பிப்ரவரி 21, 2016

கதறும் கனவு தேசம். என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்கா சர்வ வல்லமை கொண்ட தேசம்இளசுகளின் கனவு தேசம்அமெரிக்காவில் இருக்கும் தன் பிள்ளைகளை பார்க்க இங்கிருக்கும் பெற்றோருக்கும் ஒருமுறையாவது அந்த தேசத்தில் கால் வைக்கும் கனவு இருக்கும்.   தொழில்நுட்பத்தில் அவர்களை மிஞ்ச ஆளேயில்லை என வியந்து கொள்வோம்நமக்கு வெளியில் தெரியும் தொழில்நுட்பங்களைவிட பல ஆண்டுகள் முன்னோடியாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.  அதே நேரத்தில் அவர்கள் வளர்த்துவிட்ட தீவிரவாதம் அவர்களை குறி வைப்பதும் உலகம் அறிந்ததே.  


உலகம் அறியாத பல கருப்புப் பக்கங்கள் அமெரிக்க தேசத்தில் உண்டு.   அதில் ஒன்றான செயற்கையாய் வானிலையை மாற்றும் Chemtrails திட்டத்தை சென்ற பதிவில் பார்த்தோம்.   எனக்குப் புரிந்தவரை இன்றைக்கு அங்கிருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை இங்கு எழுதுகிறேன்மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் எண்ணை வளங்களை சூறையாட அவர்களின் சதியும் அட்டூழியமும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் குத்தும்இந்த மாத முதல் பகுதியில் ரஷ்யா உலக அரங்கில் வெளிப்படையாகவே அவர்களின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டியது.   முதலில் தாலிபான்களை வளர்த்தனர், பின்பு உலகத்தை இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து (ஊடகத்தில் சொல்வது…) உலகை காப்பாறுகிறேன் என ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.   ஈராக், லெபனான், வெனிசுலா, க்யூபா என எண்ணை வளம் கொண்ட ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றினர்.   இன்றைக்கு அவர்களின் இலக்கு சிரியா. இறுதியில் ஈரான்.  அவர்கள் நிறுத்தப் போவதில்லை.  சின்ன சின்ன நாடுகளையெல்லாம் தனது அசுர பலத்தால் அடித்து விட்டனர்சிரியாவும் சிறிய தேசம்தான்.  பலவருடங்களாக உள்நாட்டு போரோலும் அண்டை தேசத்து தீவிரவாதிகளாலும் நம்பிக்கையிழந்த தேசம்.   தனக்கு பாதுகாப்பளிக்க நட்பு நாடுகளின் உதவியை நாடியது.  சிரியாவுக்குள் இன்று அமெரிக்காவால் (அல்லது அமெரிக்க ஆதரவு கூட்டாளிகளால் ISIS, சவுதி அரேபியா, துருக்கி, நேட்டோ படைகள் )எளிதாக நுழைய முடிவதில்லைஏனெனில் சிரிய இராணுவத்துக்கு பக்க பலமாக ரஷ்யா நிற்கிறதுவான்வழி படைகளுடன் சிரியாவுக்குள் ரஷ்யாவும்,  தரைப்படையில் பக்கத்து நாடான (சிரியாவுக்கு வெளியில்) ஈரானும் பக்க பலமாக இருக்கிறது.   ரஷ்யா தனது ராஜ்ஜியத்தை விரிவு படுத்த, இராணுவ தளம் அமைக்கவே சிரியாவை பகடையாக பயன்படுத்துகிறது என மேற்கத்திய ஊடககங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.   சிரியாவுக்கு எதிராக போர் புரியும் கிளர்ச்சியாளர்களுக்கும், ISISக்கும் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் ஆயுதங்களையும் பண உதவியையும் பல வருடங்களாக வழங்கி வருகிறதுமூன்றாம் உலகப்போருக்கான ஒத்திகை சிரியாவின் எல்லைப் பகுதியில் கடந்த மாதமே தொடங்கி விட்டன.  இப்படி உலகத்துக்கே தன்னை காவல்துறை எனத் தன்னை நினைத்துக் கொள்ளும் அமெரிக்கா தனது சொந்த மக்களை கைகழுவி விடுகிறது.  


இராணுவத்தை பலப்படுத்தவும், மற்ற நாடுகளில் தீவிரவாத்தை வளர்க்கவும் கடன் வாங்கி கடன் வாங்கி இன்று மக்களின் தலையில் விடிந்துவிட்டது.  இன்றைய தேதியில் அமேரிக்காவுக்கு இருக்கும் கடன் தொகை 19 ட்ரில்லியன் டாலர்.  

