ஜனவரி 23, 2011

வகைவகையான வலைப்பதிவு விருதுகள்

அவ்வப்போது வலைப்பூக்களை உலா வருகையில் xxxx அளித்த விருது, yyyy கொடுத்த விருது.. என நிறைய விருதுகளை பார்ப்பதுண்டு.  அதை பெருமிதமாக அறிவித்துக் கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி.  இது ஒருவகையான அன்புதான்.  500க்கும் மேற்பட்ட பின்தொடருவோர் இருப்பவர் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பதிவுலகிற்கு வந்தவர்வரை விருதுகள் வழங்கி மகிழ்விக்கின்றனர், அல்லது மகிழ்கின்றனர்.

என் கண்ணில் பட்ட சில விருதுகள்.  



இவ்விருதுகளை வழங்குபவர் யார், பெற்றவர்கள் யார் யார் என்பதெல்லாம் இப்பதிவிற்கு அப்பாற்பட்டது.  சினிமா, நகைச்சுவை, சமையல், படைப்பாக்கம்.. என அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றது.  ஆனால் தொழில்நுட்பப் பதிவுகளுக்கு ஏதேனும் உள்ளதா எனத் தெரியவில்லை.

பதிவர்களைப் பொறுத்தவரை பெறும் ஒவ்வொரு பின்னுட்டமும் விருதுகள்தான்.

ஜனவரி 02, 2011

அழகான தமிழ் ஃபாண்ட்களை இலவசமாய் பெற்றிடுங்கள்

அழகான தமிழ் எழுத்துருக்களை (tamil fonts) இந்த http://sites.google.com/site/tamilcpufiles சுட்டியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்.  இந்த எழுத்துருக்கள் பனேசியா சாப்ட்வேர் நிறுவனத்தால் இலவசமாய் வழங்கப்பட்டவை.  வெவ்வேறு வகையான தமிழ் எழுத்துருக்களை நம் கணினியில் பயன்படுத்த இயலும்.  TAM, TAB, Unicode, TSCII என பல வகைகள் இருந்தாலும் இணையத்தில் நாம் தமிழ் ஒருங்குறி (tamil unicode) எழுத்துருக்களை பயன்படுத்துகிறோம்.  



தமிழ் யுனிகோட் எழுத்துக்கள் சிக்கல்மிகு கட்டமைப்பைக் கொண்டவை. எடு ‘கி’ என்பது  ஒரே எழுத்தாக கையாளப் படாது. ‘க’ + ‘ி’ சேர்ந்து கி என வரும். பழைய மென்பொருட்கள் இதனை ஆதரிப்பதில்லை (எடு: போட்டோஷாப் 7). ஆகவே பதிப்புத் துறையில் (publishing / DTP) தனியெழுத்தாகவே கையாளப்படும் TAM அல்லது தனியார் குறியீட்டு முறைமைகளான (private encodings) செந்தமிழ் ஃபாண்ட்கள் போன்றவை பயன்படுத்தப் படுகிறது.  தனியார் ஃபாண்ட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். நம்மிடம் எவ்வளவு அழகான எழுத்துருக்கள் இருந்தாலும், அதை உள்ளீடு செய்ய (டைப் செய்ய) முடியவில்லையெனில் பயனில்லை.



    
தமிழை உள்ளீடு செய்ய பல மென்கலங்கள் (software) இருந்தாலும், நான் விரும்பிப் பயன்ப்டுத்துவது NHM Writer மென்பொருளை. இந்த மென்பொருளை பதிவிறக்குவதற்கான சுட்டி download NHMWriterSetup1511.exe
உங்களுக்கு வசதியான கீபோர்ட் லேயவுட்டை தெர்ந்தெடுக்கவும்.
அம்மா என்பதற்கு ammaa என டைப் செய்ய ஆசைப் படுவோர் பொனடிக்கை தேர்ந்தெடுக்கவும். தமிழ்99, தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை பழகியிருந்தால் தங்களுக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும். NHM Writerல் சுருக்கு விசையும் (shortcut) வைத்துக் கொள்ளலாம்.


என் கணினியில் பொனடிக் தமிழ் யுனிகோட்  Alt + 1ம், பொனடிக் TAM தமிழ் Alt + 2ம் வைத்துள்ளேன்.  நாம் அதிகம் பயன்படுத்தாதவைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.






இன்னொரு முக்கியமான சேதி எல்லா எழுத்துருக்களையும் நிறுவி கணினியை சிரமப் படுத்தாதீர்கள்.  

வேண்டிய எழுத்துருக்களை மட்டும் நிறுவங்கள்.  உங்களுக்கு பிடித்த எழுத்துருக்களை உடன் வரும் pdf கோப்பின் மூலம் தேர்ந்தெடுங்கள்.