம்.  விக்கிபிடீயாவில் கட்டுரைகளை நெறிபடுத்தும் வல்லுனர் குழு பெரும்பாலும் நன்கு கற்றறிந்த சான்றோர்களாகவே இருக்கின்றனர்.  விக்கிபிடீயாவில் எழுதும் அறிஞர் பெருமக்களுக்கு  முனைவர். ஜம்புலிங்கம் ஐயா போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

பதிவர் அறிமுகத்தில் இணையம் ஒரு பெரும் குப்பை என்றேன்.  பதிவர் அறிமுகம் என்கிற பகுதியில் வேறு செய்திகளைப் பேசுவது முறையில்லை என்றாலும், இணையத்தேடலில் தமிழின் நிலை அதிகமானவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றே சொன்னேன்.  ஒருவேளை இந்த பதிவு முன்னமே எழுதியிருந்தால் அதையும் பேசியிருக்க மாட்டேன்.  மற்ற பதிவர்கள், விழாக் குழுவினர் மன்னித்தருள வேண்டும். 

இந்தப் பதிவின் முன்னோட்டத்தை வலைப்பதிவர் திருவிழா காணொளியில் 01:21:30 லிருந்து 01:23:30 வரை காணலாம்.


எழுத்தாளர் திருமிகு எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றுகையில் நூலகத்தில் ஒன்றைத் தேடிப் படிப்பதற்கும் இணையத்தில் தேடிப் படிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகக் கூறினார்.   இணையத்தில் ஒன்றைத் தேடும்போது பெரு வெள்ளத்தில் அடித்து வரப்படும் செத்தை, குப்பை போன்ற அனைத்தையும் அள்ளி வரும்.  கழனிகளை செம்மைபடுத்தும் கனிமங்களும் அதில்தான் வருகிறது.  எல்லாவற்றையும் வலைப்பூவில் எழுத வேண்டாம் என்றும், மின்னூலாகவும் எழுதுங்கள் என்ற வேண்டுகோளை விடுத்தார்.

மாணவர்கள் மத்தியில் விக்கிபீடியா போன்று மின்னூல்கள் இன்னும் சென்றடையவில்லை.   சிலேட்டு பலகைக்கு மாற்றாக ஐபேட், ஆண்டராய்ட் டேப்லட் போன்றவை பெருகும்போது மின்னூல்களின் தேவையும் அதிகரிக்கும்.  அதுவரை மின்னூல் என்றால் நமக்கு அமேசான் கிண்டுலும் (இது ஒரு டிஜிட்டல்/மின்னூல் புத்தகங்களை படிக்கக் கூடிய சாதனம்) ePubம் நினைவிற்கு வராது, நம்மை பொறுத்தவரை கணினியில் சேமித்து பின்னர் படிப்பதற்கு உதவும் pdf கோப்பே மின்னூல்.

மின்னூலாக வெளியிடுவதில் உள்ள குறை, வலையில் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருங்குறி தகுதரம் (யுனிகோடு UTF-8, UTF-16) போன்ற ஒன்றை பயன்படுத்தாவிட்டால் அதில் தகவல்களை தேடிப் படிப்பது சிரமமாகிவிடும்.   நீங்கள் ஒரு pdf மின்னூலை உருவாக்க உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு அழகான எழுத்துருவை பயன்படுத்துவீர்கள்.  நான் ஒன்றை பயன்படுத்துவேன்.  இதில் தகவல் தேடலுக்கான ஒருமித்த மென்பொருளை யார் எழுதுவது?  உங்களிடம் இருக்கும் தமிழ் pdf நூல்களை தேடிப் பாருங்கள், உணர்ந்து கொள்வீர்கள்.  

இணையத்தில் தமிழில் படங்களை ( தமிழில் வெளிவந்த திருட்டு விசிடி புதுபடமென நினைத்துக் கொண்டால் வருந்துகிறேன் : ) தேடும் நிலை குறித்த அருமையான கட்டுரையை கீதமஞ்சரி வலைப்பூவில் படிக்கக் கோருகிறேன்.

வலைப்பதிவர் திருவிழாவிற்காக தமிழ் இணையப் பல்கலைகழகம் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை
தேடுவோம் கண்டடைவோம் http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_28.html

இனி எழுத்து விளக்கங்களை விட, ஓராயிரம் பக்க விளக்கங்களை மௌனமாக விளக்கும் சில படங்களைக் காண்போம்.

கூகிள் தேடலில் அக்டோபர் 18, 2015 அன்று எனது தேடலுக்கு விடையாகக் கிடைத்தவை.