   1 பில்லியன் =  100 கோடி
1000 பில்லியன் =  1 ட்ரில்லியன்

தோராயமாக அமெரிக்காவின் தற்போதைய கடன் 19,025,050,400,800  கோடி டாலரை (பத்தொன்பது லட்சம் கோடி டாலர் தலை சுத்துது) தாண்டி ஏறிக்கொண்டே இருக்கிறது.  

இந்தக் கடனை அடைப்பது சாத்தியம் தானா?  சாத்தியமே இல்லை.  இந்தக் கடன் கணக்கே போலியானது என அந்நாட்டு மக்கள் வாதிடுகிறார்கள்.  எப்படி என பார்ப்போம்.  அமெரிக்க டாலரை அச்சடிப்பது அரசாங்கம் அல்ல, பெடரல் ரிசர்வ் வங்கியே அச்சடித்துக் கொடுக்கிறது.  வங்கி என்பது அரசாங்கத்துக்கு சொந்தம் தானே என நினைத்தால் நாம் ஏமாந்து போவோம்.   பெடரல் ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் கொண்டது.  இலுமினாட்டி உலக கோடீஸ்வரர்களால் நடத்தப் படுவது.   இன்னொன்று சொன்னால் இன்னும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்.   பெடரல் ரிசர்வ் வங்கி மட்டுமல்ல உலகிலுள்ள ஒவ்வொரு பெரிய வங்கியையும் (நம்மூர் ஸ்டேட் பாங்க் உட்பட) ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே சொந்தம் கொண்டாடுகின்றனர் எனச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும்.   ரோத்சைல்ட் பரம்பரையில் வந்த ஜேக்கப் ரோத்சைல்டே உலகிலுள்ள முக்கால்வாசி  அச்சடிக்கப்பட்ட பணத்துக்கு சொந்தக்காரர்.  அமெரிக்க மக்கள் வரிப்பணம் செலுத்துகின்றனர்.  அதுவும் அரசாங்கத்திற்கு போவதில்லை, அதுவும் வங்கிக்கே சொந்தம்.  

நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.  எதன் அடிப்படையில் ஒரு நாட்டின் பணமதிப்பு இருக்கிறது.  கடன் இருந்தால் வேண்டிய அளவு பணத்தை அச்சடித்துக் கொள்ள வேண்டியதுதானே என ஒருமுறையாவது நினைத்திருப்போம்.  வேண்டிய அளவு பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடுவதற்கு Quantitative Easing என்று பெயர்.  ஆனால் அப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு அச்சடிக்கக் கூடாது.  அதீத பணப்புழக்கம் பணவீக்கத்தை அதிகரித்து விடும்.   ஒரு பேச்சுக்கு அரசாங்கம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒருலட்ச ரூபாய் கொடுத்து விடுகிறது என வைத்துக் கொள்வோம்.  அந்த பணத்திற்கு மதிப்பு இருக்குமா?  கிலோ இருபது ரூபாய்க்கு வாங்கிய தக்காளியை நானூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.  அதே ஒவ்வொருவரிடமும் கட்டுக் கட்டாக பணம் இருந்தால், ஒரு லிட்டர் பாலை இரண்டு பெட்டி நிறைய பணங்கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.   நாம் கொடுக்கும் பணத்தை இன்னொருவர் வாங்க மறுத்தால் அது வெறும் பேப்பர்தான்.   புழக்கத்தில் உள்ளவரை மட்டுமே அதற்கு மதிப்பு.   அமெரிக்க டாலர் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டதா என்ன? எல்லா நாடுகளும் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கின்றன.  ஏகாதிபத்ய போக்குடன் இருந்த அமெரிக்கா பல நாடுகளின் வெறுப்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.   ஈரான் இனி டாலரை பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்து விட்டது.   அவர்கள் யூரோவுக்கு மாறிவிட்டனர்.  ரஷ்யா டாலரை பயன்படுத்துவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறது.   டாலருக்கு மாற்றாக யுவானை world reserve currency சீனா முன்னிருத்தி வருகிறது.   உலக வங்கியை இனியும் நம்பிப் பயனில்லை என நினைக்கும் நாடுகள் வேறு மாற்றுக்கு வழிதேடி வருகின்றனர்.

