டிசம்பர் 09, 2011

தமிழுக்கு சொல்திருத்தி (Tamil Spellchecker) வந்தாச்சு


சொல்திருத்தி (Spell checker) எந்தவொரு மொழிக்கும் இன்றியமையாத ஒன்று.  வெவ்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு எழுது பொருட்களிலும் கையாளப்பட்ட மொழி இன்று கணினி மூலம் பயன்படுத்தப் படுகிறது.  

எழுத்து வடிவில் மொழியானது கணினி மூலம் பயன் கொள்ளப் படுகிறது (used by computer) எனவும் சொல்லலாம், கொல்லப் படுகிறது (killed by computer) எனவும் சொல்லலாம்.  அந்த அளவிற்கு பிழைகள் மலிந்து இணையத்தில் பயன்படுத்தப் படுகிறது.  ஆங்கில மொழியிலேயே ஆரம்பம் தொட்டு கணினி உருவாகி வருவதால், அந்த மொழிக்கு நல்ல சொல்திருத்தி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.  ஆங்கிலமல்லாத எழுத்துகளை திரையில் தோன்றச் செய்வதே பெரிய வேலையாக இருக்கிறது (எடு: அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் தமிழ் நன்றாகத் தெரிவதில்லை).  

இணையமே இளைஞர்களின் இல்லம் என்றாகிவிட்ட நிலையில், மொழியின் செழுமையைக் காக்க காலத்திற்கேற்ற கருவிகள் தேவைப் படுகிறது.  தமிழில் திறமூல மென்பொருட்களை 
(opensource tamil applications) உருவாக்கும் தமிழா குழுமம் தமிழுக்கு சொல்திருத்தி வெளியிட்டுள்ளது.

இந்த சொல்திருத்தி தன்னைப் பற்றி இவ்வாறாக கூறுகிறது.

" இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும்.

இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், 2009 ஆம் ஆண்டு,  அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஸ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர்.

2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார்.
 - தமிழா! குழுவினர். "

தற்போது நெருப்புநரி உலாவிக்கும் (firefox browser :)) லிபர் ஆபிஸ் (libreoffice ஓப்பன் ஆபிஸுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது) தொகுப்பிற்கும் நீட்சிகள் (extensions/plugins) கிடைக்கின்றது.


இவற்றை எப்படி நிறுவி இயக்குவதென அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் 06, 2011

நாலு கால் பாய்ச்சலில் ஜாவாஸ்கிரிப்ட்


ஜாவாஸ்கிரிப்ட் (javascript) கோடிக்கணக்கான இணையதளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்கிரிப்டிங் மொழி.  நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தால் 1995ல் வெளியிடப்பட்டது.  இதன் ஆரம்பகால பெயர் லைவ்ஸ்கிரிப்ட் (LiveScript) என்பதாகும்.  ஜாவா மொழியை உருவாக்கிய சன் மைக்ரோசிஸ்டம்ஸ் (Sun MicroSystems) நெட்ஸ்கேப் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், ஜாவா விளம்பர யுக்திக்காக லைவ்ஸ்கிரிப்டை ஜாவாஸ்கிரிப்ட் என பெயர் மாற்றியது.  மற்றபடி ஜாவாவும் ஜாவாஸ்கிரிப்ட்டும் இருவேறு துருவங்கள்.  இரண்டு மொழிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக வடிவமைக்கப் பட்டவை. 1996 நவம்பர் மாதத்தில் நெட்ஸ்கேப் நிறுவனம் இணைய தொழில்நுட்பங்களை தகுதரப்படுத்தும் (internet standards) ECMA அமைப்பிடம் ஒப்படைத்தது. ECMA நிறுவனம் ஜாவாஸ்கிரிப்ட்டை ECMAScript என பெயரிட்டது.  இவர்கள் மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் (Microsoft) சில மாற்றங்களை செய்து jScript என்றும், அடோப் (Adobe) நிறுவனம் ActionScript என்றும் ஆளுக்கொரு பெயர் வைத்தனர்.  ஜாவாஸ்க்ரிப்ட்டை மேம்படுத்துவதில் மொசில்லா (Mozilla) நிறுவனம் இன்று பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறது.இணைய பயன்பாடு பெருகிவிட்ட இக்காலத்தில் ஜாவாஸ்கிரிப்ட்டை வேகமாய் இயங்க வைக்க மைக்ரோசாப்ட், கூகிள், மொசில்லா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அதிவேக உலாவிகளை (browsers) பரிசளித்துள்ளன.  ஜாவாஸ்க்ரிப்ட் பெரும்பாலும் இணைய பக்க வடிவமைப்புகளில் (web page design) மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.  இன்று இணைய பக்கங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் டெஸ்க்டாப் (desktop) அப்ளிகேஷன்ஸ், விட்ஜெட்ஸ், ப்ரவுசர் ப்ளகின்ஸ் (browser plugins), சர்வர், டேட்டாபேஸ் என பல பரிமாணங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஜாவாஸ்கிரிப்ட்டை ஜாவா, சி, சி# போன்ற மொழிகளுடன் ஒப்பிடக் கூடாது.  பாதுகாப்பு கருதி பயனருடைய ஃபைல்களை (files) திறக்க முடியாது போன்ற அம்சங்களை மொழி அமைப்பிலேயே பெற்றிருக்கிறது.  இணைய பக்கங்களுக்கு வெளியேயும் (desktop, server side application) ஜாவாஸ்கிர்ப்ட்டை மென்பொருள் உருவாக்கத்திற்கு பயன்படுத்த CommonJS என்கிற திட்டம் செயல்படுகிறது.