எச்சரிக்கை:  கீழுள்ள படம் மிகுந்த ஆபாசமான தேடல் விடையைக் கொண்டது. 
அம்மா, அந்த களங்கமில்லாத சொல்லிற்கும் சகிக்க முடியாத ஆபாசத்தை ஊட்டிய வலைப்பதிவுகளின் தொகுப்பு.  மாணவர்கள், தாய்மார்கள் படத்தை பெரிது படுத்தி பார்ப்பதை தவிர்க்கவும்.Sponsored content.  முதல் பக்கங்களில் வரும் தேடல் விடையனைத்தும் நாம் தேடுபவையாக இருக்காது.  ஆங்கிலத்தில் தேடுவதும் இதற்கு விதிவிலக்கல்ல.  தமிழில் தேடுவதைவிட ஆங்கிலத்தில் தேடுபவை பரவாயில்லை.


விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை தேடல் பொறிகள் முன்னிலைப் படுத்தும்.  நல்ல கட்டுரைகளை விக்கிபீடியாவில் எழுதுவோம்.


விடைகள் எப்படி வருகிறதேன்று விக்கிபிடீயாவை தேடிப் பார்ப்போம்.  அடடா, அடடா அற்புதம்!!!முதலில் விக்கிபிடீயாவில் தேடு என தேடல் பொறிக்கு அறிவுருத்தலாம்.  அட இது கூட நல்லாதான் இருக்கு.அறுவருப்பான தேடல் விடைகளால் நாம் நொந்து கொள்ள வேண்டியது தேடல் பொறிகளை அல்ல.  தேடல் பொறிகள் இணையத்தின் கொடை.  நல்ல தேடல் விடைகள் வர நல்ல நல்ல பதிவுகளை அதிகம் பதிவிடுவோம்.   தனிமத தாக்குதல்களையும், சாதி சமய பிரிவினைகளை ஏற்படுத்தும் வலைதளங்களையும், காமத்தை கொச்சை படுத்தும் தளங்களையும் புறக்கனிப்பதன் மூலம் நம்மால் ஆன சிறிய பங்களிப்பை செய்ய முடியும்.  பெரிய பங்களிப்புக்கு விக்கிபிடீயாவில் எழுதலாம்.


- வாழ்க வளமுடன்

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்

புதுக்கோட்டையில் இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு 2015 விழா குறித்து அனேக பேர் தத்தம் வலைப்பூவில் குறிப்பிட்டிருப்பீர்கள்.  தங்களால் இயன்ற நன்கொடையும் அனுப்பி வைத்திருப்பீர்கள்.  விழா பிரமாண்டமாக நடந்தது என்பது கலந்து கொண்டவர்களுக்கும், காணொளியை (வீடியோ) இணையத்தில் கண்டவர்களுக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இணையத்தில் அண்மை காலமாக பதிவுகளைப் படிக்காத நிறைய பதிவர்களுக்கு இப்படியொரு விழா நடந்ததே தெரிய வாய்ப்பில்லை.   விழா தொடங்குவதற்கு முன்னர் விழா அழைப்பிதழ்களை நம் வலைப்பூக்களில் ஒட்டி மகிழ்ந்தோம்.  விழாவிற்கான செலவு வரவைவிட அதிகமானதால்,  மன்னிக்கவும்.  செலவைவிட வரவு குறைவானதால் உரிமையுடன் விழாக் குழுவினர் நம் உதவிகளை நாடுகின்றனர்.   நம்மால் ஆன சிறு துரும்பு உதவியாகினும் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.

குசும்பு:  பதிவர்களின் உரிமையை மீட்க கட்சி ஆரம்பித்தாலும் வியப்புற ஒன்றுமில்லை

  