BRICS கூட்டமைப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் New Development Bank என்ற புதிய வங்கியை தொடங்கியிருக்கினர்.  Federal Reserve Bank, IMF, World Bank எல்லாமே கிட்டத்தட்ட தனியார் வங்கிகள்தான்.  அந்நிய செலவானி கையிருப்பு எனவெல்லாம் செய்திகளில் கேட்டிருப்போம்.  ஒவ்வொரு நாடும் தன்னுடைய பணத்தின் மதிப்பாக தங்கமாகவோ, கச்சா எண்ணையாகவோ, வேறொரு நாட்டின் மதிப்புள்ள பணமாகவோ (டாலர் கையிருப்பு) வைத்திருக்கும்.  டாலர் கையிருப்பு என்பது வெறும் கட்டுக் கட்டான டாலர் நோட்டுகளை மட்டும் குறிக்காது.   அமெரிக்க தேசிய கடன் பத்திரத்தில் முதலீடு செய்து  கொள்ளலாம்.   மொத்தத்தில் டாலரின் மதிப்பு குறைந்தால் யார் யாரெல்லாம் டாலரில் வர்த்தகம் செய்கிறார்களோ அவர்களையும் பாதிக்கும்.  


உண்மையில் டாலரின் மதிப்பு குறைந்து கொண்டுதான் இருக்கிறதா என்றால், சர்வ நிச்சயமாக என அடித்துச் சொல்லலாம்.  இல்லை இன்றைக்கு செய்தித்தாளை பார்த்தால் கூட அதைபற்றி எந்த அறிகுறியும் தெரியவில்லையே என நினைப்போம்.  டாலரின் வீழ்ச்சி அமெரிக்க அரசாங்கத்திற்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து அரசாங்களுக்கும் தெரியும் ஆனால் மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்.  ஊடகம் என்பதை மக்களை ஒரு பிரமையில் வைப்பதற்காகவே பயன்படுத்தப் படுகிறது.  கூச்சலும் குழுப்பமும் அதிகரித்தால் பயந்துகொண்டு அவரவர் பங்கு சந்தையிலிருந்து வெளியேறி விடுவார்கள்.  மக்கள் வங்கிகளிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள்.  மொத்த அரசாங்கமும் நிலைகுலைந்து விடும்.   ஆனால் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்.

ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை எல்லாம் முடிந்த பின்புதானே வெளியுலகம் அறிந்தது.  அதேபோன்ற இனப்படுகொலையே ஈராக்கிலும், சிரியாவிலும் இன்று அமெரிக்காவிலும் நடந்து வருகிறது.  என்ன அமெரிக்காவில் படுகொலையா? எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.  அங்கு பைத்தியம் தெளிந்தவர்கள் தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.   குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் குரல் வளையையும் நெருக்கி வருகிறது.  இன்னும் ஓரிரு வாரங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் அமெரிக்காவில் வெடிக்க இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கவே இந்தப் பதிவு.  கடந்த ஒரு மாதமாக அங்கு என்னதான் நடக்கிறது என தேடி அலசியதில் முற்றிலும் அதிர்ந்து போனேன்.   கச்சா எண்ணை உற்பத்தி பெருக்கத்தாலும், சர்வேச எண்ணை சந்தையில் டாலரின் மதிப்பு குறைவதாலும் அங்கிருக்கும் எண்ணை நிறுவங்கள் மிகப்பெரும் சரிவை சந்தித்தன.  அமெரிக்காவில் இருக்கும் பல எண்ணை நிறுவனங்கள் திவலாகி இழுத்து மூடியாகிவிட்டது.   அவற்றில் வேலை செய்த லட்சக் கணக்கானோருக்கு தற்போது வேலையில்லை.  அந்த நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வங்கிகள் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.  எண்ணை நிறுவனங்கள் மட்டுமல்ல, அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டு பாதுகாப்பு, வட்டி விகிதம் ஆகியவை குறைந்து கொண்டே வந்தால் வேலைவாய்பின்மையோ பலமடங்கு அதிகரித்து விட்டது.   அமெரிக்காவில் பெரும்பாலான நடுத்தர வர்கத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.   

