மே 11, 2011

jQuery ஜாவாஸ்கிரிப்ட்

jQuery என்பது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் library யாகும். இன்று இணைய பக்க வடிவமைப்புகளில் கலக்கி வரும் jQuery குறித்து கணினித் துறையில் இருக்கும் நாம் அவசியம் அறிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். 


நேரடி ஜாவாஸ்கிரிப்ட்டில் இணையப் பக்கம் வடிவமைத்த காலம் போயே போய்விட்டது. இதுபோன்ற library பயன்படுத்தாமல் எழுதப்படும் நிரல் அனைத்து உலாவிகளிலும் ஒரேபோல் இயங்காது. ஆனால் இணையம் என்பது பலவகையான கணினிகள் மூலம் வெவ்வேறு உலாவிகளில் இருந்து அணுகப்படுகிறது. இவையனைத்திலும் இயங்குமாறு நிரலெழுதுவது நேர விரயம் மற்றும் பிழைகள் மலிந்திருப்பதாவும் இருக்கும். Dojo, Prototype, Script.aculo.us, XUI... அப்பப்பா இன்னும் ஏராளமான ஜாவாஸ்கிரிப்ட் libraries உள்ளன. இதில் jQuery பயன்படுத்துவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் வெப் அப்ளிகேஷன் உருவாக்கத்தில் இருந்தால் அவசியம் jQuery தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

jQueryன் சிறப்பம்சங்கள்:

எளிமை
மிக வேகமாகக் கற்றுக் கொள்ளலாம்.

ஆற்றல்
மிக வேகமாகவும் இயங்கக் கூடியது.

நளினம்
கடினமான DOM வடிவமைப்பையும் எளிதாக அணுகலாம்.

தரம்
உலகெங்கிலும் பயன்படுத்தப் படுகிறது. மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இலவசம்
இது இலவசம் மட்டுமல்ல கட்டற்ற மென்பொருள்.  அவரவர்க் கேற்றார்போல் மாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

வீச்சு
jQuery Mobile, jQuery Touch ஆகியவை செல்பேசிகளுக்கான இணையதளம் மற்றும் செல்பேசி மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

உதவி
ஏராளமான எடுத்துக்காட்டுகளும், புத்தகங்களும் இருக்கின்றது

கருவிகள்
ஆங்கிலத்தில் Dont reinvent the wheels yourself என்றொரு சொற்றொடர் இருக்கிறது. இதன் பொருள் அனைத்தையும் அடிப்படையிலிருந்து நாம் உருவாக்கத் தேவையில்லை, இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

இணையப் பக்கங்களை சேமித்து வைத்திருக்கும் உங்கள் கணினியில் உங்களை அறியாமலேயே jQuery ஏற்கனவே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உங்கள் கணினியில் jquery*.js எனத் தேடிப் பாருங்கள்.   :)

உங்கள் பெயரை உள்ளிடுக:

<html>
<head>
    <title>Jquery in tamil</title>
    <script src="jquery-1.6.js" charset="US-ASCII">
    </script>
</head>

<body><br/><br/>
உங்கள் பெயரை உள்ளிடுக: <input type='text' id='txtname'/>
<input type="button" id='greet' value="வாழ்த்து"/>

<br/><br/><br><hr noshade/>
<a href='http://tamilcpu.blogspot.com'> தமிழ்CPU வலைப்பூ</a>

<script>
    $("#greet").click(function() {
     alert("மகிழ்ச்சி!!! " + $('#txtname').val() + ".")
   })

</script>
</body>
</html>