விழா குழுவினர்கள் அல்லும் பகலும் விழாவுடைய வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.  ஒரு சில குறைகளென அவரவருக்கு தோன்றினாலும், ஒரு நிமிடம் சொந்த விருப்பு வெறுப்பையெலாம் ஒதுக்கிப் பார்த்தால் நமது குறை பெரிதாகவே தெரியாது.   குறை என்ற ஒன்று சொல்ல வேண்டுமே என்பதர்க்காக சொல்கிறேன், கலந்து கொண்ட அனைவருக்கும் இருந்த பெரிய குறை ஒருநாள் போதாது என்பதே அது.   ஒரு நாளைக்கே, அனைத்தையும் செம்மையுற செய்ய எவ்வளவு திட்டமிடல், உழைப்பு, அவரவர் நேரம், நிதி அத்தனையும் வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  முதல் நாளே சென்றதால் ஒரு சில ஐயப்பாடுகள் விழாக் குழுவினரிடம் இருந்ததை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அனைவரையும் மேடையேற்ற நேரமிருக்காது என்பதே அது.  அதற்கு அவர்கள் கண்ட முதல் தீர்வு விழா குழுவினர்களுக்கு அறிமுகம் தேவையில்லை எனும் தீர்மானம்.  பதிவர் அறிமுகத்தில் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டால் கூட (300 நிமிடங்கள்) பதிவர் அறிமுகத்துக்கே 5 மணி நேரம் போதாது.  நான் எனது அறிமுகத்திற்கு மேடையில் இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டேன் என்பது வேறு சேதி (ச்சை இதெல்லாம் ஒரு பொழப்பு… திட்டுங்க வாங்கிக்கிறேன்).விழா குழுவினரில் பலர் வேலைக்கு விடுப்பு எடுத்து, சொந்த அலுவல்களையெலாம் ஒதுக்கி வேலையை அல்ல, சேவையை செய்திருக்கிறார்கள்.

சனிக்கிழமை இரவு திண்டுக்கல்லில்  இருந்து வந்திருந்த தனபாலன் ஐயா (திண்டுக்கல் புதுக்கோட்டைக்கு அருகாமை மாவட்டமோ இல்லையோ, அந்த ஊர் பெரியவர் ஒருவர் :) அனைவர் மனதிற்கும் அருகாமையில் இருப்பவர்) அவரிடம் கேட்டேன் “என்ன காலையிலேயே வந்துட்டீங்களா???”, “யப்பா, அவரு நேத்தே வந்துட்டாருப்பா..” என ஒரு குரல்.


முதல் நாள் இரவு விழாக் குழுவினரின் மொத்த கவலையும், அனைவரையும் திருப்தி படுத்துவது எப்படி என்ற கேள்வியாகவே இருந்தது.  நம்மில் ஒருவராலும் எல்லோரையும் நிறைவு செய்ய இயலாது.  அதற்கு முயற்சித்தால் தோற்று விடுவோம் என்பது வாழ்க்கை விதி.கையேட்டிற்கு எழுதி அனுப்பிய தகவல்கள், கையேட்டில் இடம் பெறவில்லை என ஒருவர் (ஒருவரல்ல, இன்னும் பலர்) வருத்தம் கொண்டிருந்தார்.  இரத்திணச் சுருக்கமாக இருந்த குறைந்த அளவு அறிமுகத்திற்கே இவ்வளவு பக்கங்கள் வந்திருக்கிறதென்றால், நீட்டி இழுத்திருந்தால் தயாரிப்பு செலவுகள் இன்னும் ஏறியிருக்கும்.

போனது போகட்டும், விழா அழைப்பிதழ்களை பதிவேற்றிய நாம் விழாவிற்கான நன்கொடை அழைப்பையும் நம் வலைப்பூக்களில் பகிர்வோம்.

 படம் பார்த்து கதை சொல்லவும்.

கீழ்க்காணும் HTML வரிகளை தங்கள் வலைப்பூவில் சேர்த்துக் கொள்ளவும்
<a style="font-size:13pt" href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html">
 வலைப்பதிவர் திருவிழா - 2015</a>

<a href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_17.html">
    <img src="http://1.bp.blogspot.com/-y5ub3IXIFZI/Vh6ymRXIV3I/AAAAAAAAFR8/rFR982fpnW8/s1600/Guide%2Bwrapper.jpg"/>
</a>
 
நமது வலைப்பூக்களால் பயன் பெற்ற ஓரிருவர் பதிவர் கையேட்டை வாங்கினால் கூட, அடுத்த வருட விழா இன்னும் சிறப்பாக இருக்கும்.  அடுத்த வருடம் போட்டி போட்டுக் கொண்டு எந்த மாவட்ட (மாவட்டம் என்பதைவிட மண்டலம் என்பது மிக பொருந்தும்) பதிவர்கள் உழைக்க போகிறார்களோ தெரியவில்லை, ஆனால் வெற்றிகரமாக நடந்தி முடித்தவர்கள் சோர்வடைந்தால்… ச்சே நாமெல்லாம் என்னதுக்கு பதிவு எழுதுறோம் இல்ல வாசிக்கிறோம் (வசிக்கிறோம் குறில் அல்ல, வாசிக்கிறோம் நெடில்)