பொருளாதார வளர்ச்சி சில வருடங்கள் ஏறினால் அடுத்த சில வருடங்கள் குறைவதும் இயற்கைதானே என நினைக்கத் தோன்றும்.  ஆனால் ஒட்டுமொத்த டாலரின் மதிப்பும் செயற்கையாக உயர்த்தப்பட்டவையே என அங்கிருக்கும் மக்களுக்கு தெரிந்தால் என்னவாகும்? புரட்சி வெடிக்கும் தானே அதேதான் அங்குள்ள அரசாங்கத்திற்கு கவலை.  அரசாங்கங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளதை வரலாற்றில் வழி நெடுகப் பார்க்கலாம்.   அதிலும் அங்கிருக்கும் அரசாங்கம் பொம்மை அரசாங்கம்.  ஒபாமா கையெழுத்து போடுவதற்கு மட்டும்தான்.   வெளியில் தெரியும் டம்மி அரசாங்களை இயக்குவதே இல்லுமினாட்டிகள் எனும் மறைமுக சாம்ராஜ்ஜியம்.   கடன் என்கிற பெயரில் மக்களின் மொத்த சொத்துக்களையும் புடுங்கி விட்டனர்.  அதிர்ச்சியாக இருக்கிறதா?  இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.   தற்போது கிரெடிட் கார்ட் பயன்படுத்துகிறோமே? அவற்றை அறிமுகப் படுத்திய அதே கும்பல்களின் சதிவலை.   சரியாக பயன்படுத்தாவிட்டால் கந்து வட்டியைவிட மோசமானது.   குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி விட்டால் வட்டியில்லை என ஆசை வார்த்தைகளுடன் தொடங்கும் அதன் ஆபத்தை தொடக்கத்தில் நாம் உணரமுடியாது.   பணத்தை கையால் செலவழிக்கும் போதே அது  நம் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும்.  50 ரூபாய் இணையத்தில் (ஆன்லைன் ஷாப்பிங்) குறைவாக கிடைக்கிறதென ஒரு பொருள் தனக்கு தேவையிருக்கிறதோ இல்லையோ, அதை கண்ணை மூடி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  என்னிடம் எத்தனை கிரெடிட் கார்டுகள் இருக்கிறது தெரியுமா எனக் கேட்பதில் பெருமையில்லை,  அது வெட்கக் கேடானது என்பது புரிவதில்லை.  அங்கு சராசரியாக ஒவ்வொருவரும் ஐந்து கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தால் எங்கு போய் கொண்டிருக்கிறார்கள்?  நம்மூரில் கடன் வாங்கும் அளவிற்கு அங்கு கெடுபிடிகள் கிடையாது.  அவ்வளவு எளிதாக கடன் வாங்கிக் கொள்ளலாம்.  வெறும் பேப்பர்தானே (இதுதான் உண்மை), அந்த வங்கிகள் அச்சடித்து கொடுத்து விடப் போகின்றன.  பதிலுக்கு நிலமாக, வீடாக, நிறுவனமாக பல்வேறு வடிவ  சொத்துரிமைகளை வங்கிகள் (கார்ப்பரேட் நிழல் அரசாங்கங்கள்) பெற்றுக் கொள்கின்றன.   அரசாங்கத்திற்கு பணம் தேவையா, வங்கிகளைக் கேட்கிறது.  அவர்கள் காகிதத்தை அச்சடித்துக் கொடுத்து விடுகிறார்கள்.  Federal Reserve Bank இதுவரை எவ்வளவு டாலர்களை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறது என்பது அந்நாட்டு அரசாங்கத்திற்கே தெரியாது.

இதன் பாதிப்புகளை உணர்ந்த ஆப்ரகாம் லிங்கன் இனி அமெரிக்க அரசாங்கம் தனக்கான பணத்தை தானே அச்சடித்துக் கொள்ளும் அறிவித்தார்.  அதன் காரணமாகவே மறைமுக சதிக் குழுக்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.  மறைமுக கும்பல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு வந்த ஒரு மணி நேரத்திலேயே ஜான் கென்னடியை (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) அதே கும்பல் படுகொலை செய்து விட்டனர்.  இன்றுவரை அந்தக் கொலைகாரர்கள் கைது செய்யப்படவில்லை.  அமெரிக்க சட்டத்தை எழுதியதே அவர்கள்தான்.  1776ல் ஆங்கிலேயரிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இல்லுமினாட்டி குழுமம் அதிகாரப் பூர்வமாக தொடங்கப் பட்டது.  அதற்கு முன்னரும் பல்வேறு இரகசிய குழுக்கள் (Knight Templars, Free Masons, Skulls and Bones etc..) வரலாற்றில் இருந்து வந்துள்ளன.  அவர்கள் மதங்களின் வழியே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர், வருகின்றனர்.  இன்றைய நவீன உலகை ஆட்டுவிக்கும் இலுமினாட்டி சக்திகள் உதித்த தினம் மே 1, 1776.  எகிப்து, பண்டைய ரோம் பகுதி பரம்பரையிலிருந்து வந்த இவர்களை பவேரிய இலுமினாட்டிகள் என்றும் அழைப்பதுண்டு.  சாத்தானை வெவ்வேறு வடிவங்களில் இவர்கள் வழிபடுகிறார்கள் (இவர்களே தீய சக்தியின் பிள்ளைகள்தானே).  போப் ஆண்டவரை நியமிப்பதே இவர்கள்தான் என்றால் இவர்களை யார் கேள்வி கேட்க முடியும்.   

