ஏப்ரல் 21, 2010

மேக் ஓ.எஸ்10.6ல் யுனிகோட் தமிழ்

      
         அண்மையில் என் நண்பருடைய மேக் மினி இயக்கிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.     அதில் மேக் ஓஎஸ் 10.6 நிறுவப்பெற்றிருந்தது.   அதில் தமிழுக்கென எந்த எழுத்துரு இருக்கிறது என்று ஆவலாய்த் தேடிப் பார்த்தேன்.

விண்டோசில் தமிழுக்கு லதா ஒருங்குறி எழுத்துரு Latha.ttf இருப்பதுபோல மேக் இயங்கு தளத்தில் இணைமதி Inaimathi.ttf இருக்கிறது.




இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, தமிழை உள்ளிட அஞ்சல்(phonetic) மற்றும் ஒலியியல் தமிழ்99(Tamil99) விசைப்பலகைகளை Mac osX தன்னியல்பாக(by default) பெற்றிருப்பதுதான்.



IME-Input Method Editorஆக இருப்பதால் விண்டோஸில் NHM Writerரை பயன்படுத்துவது போல மேக்கிலும் பயன்படுத்தலாம்.  நேரடியாக நம் ஆவணங்களிலும்(.txt, .doc...) இணைய பக்கத்திலும் எளிதாய் தமிழை உள்ளிடலாம்.

தற்போது வெளிவரும் புதிய லினக்ஸ் வகைகளிலும் இதே வசதி இருக்கிறது.   விண்டோசிலும் இதுபோன்று உட்பதிந்து(bundled) வந்தால் இன்னும் பல அறிவு களஞ்சியங்களை தமிழில் பெற முடியும்.

தமிழை தட்டச்சு செய்து காண்பித்ததும் நண்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லைஇன்னும் யாரும் பயன்படுத்தாத Inscript Layoutஐ மட்டும் தன்னியல்பாக பெற்றுவரும் விண்டோஸின் பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

NHM Writer, e-kalappai...போன்ற மென்பொருட்கள் விண்டோசுக்கு கிடைத்திருக்காவிட்டால் இவ்வளவு தமிழ் வலைப்பதிவுகளை படிக்க நமக்கு வாய்த்திருக்காதுஇனிமேலாவது தமிழ் மென்பொருட்களை குறிப்பிட்ட ஓர் இயங்குதளத்திற்கென உருவாக்குவதில்லை என உறுதி கொள்வோம்.






பின்குறிப்பு: 
இந்த கட்டுரை கண்ணைக் கவரும் மேக் இயங்குதளத்தில் கட்டற்ற மென்பொருள் வரமான ஓப்பன் ஆபிஸ் உதவியுடன் எழுதப்பட்டது.  

ஆங்கிலத்தைப் போல மற்ற மொழிகளையும் எளிதாய் பயன்படுத்த உதவும் யுனிகோட் வாழ்க. தமிழை தட்டச்சு செய்யும் எளியமுறை வாழ்க வாழ்க.