சர்வர் தொழில்நுட்பத்தில் node.js திட்டம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது.  பின்புலத்தில் asp, php, servlet, python, ruby போன்ற மொழிகளுக்கு பதில் ஜாவாஸ்கிரிப்ட்டையே பிரவுசர் வேண்டுதல்களுக்கு (serving response from javascript itself) பயன்படுத்த முடியும்.  அதேபோல ஜாவாஸ்கிப்ட் டேட்டாவை சேமிக்க டாக்குமெண்ட் ஸ்டோர்களாகவும் பயன்படுகிறது.  MongoDB, CouchDB போன்ற NoSQL டேட்டாபேஸ்களை ஜாவாஸ்கிப்டுடன் பயன்படுத்தலாம்.  நீங்கள் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் ஆரம்பத்திலேயே jQuery ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரியையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செப்டம்பர் 20, 2011

JSPல் புரொகிராம் செய்யத் தொடங்குவது எப்படி?


ஜாவா புரோகிராமிங் மொழி வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.   வெப் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க ஜாவா platformல் JSP, Servlet போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன.  JSPயும் serveltம் தனி மொழிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.  இவை J2EE (specification)லிருக்கும் அம்சங்கள்.   J2EE என்பது Java 2 Enterprise Edition என்பதைக் குறிக்கிறது.  J2EE platform என்பது Servlet,jsp,java mail,ejb போன்ற பல்வேறு ஜாவா தொழில்நுட்பங்கள் சேர்ந்த தொகுப்பாகும்.  J2EEல் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஜாவா மூலமாக புரோகிராம் செய்கிறோம்.

ஒரு ஜாவா புரோகிராம் இயங்க, அந்தக் கணினியில் ஜாவா (JDK/JRE) நிறுவப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிவோம்.  அதுபோல jsp, servlet, asp, php... போன்ற தொழில்நுட்பங்களில் உருவாக்கும் புரோகிராம்கள் இயங்க வெப் சர்வர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  பெரும்பாலான புதியவர்கள் தவறு செய்வது இங்கேதான்.  இரட்டை க்ளிக் செய்து .html fileஐ ரன் செய்வது போல இயக்க முடியாது.  சர்வரில் பதிவேற்றி (deploy) இயக்க வேண்டும்.  எப்படி ஒரு இணையதளத்தை அணுக ப்ரவுசரில் அதன் முகவரியை சுட்டுகிறோமோ, நீங்கள் பதிவேற்றியிருக்கும் சர்வரின் முகவரியைக் கொடுக்க வேண்டும்.  அது உங்கள் கணினியிலேயே இருந்தால் localhost எனக் குறிப்பிடலாம் (எடு:  http://localhost:8080/myproject/login.html, http://localhost/xampp/test).

JSP மற்றும் Servlet நிரல்களை இயக்க பெரும்பாலும் Apache Tomcat எனும் சர்வரை பயன்படுத்துகின்றனர்.  இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் சர்வராகும்.  இது போன்ற சர்வர்களில் இயங்கக்கூடிய புரோகிராம்களை எக்லிப்ஸ், நெட்பீன்ஸ், விசுவல் ஸ்டூடியோ.net போன்ற IDEக்கள் மூலம் உருவாக்கலாம்.