மர்மமான காரணங்களுக்காக இழுத்து மூடப்படும் வால்மார்ட் கிளைகள் FEMA Campகளாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. 

FEMA - Federal Emergency Management Agency
இந்த உண்மைகளெல்லாம் மக்களுக்கு தெரிந்தால் புரட்சி வெடிக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே உள்ளனர்.  வெடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.   அதை சாக்காக வைத்து இலுமினாட்டிகளின் புதிய உலக ஒழுங்கு (New World Order) கொள்கையை உலகெங்கும் பரப்ப வேண்டும்.  உலகிலுள்ள மொத்த அரசாங்கத்தையும் ஒரு குடைக்குள் ஆள வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.  எல்லா நாடுகளும் இதற்கு எப்படி ஒத்துக் கொள்ளும்?  கண்டிப்பாக கிடையாது.  ஆகவே காகிதப் பணத்தை ஒழித்து அத்தனை பேரையும் டிஜிட்டலுக்கு மாற்ற வேண்டும்.  எல்லா நாடுகளுக்கும் ஒரே சட்டம், ஒரே பணம் என்று அறிவிக்க வேண்டும்.  ஐநா சபையும், பன்னாட்டு கூட்டுப்படைகளும் அதை நோக்கிய காய் நகர்த்தல்களே.  அப்போதுதான் ஒவ்வொரு தனிமனிதனையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆட்டிப் படைக்க முடியும்.  ஒத்துவராத அரசாங்களில் பிரச்சனையைக் கிளப்பி, போருக்கு அழைத்து மொத்தத்தையும் அழித்தாவது அடைந்துவிட வேண்டுமென்ற மிகமிக ஆபத்தான பேராசை.  


அமெரிக்காவில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது இந்த மாதத்திலிருந்து என்றால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கும்.  செய்திகளில் எந்த அறிகுறியையும் காணோமே.  அங்கிருக்கும் ஊடகங்களும் வாய் பொத்தி மவுனமாகவே உள்ளனர்.  மக்கள் வெகுண்டெழும் பட்சத்தில் அவர்களை அடக்க இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.  அத்தனை கோடி மக்களையும் காப்பாற்ற துப்பில்லாத அரசாங்கம் பல குறுக்கு வழிகளில் தப்பிப்பதற்கே வழிதேடிக் கொண்டிருக்கிறது.  அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி ஒபாமா என்பதில் துளியும் சந்தேகமில்லை.   தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தை (Executive orders) பயன்படுத்தி அந்நாட்டு அரசியலமைப்பையே கேலிக்கு உள்ளாக்கிறார் என்பதை தேசப் பற்றுள்ள எந்த குடிமகனும் பொருத்துக் கொள்ள மாட்டான்.

அமெரிக்கா பயப்படுவது வெளியில் இருந்து வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அல்ல.  தீவிரவாதிகளை வாழ்த்தி வரவேற்கும் அவர்கள், சொந்த மக்களை இரும்புக் கரம் கொண்டு அடுக்குவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கினர்.  அரசியலமைப்பு, நீதித்துறை எதற்குமே அதிகாரம் இல்லாமல் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனக்கு எடுத்துக் கொள்ள அவர்கள் வகுத்திருக்கும் சட்டமே (சதித் திட்டமே) Martial Law.   கடந்து இரண்டு வருடங்களாக உள்நாட்டு கலவரங்களை கட்டுப்படுத்த JADE-HELM 15, 16 என்கிற ஆப்பரேசனும் நடந்து வருகிறது.   மெக்சிகோ எல்லையில் எந்த தடுப்புகளும் இல்லை, சோதனைகளும் இல்லை.  சர்வதேச தீவிரவாதிகள் எளிதாய் உள் நுழைந்துவிட முடியும்.   இரட்டை கோபுர தகர்ப்பு திட்டமிட்ட சதி.  ஆனால் அது உலகுக்கு சொன்னபடி பின் லேடன் செய்த சதியல்ல.  ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தனது சொந்த மக்களை காவு கொடுத்தது அமெரிக்க நிழலுக அரசாங்கமே.   ச்சீ பொய்கள்தான் இனிக்கும்.  உண்மையோ கசக்கும்.

பயனுள்ள இணைப்புகள்
http://isittrueresearchit.blogspot.in/2015/09/real-nature-of-banks.html (வங்கிகளின் உண்மை நிலை)
http://www.vinavu.com/2011/10/01/double-dip-recession/ (கடனாளி தேசம்)
http://www.islamkalvi.com/general/american_politics_and_muslims.htm (அமெரிக்காவின் அரசியல்)
http://epaper.theekkathir.org/news.aspx?newsid=111204 (உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி அமெரிக்கா - பேராசிரியர் நோம் சாம்ஸ்கி)
http://pesot.org/சீனாவின்-aiib-வங்கியும்-அமெர/
http://sathyapriyan.blogspot.in/2012/01/1.html (அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா?)
http://sathyapriyan.blogspot.in/2012/01/2.html 

https://www.youtube.com/watch?v=wViuEmnlKfc   (உலக அழிவைப்பற்றி தமிழ் திணைகள் வழி அறிவோம்)
https://www.youtube.com/watch?v=5NQOIh6tMeE   (ஹீலர் பாஸ்கர் - இலுமினாட்டி பற்றிய தொகுப்பு)

keywords: dollar collapse, FEMA camps, US martial law, Jade Helm, Global economy 2016, new world order

பிப்ரவரி 14, 2016

நிழலுலக ஆயுதம் - Chemtrails

ஹெலிகாப்டர் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் வானத்தை பார்ப்பது நம் மரபணுவில் வந்தது.  அதை வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு அற்ப ஆனந்தம்.    ஜெட் விமானம் பறந்து சென்ற தடத்தை நீல நிறப் பின்னனியில் பார்ப்பது ஒரு அழகான ஓவியம் போலிருக்கும்.   இந்தத் தடங்கள் ஆங்கிலத்தில் Contrail என்று அழைக்கப் படுகிறது.   வேதியல் தெளிப்பு எச்சங்களுடன் Chemical sprayed வானில் தெரியும் விமானப் புகைத்தடமே Chemtrails.  Chemical + Trail  —>  Chemtrail.  
வேதிப் பொருட்கள் (இரசாயன) + தடம்  —> வேதித்தடம் என பெயர் வைக்கலாமா?  செயற்கை மழையைப் (Cloud Seeding) பற்றி தமிழ்நாடு அறிவியல் பாடப் புத்தக்கத்திலேயே உள்ளது.  அதீத பஞ்சம் வரும்போது விமானங்கள் மூலம் சில இரசாயண பொருட்களைத் தூவி செயற்கையாய் மழை வரவைக்க இயலும்.  இதனுடைய உல்ட்டாவும் சாத்தியமே.  அதே விமானங்கள் கொண்டு செயற்கையாய் மழையை தடுத்து நிறுத்தி பஞ்சம் கொண்டுவர இயலும்.  

இதெல்லாம் அந்தந்த வான்பரப்பில் மட்டுமே செய்ய வேண்டிய அவசியமில்லை.  சர்வேதச கடல் பகுதியில் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், எப்படி வெளியில் தெரியும்.Contrail, Chemtrail இதெல்லாம் நமக்கு புதிய வார்த்தைகள்.  நேற்றைக்குதான் இந்த சொற்களை நான் கேள்விப்படுகிறேன்.   Chemtrail மனிதன் அறிவியலில் பலமடங்கு முன்னேறியதின் ஒரு சிறு துளி.   NASA (அமேரிக்க வின்வெளி திட்டம்), UN (ஐநா சபை), DARPA (அமேரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம்)  போன்ற பல அமைப்புகளின் இரகிய திட்டமே Chemtrails.   அறிவியல் மனிதனின் கையில் இருக்கும் ஆயுதம்.  அதை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் விதைக்கலாம்.  மனித குலத்தை அழிவுக்கு அழைத்து செல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இராணுவ திட்டமே Chemtrails.  
பற்றி எரியும் வளைகுடா நாடுகள், நரகத்தை நோக்கிப் போகும் உலகப் பொருளாதாரம், அமேரிக்காவை மிரட்டும் Martial Law ஆகியவை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  சவுதி அரேபியாவில் நடக்கும் சண்டையையும், உக்ரேன், சிரியா பற்றிய செய்திகளை படிக்கும் போதே மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டு இருப்பதை அறியலாம்.