ஜாவாவில் J2SE, J2EE, J2ME பிரிவுகளுக்கேற்ப எக்லிபிஸ் பதிப்பையும் பணிச்சூழலுக்கு தகுந்தற்போல பயன்படுத்தலாம்.  எடுத்துகாட்டிற்கு ஜாவா command line புரோகிராம், அல்லது டெஸ்க்டாப் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கு நிரலெழுத Eclipse For Java Developers போதுமானது.  வெப் அப்ளிகேஷன்ஸை உருவாக்க Eclipse For J2EE Development பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

   - தொடரும்
       

ஜூன் 12, 2011

நிரலை நிரலால் செய்துவிடல் - ப்ளாக்கரில் உங்கள் புரோகிராமை அழகாய் தோன்றச் செய்யலாம்

ஒரு நிரலை உங்கள் வலைப்பதிவில் காட்ட வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆங்காங்கே அந்த நிரல் மொழியின் கட்டளைகளுக்கேற்ப (நிரலிலக்கணம் program grammar) பல வண்ணங்களில் காட்டும்போது பார்க்க கவரும்படியாகவும், படிக்க எளிமையாகவும் இருக்கும். விசுவல் ஸ்டூடியோ, எக்லிப்ஸ், நோட்பேட்++... போன்ற மென்பொருட்களை நிரலெழுத பயன்படுத்தும்போது நிரலாக்கம் நமக்கு எளிமையாய் இருக்க இதுதான் காரணம்.

ப்ளாக்கரில் தன்னியல்பாகவே நிரல்களை எழிலாகக் காட்டும் வசதி இல்லை. நமக்கு வேண்டுமெனில் அதற்கான நிரல் நீட்சிகளை (plugins) சேர்த்துக் கொள்ளலாம். ப்ளாக்கரில் எவ்வாறு நிரல்வரிகளை எழிலாய் தோன்றச் செய்வதென இக்கட்டுரையில் பார்க்கலாம். வேர்ட்பிரஸ் வலைப்பூக்களிலும் நிரல்வரிகளை அழகாகத் தோன்றச் செய்யலாம், ஆனால் அதற்கென உரிய முறையில்.

நான் எனது வலைப்பூவில் பயன்படுத்திப் பார்த்த இரண்டு எழில்நிரலுக்கான நிரல்கள்: (code beautifiers/syntax highlighters/.. அல்லது உங்கள் மொழியில்)

Syntax Highlighter
http://alexgorbatchev.com/wiki/SyntaxHighlighter:Integration
Google Code Prettify
http://code.google.com/p/google-code-prettify/

இதோடல்லாமல் இன்னும் நிறைய நிரலை அழகுபடுத்தும் நிரல்கள் உள்ளன http://www.1stwebdesigner.com/css/16-free-javascript-code-syntax-highlighters-for-better-programming/

நமக்கும் ஒரு ப்ளாக் வேண்டுமென முதன்முதலில் விளையாட்டாய் உருவாக்கிய http://nrsrajkumar.blogspot.com வலைப்பூவில் Syntax Highlighter பயன்படுத்தியிருக்கிறேன்.  இந்த தமிழ்CPU வலைப்பூவில் Google Code prettify பயன்படுத்தியிருக்கிறேன். அப்படியே உங்கள் மவுசில் வலது க்ளிக் செய்து view page source (தமிழ்CPU வலைப்பூவை) பார்க்கவும், எப்படிப் பயன்படுத்த வேண்டுமென நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
<!DOCTYPE html>
<html b:version='2'>
<head>
...
  <title>தமிழ்CPU</title>

  <link href='http://google-code-prettify.googlecode.com/svn/trunk 
          /src/prettify.css' rel='stylesheet' type='text/css'/>
  <script src='http://google-code-prettify.googlecode.com/svn/trunk
          /src/prettify.js' type='text/javascript'></script>
...
...