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் படித்து பார்த்தீர்களேயானால், அணு ஆயதங்களையும், டாங்கிகளையும் கொண்டு நடக்கும் போராக இருக்காது.  அது தண்ணீர்ப் பஞ்சத்தினால்  நடக்கக் கூடியது.  உணவு உற்பத்தியை அழிக்க நடக்கக் கூடியது.  இந்த இடத்தில் ஒன்று நமக்கு புரியவில்லை, ஏன் மனிதர்களை அழிக்க வேண்டும்.   இதை அறிந்து கொள்ள புதிய உலக ஒழுங்கு New World Order என்றால் என்ன?  Illuminati இல்லுமினாட்டி என்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?  உலகை எவ்வாறு ஒரு சிலர் ஆட்டிப் படைக்கிறார்கள்?  என ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க புதுப் புது முடிச்சுகள் மர்மங்கள் திறந்து கொண்டே இருக்கும்.   இல்லுமினாட்டி பற்றிய எனது கடந்த ஒரு மாத தேடலில் Chemtrail பற்றி அறிந்து கொண்டது தற்செயலான ஒன்று.  மொத்தத்தில் ஜனத்தொகையை எந்தெந்த வழிகளிலெல்லாம் குறைக்க முடியுமோ அவைகளைக் கையாளுவது.  HIV, Ebola, Zika வைரஸ்கள் மட்டும் போதுமா?  மனிதனை அழிக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், கொத்துக் கொத்தாக கொல்லும் ஆயுதங்கள் போன்றவை வெளியில் விவாதிக்கப்படும் அளவு Chemtrails பற்றிய பேச்சே எடுக்கப்படுவதில்லை.  விக்கிபிடீயா Chemtrail ஒரு சதிக் கோட்பாடு என்றே அறிமுகம் செய்கிறது.  அது யார் செய்கிற சதி என்பதே கேள்வி.

உலகில் பல்வேறு சதிக் கோட்பாடுகள் Conspiracy Theories உள்ளன.  நிலவில் மனிதன் கால் வைக்கவே இல்லை, நாம் இந்த கிரகத்தை சேர்ந்தவர்களே இல்லை, டார்வின் பரிணாம அறிவியலே டுபாக்கூர், வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட உலகப் போரை பற்றிய தவறான தகவல்கள், தடுப்பூசியின் உண்மை நோக்கம் என நீண்டு கொண்டே செல்கிறது.  Chemtrailsசும் பத்தோடு பதினைந்தான சதிக் கோட்பாடு என கடந்து சென்றுவிட முடியாது.  இதைப் பற்றிய உண்மைகளை உலகெங்கிலும் இருக்கும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் நிரூபித்து விட்டனர்.   இன்னும் நம் காதுகளுக்குத்தான் வந்தடையவில்லை.  யாராவது சொன்னால்தானே நமக்கும் தெரியும்.  மானாட மயிலாட பார்ப்பதற்கும் சூப்பர் சிங்கருக்குமே நேரம் போதவில்லை.  குழந்தைகளுக்காவது பாடப் புத்தகத்தில் சொல்லித் தருகிறார்களா? அதுவும் இல்லை.   நமக்கு ஊட்டப்பட்ட வரலாறுகள், அறிவியல், மருத்துவம், அரசியல், புரட்சி, மதம் என அத்தனையிலும் உண்மை நிறம் காட்டப்படுவதில்லை, அத்தனையும் திணிக்கப் படுகிறது என்பதே உண்மை.

1958ல் வெளிவந்த ஒரு புத்தகத்திலிருந்து

வானிலையை ஆயுதமாக பயன்படுத்தத் தெரிந்த நாடே ஹைட்ரஜன் குண்டுகளைவிட அதிக வல்லமை கொண்ட வல்லரசாக இருக்கும்.

தற்போது உள்ள அறிவின்படி (1958ல்) ஏழு வழிகளில் வானிலையை உலகளவில் மாற்ற முடியும்

*   ராக்கெட் மூலமான புகை மேகங்களைக் கொண்டு பூமியில் விழும் சூரிய சக்தியை கூட்டவோ குறைக்கவோ இயலும்
*   அயனிமண்டலத்த்தில் (ionosphere) எலக்ட்டரான் வெடிப்புகளின் மூலம் அதன் மின் சக்தியை மாற்ற இயலும்
*   கட்டுப்படுத்தப்பட்ட வெப்பாற்றல் (thermonuclear) மூலம் வான்வெளியின் வெப்பத்தை அதிகரிக்கலாம்
*   வானில் பிரதிபலிப்பான்களின் மூலம் பூமியில் விழும் சூரிய ஒளியின் தாக்கத்தை அதிகரிக்க இயலும்
*   வெப்பத்தை உறுஞ்சும் பொருட்களை பனித் துருவப் பகுதிகளில் தெளிக்கலாம்
*   கடற்பரப்பின் மேல் சாயம், எண்ணை, தாவரங்கள் மூலம் அதன் பிரதிபலிக்கும் தன்மையை மாற்ற முடியும்
*   சமுத்திரங்களின் மேல் இரசாயண பொருட்களை தூவி ஆவியாதலை குறைத்து மழையைத் தடுக்க முடியும்மேலுள்ள புத்தக பக்கத்தினை முழு அளவில் பார்க்க/படிக்க
http://www.geoengineeringwatch.org/wp-content/uploads/2015/10/GeoengineeringWatch-magazine1-.jpg