அந்தந்த நிரல் மொழிகளுக்குத் தகுந்தவாறு  வண்ணங்கள் css (Cascading Style Sheets) கோப்பில் எழுதப்பட்டிருக்கும்.  இவற்றை எங்கு கொடுப்பது? Design தொடுப்பிலிருக்கும் Edit htmlஐ தேர்வு செய்யவும்.  உங்கள் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் நிரல் தோன்றும்.  <head> டேகினுள் </title>க்கு அடுத்து கீழ்காணும் இரண்டு html வரிகளை சேர்த்து
<link href='http://google-code-prettify.googlecode.com/svn/trunk/src/prettify.css' rel='stylesheet' type='text/css'/>
<script src='http://google-code-prettify.googlecode.com/svn/trunk/src/prettify.js' type='text/javascript'></script>
டெம்ப்ளேட்டை சேமிக்கவும். இந்த டெம்ப்ளேட்டை ஒருமுறை சேமித்தால் போதுமானது. ஒவ்வொரு பதிவிற்கு மாற்றம் செய்யத் தேவையில்லை. இனி எங்கெல்லாம் (தேவைப்படும் பதிவில்) ஒரு நிரலை அழகாகத் தோன்றச் செய்ய வெண்டுமென நினைக்கிறீர்களோ, உங்கள் நிரலை எளிதாக pre டேகினுள் தந்துவிடவும்.


புதிய பதிவை எழுதும்போது ப்ளாக் எடிட்டரில் Edit Html தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பதிவில் காட்ட நினைக்கும் நிரலை கீழ்காணுமாறு &lt;pre> டேகினுள் தரவும்.
  <pre class='prettyprint'>
    #author: Rajkumar Ravi
    print 'hi blog readers...'
  </pre>

ஒரு html நிரலை உங்கள் பதிவில் காட்டவேண்டுமென நினைக்கிறீர்கள். எடுத்துகாட்டாக கீழ்காணும் html வரிகளை <pre> </pre> டேகிற்குள் எழுதுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்.
<html>

  <head>
     <title>Display html in a HTML page</page>
  </head>

  <body>
     Escape html tags you want to display it in a HTML page.
  </body>

</html>
இவ்வரிகளை நாம் ஏற்கனவே எழுத்தப்பட்டிருக்கும் ஒரு html பக்கத்தில்தான் சேர்க்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாம் <pre> டேகினுள் சேர்த்த html வரிகளை எழுத்தாக தோன்றச் செய்ய மட்டும் எண்ணியிருந்தாலும், உங்கள் உலாவி இதை html இலக்கணமாக எடுத்துக்கொள்வதால் சிக்கல் ஏற்படும்.இதற்கு html மொழியிலேயே தீர்வு இருக்கிறது. அவைதான் html entities. < அனைத்து டேகிலும் வருவதால் அதை கட்டளை எழுத்தாக அல்லாமல் எழுத்தாக தோன்ற செய்வதற்கு &lt; entityயாக எழுத வேண்டும். காப்புரிமை குறியீட்டிற்கு &copy; என வரும். இப்படி htmlலில் பல entityக்கள் உள்ளது.

நாம் காட்ட நினைக்கும் html நிரலில் உள்ள அனைத்து குறியீட்டையும் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு நிரல் மூலமாகவே தீர்வுகாண முடியும். இப்பிரச்சனைக்கு தீர்வுதரும் ஒரு நிரல்தான்
http://www.string-functions.com/htmlencode.aspx


மே 11, 2011

jQuery ஜாவாஸ்கிரிப்ட்

jQuery என்பது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் library யாகும். இன்று இணைய பக்க வடிவமைப்புகளில் கலக்கி வரும் jQuery குறித்து கணினித் துறையில் இருக்கும் நாம் அவசியம் அறிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். 


நேரடி ஜாவாஸ்கிரிப்ட்டில் இணையப் பக்கம் வடிவமைத்த காலம் போயே போய்விட்டது. இதுபோன்ற library பயன்படுத்தாமல் எழுதப்படும் நிரல் அனைத்து உலாவிகளிலும் ஒரேபோல் இயங்காது. ஆனால் இணையம் என்பது பலவகையான கணினிகள் மூலம் வெவ்வேறு உலாவிகளில் இருந்து அணுகப்படுகிறது. இவையனைத்திலும் இயங்குமாறு நிரலெழுதுவது நேர விரயம் மற்றும் பிழைகள் மலிந்திருப்பதாவும் இருக்கும். Dojo, Prototype, Script.aculo.us, XUI... அப்பப்பா இன்னும் ஏராளமான ஜாவாஸ்கிரிப்ட் libraries உள்ளன. இதில் jQuery பயன்படுத்துவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் இருந்தால் அவசியம் jQuery தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

jQueryன் சிறப்பம்சங்கள்:

எளிமை
மிக வேகமாகக் கற்றுக் கொள்ளலாம்.

ஆற்றல்
மிக வேகமாகவும் இயங்கக் கூடியது.

நளினம்
கடினமான DOM வடிவமைப்பையும் எளிதாக அணுகலாம்.

தரம்
உலகெங்கிலும் பயன்படுத்தப் படுகிறது. மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இலவசம்
இது இலவசம் மட்டுமல்ல கட்டற்ற மென்பொருள்.  அவரவர்க் கேற்றார்போல் மாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

வீச்சு
jQuery Mobile, jQuery Touch ஆகியவை செல்பேசிகளுக்கான இணையதளம் மற்றும் செல்பேசி மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

உதவி
ஏராளமான எடுத்துக்காட்டுகளும், புத்தகங்களும் இருக்கின்றது

கருவிகள்
ஆங்கிலத்தில் Dont reinvent the wheels yourself என்றொரு சொற்றொடர் இருக்கிறது. இதன் பொருள் அனைத்தையும் அடிப்படையிலிருந்து நாம் உருவாக்கத் தேவையில்லை, இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

இணையப் பக்கங்களை சேமித்து வைத்திருக்கும் உங்கள் கணினியில் உங்களை அறியாமலேயே jQuery ஏற்கனவே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உங்கள் கணினியில் jquery*.js எனத் தேடிப் பாருங்கள்.   :)

உங்கள் பெயரை உள்ளிடுக:

<html>
<head>
  <title>Jquery in tamil</title>
  <script src="jquery-1.6.js" charset="US-ASCII">
  </script>
</head>

<body><br/><br/>
உங்கள் பெயரை உள்ளிடுக: <input type='text' id='txtname'/>
<input type="button" id='greet' value="வாழ்த்து"/>

<br/><br/><br><hr noshade/>
<a href='http://tamilcpu.blogspot.com'> தமிழ்CPU வலைப்பூ</a>

<script>
  $("#greet").click(function() {
   alert("மகிழ்ச்சி!!! " + $('#txtname').val() + ".")
  })

</script>
</body>
</html>

மார்ச் 30, 2011

தமிழ் விபிScript

' நிரலர்: ந.ர.செ. ராஜ்குமார்
'-------------------------------------
choice = msgbox ("இந்த நிரல் உங்களுக்கு பிடிச்சிருக்கா?",vbokcancel,
         "தமிழ்CPU http://tamilcpu.blogspot.com") 
if (choice = 1) then
  msgbox "மகிழ்ச்சி!...... :)",,"தமிழ்CPU http://tamilcpu.blogspot.com"
else
  msgbox "ஐயையோ!.... :(",,"தமிழ்CPU http://tamilcpu.blogspot.com"
end if

wscript.echo "மிக எளிதாக தமிழ் இடைமுகப்பில் மென்பொருட்கள் எழுத முடியும்."

மார்ச் 28, 2011

இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்

கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி.  இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.


திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)


தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)


ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்


திரு. முத்து நெடுமாறன் 


தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர் 

திரு. மணவை முஸ்தபா

இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

பிப்ரவரி 26, 2011

அளவில் சிறிய இலவச மென்பொருள் மாதிரி வடிவமைப்புக் கருவி

பென்சில் ஸ்கெட்ச்சிங் (Pencil Sketching) ஃபயர்பாக்ஸ் உலாவியில் add-onஆக பயன்படுத்தப்படும் கருவி.  மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவி.  ப்ராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.  மென்பொருளை உருவாக்கும் முன் மாதிரியை இதில் வடிவமைத்துக் கொள்ளலாம்.  இதுபோல மாதிரி வடிவமைப்பதை ஆங்கிலத்தில் prototyping என்றழைக்கிறோம்.  இது திறமூல மென்பொருளாக (ஓப்பன் சோர்ஸ்) இருப்பதால் மேலும் மனதைக் கவர்கிறது.
ஜனவரி 23, 2011

வகைவகையான வலைப்பதிவு விருதுகள்

அவ்வப்போது வலைப்பூக்களை உலா வருகையில் xxxx அளித்த விருது, yyyy கொடுத்த விருது.. என நிறைய விருதுகளை பார்ப்பதுண்டு.  அதை பெருமிதமாக அறிவித்துக் கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி.  இது ஒருவகையான அன்புதான்.  500க்கும் மேற்பட்ட பின்தொடருவோர் இருப்பவர் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பதிவுலகிற்கு வந்தவர்வரை விருதுகள் வழங்கி மகிழ்விக்கின்றனர், அல்லது மகிழ்கின்றனர்.