சரி இயற்கையை மனிதன் வெல்ல முடியுமா?  ஒருநாளும் இயலாது.  இருந்தாலும் முயற்சியை விட்டுவிட முடியுமா.  பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடுத்து கடவுளாக நினைக்கிறான்.  அதற்குத் துணையாக ஏற்கனவே தன்னை மிஞ்சியிருக்கும் ஒரு சக்தியை துணைக்கு அழைக்கிறான்.  நன்மையை விரும்பும் இறைவனோ அனைத்து ஜீவராசிகளுடன் நம்மை இசைந்து வாழச் சொல்கிறான்.  அதற்கு நேரதிர் சக்தியே அனைத்தையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும்.  அதற்கு அசுரர்கள், ஏலியன்கள், சாத்தான், லூசிபர், தஜ்ஜால், இல்லுமினாட்டிகள் என அவரவருக்கு தோன்றும் பெயரை வைத்துக் கொள்ளுங்கள்.   புவி வெப்பமயமாதல், ஓசோன் ஓட்டை, எல் நினோ, சுனாமி, வரலாறு காணாத வறட்சி, சென்னையில் வந்ததுபோன்ற பெருமழை, நிலநடுக்கம் என  நூற்றுக்கணக்கான அன்றாட செய்திகளை கடந்து செல்கிறோம்.   இயற்கையாய் நடப்பது கொஞ்சம் என்றால் செயற்கையாய் பேரழிவுகளை ஏற்படுத்துவது அதிகம் நடக்கிறது.  எங்கப்பா பாமர மொழியில் சொல்லுவார் “தீடீர் தீடிருன்னு ப்ளேட்டு நவறுதுங்குறானுவோ, நிலநடுக்கம் வருதுங்குங்குறானுவோ எவன் எவன் எங்க அணுகுண்டு சோதனை நடத்துறான்னு தெரியில.. அதையெல்லாம் யாரு பார்த்துக்கிட்டு இருக்கா?”  இதே கேள்விகள் நமக்கும் எழுந்திருக்கும்.  மாணவர்களின் தெய்வம் இரமணன் ஐயாவையும், சினிமா புகழ் இடி அமீனையும் நினைத்துக் கொள்வதே நம்மில் பெரும்பாலானோர் அறிந்த வானிலை அறிவு.  இயற்கையின் அறிவு பெற்றிருந்த நம் முன்னோரே மனிதகுலத்திற்கான நல்ல வழிகாட்டிகள்.  கழுத்தில டையையும், வாயில் பொய்யையும் வைத்திருக்கும் மேற்குலக மேதாவிகளின் விபரீத விளையாட்டு உலகிலுள்ள அனைவருக்கும் சமாதி கட்டிவிடும்.  அவர்கள் எதிர்பார்ப்பதும் அதையேதான்.அறுபதுகளின் தொடக்கத்திலேயே வானிலையை கட்டுப்படுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு விட்டனர்.  இப்போது அதன் முன்னேற்றங்களை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் தூக்கம் தொலைத்து விடுவோம்.   பனி உருகுகிறது, எல்-நினோ பஞ்சத்தை கொண்டு வருகிறது என நமக்கு சொல்லப்பட்டது மட்டும்தான் தெரியும், அவை தானாக நடக்கிறதா நடபிக்கப் படுகிறதா என்பது அனைத்தையும் படைத்தவனுக்கே வெளிச்சம்.


பூமியை பலாத்காரம் செய்யும் Chemtrails பற்றி நிறைய இணையத்தில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்.  முடிந்தவரை மற்றவருக்கு சொல்லுங்கள்.  சில உண்மைகள் வாழ்க்கைப் பயணத்தையே திசை திருப்பிவிடும்.  அது நல்ல திசையாக இருக்க வேண்டுமென்று ஏக இறைவனைப் பிரார்த்திப்போம்.

இணைப்புகள்