என் கண்ணில் பட்ட சில விருதுகள்.  இவ்விருதுகளை வழங்குபவர் யார், பெற்றவர்கள் யார் யார் என்பதெல்லாம் இப்பதிவிற்கு அப்பாற்பட்டது.  சினிமா, நகைச்சுவை, சமையல், படைப்பாக்கம்.. என அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றது.  ஆனால் தொழில்நுட்பப் பதிவுகளுக்கு ஏதேனும் உள்ளதா எனத் தெரியவில்லை.

பதிவர்களைப் பொறுத்தவரை பெறும் ஒவ்வொரு பின்னுட்டமும் விருதுகள்தான்.

ஜனவரி 02, 2011

அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள்

அழகான தமிழ் எழுத்துருக்களை (tamil fonts) இந்த http://sites.google.com/site/tamilcpufiles சுட்டியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்.  இந்த எழுத்துருக்கள் பனேசியா சாப்ட்வேர் நிறுவனத்தால் இலவசமாய் வழங்கப்பட்டவை.  வெவ்வேறு வகையான தமிழ் எழுத்துருக்களை நம் கணினியில் பயன்படுத்த இயலும்.  TAM, TAB, Unicode, TSCII என பல வகைகள் இருந்தாலும் இணையத்தில் நாம் தமிழ் ஒருங்குறி (tamil unicode) எழுத்துருக்களை பயன்படுத்துகிறோம்.  தமிழ் யுனிகோட் எழுத்துக்கள் சிக்கல்மிகு கட்டமைப்பைக் கொண்டவை. எடு ‘கி’ என்பது  ஒரே எழுத்தாக கையாளப் படாது. ‘க’ + ‘ி’ சேர்ந்து கி என வரும். பழைய மென்பொருட்கள் இதனை ஆதரிப்பதில்லை (எடு: போட்டோஷாப் 7). ஆகவே பதிப்புத் துறையில் (publishing / DTP) தனியெழுத்தாகவே கையாளப்படும் TAM அல்லது தனியார் குறியீட்டு முறைமைகளான (private encodings) செந்தமிழ் ஃபாண்ட்கள் போன்றவை பயன்படுத்தப் படுகிறது.  தனியார் ஃபாண்ட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். நம்மிடம் எவ்வளவு அழகான எழுத்துருக்கள் இருந்தாலும், அதை உள்ளீடு செய்ய (டைப் செய்ய) முடியவில்லையெனில் பயனில்லை.    
தமிழை உள்ளீடு செய்ய பல மென்கலங்கள் (software) இருந்தாலும், நான் விரும்பிப் பயன்ப்டுத்துவது NHM Writer மென்பொருளை. இந்த மென்பொருளை பதிவிறக்குவதற்கான சுட்டி download NHMWriterSetup1511.exe
உங்களுக்கு வசதியான கீபோர்ட் லேயவுட்டை தெர்ந்தெடுக்கவும்.
அம்மா என்பதற்கு ammaa என டைப் செய்ய ஆசைப் படுவோர் பொனடிக்கை தேர்ந்தெடுக்கவும். தமிழ்99, தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை பழகியிருந்தால் தங்களுக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும். NHM Writerல் சுருக்கு விசையும் (shortcut) வைத்துக் கொள்ளலாம்.


என் கணினியில் பொனடிக் தமிழ் யுனிகோட்  Alt + 1ம், பொனடிக் TAM தமிழ் Alt + 2ம் வைத்துள்ளேன்.  நாம் அதிகம் பயன்படுத்தாதவைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.


இன்னொரு முக்கியமான சேதி எல்லா எழுத்துருக்களையும் நிறுவி கணினியை சிரமப் படுத்தாதீர்கள்.  

வேண்டிய எழுத்துருக்களை மட்டும் நிறுவங்கள்.  உங்களுக்கு பிடித்த எழுத்துருக்களை உடன் வரும் pdf கோப்பின் மூலம் தேர்ந்தெடுங்கள்.