பொனடிக்(ஒலியியல்) முறையில் தட்டச்சு செய்வதற்கான ஜாவா நிரலை http://groups.google.com/group/freetamilcomputingலிருந்து பதிவிறக்கி சோதிக்கவும். தங்களிடம் JRE இருந்தால் போதுமானது.  நிரலில் மாற்றம் செய்து அதனை மேம்படுத்த jdk 1.2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு வேண்டும்.  தங்கள் கணினியில் Latha (அ) Lohit Tamil யுனிகோட் எழுத்துரு இருக்க வேண்டும்.  அல்லது தங்களுக்கு விருப்பமான யுனிகோட் எழுத்துருவை நிரலில் சுட்டவும்.
நிரல்முழுதும் வெறும் if conditionனும், switch statementதான் நிறைந்திருக்கிருக்கும்.  நீங்கள் ஜாவா புலியாக இல்லாமல் என்னைப்போன்று ஜாவா எலியாகயிருந்தாலும் எளிமையாகக் கற்றுக் கொள்ளலாம்.
a அ     aa A ஆ    i இ      ii I ஈ    e எ    ee E ஏ     ai ஐ    o  ஒ 
oo O ஓ     au ஔ     Q ஃ
க் k g ... ன் n.
nj ஞ்ச்   ng ங்க்  ndh nth ந்த் (Relative consonants)
ka  ga  க    gna; ங    ca  sa   cha ச   gna ஞ     da  ta  ட     Na  n;a na; ண
tha dha d;a t;a  ta; da;  த        na  qna ந       pa  ba  ப     ma  ம   ya  ய   
ra ர      la  ல      va  wa  வ        za  zha ழ       La la;  l;a  ள
r;a ra; Ra  ற      na  ன
 
ki கி   கீ kii kI  கு ku  கூ kuu ......
ha ஹ  sha ஷ     Sa c;a s;a sa; ஸ    க்ஷ ksha  ja ஜ   sri ஸ்ரீ
என்னக் கொடும சரவணன். இதற்குத்தான் தமிழுக்கு ஒவ்வோர் எழுத்திற்கும் தனியிடம்(யுனிகோடில் TUNE, TACE16) கேட்கிறோம்.
தமிழில் ள,ற,ண,ந,த,ஸ ஆகிய வரிசையிலுள்ள எழுத்துக்களை ஒலியியல் (phonetic) முறையில் தட்டச்சு செய்யும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம்.  இதற்கு எளிய மாற்றாக TAM99 விசைப்பலகை வடிவமைப்பை பரிந்துரைப்பதும் உண்டு.  குறுஞ்செய்திகளில் eppadi macchi irukka என்பதுபோல் ஆங்கில எழுத்திலேயே தாய்மொழியில் நலம் விசாரிக்கும் பாசாக்கார பிள்ளைகளுக்கு நிச்சயம் ஒலியியல் தட்டச்சுதான் பிடித்து போகும்.
ஓரளவிற்கு ஒலியியல் முறையிலேயே வேகமாக தட்டச்சு செய்ய ஷிப்ட் விசையை கொஞ்சம் தவிர்த்தாலே போதுமானது.  
நான் எழுதிய ஜாவா நிரலில் ';' விசையை எழுத்துக்களை மாற்றுவதற்கு பயன் படுத்தியிருக்கிறேன்.  
'ள்' தட்டச்சு செய்ய  L என்று உள்ளிடுவதைவிட  l; என உள்ளீடு செய்வது எளிமையாக இருக்குமெனக் கருதுகிறேன்.
இப்படி உள்ளீடு செய்து சோதிக்கவும்:
"பள்ளம்" வார்த்தையை  pal;lam   pall;am  என உள்ளிடலாம்.
கண்ணன்  kann;an  kan;nan 
மஞ்சள்    manjaL  manjal;
நானாக நானில்லை தாயே  naanAga naanillai thaayee
nAnAka nAnillai t;AyE
இந்நிலையில் iqnqnilaiyil   q என்பது பழைய மதிப்பை(prevkey) அழிக்க வைத்திருக்கின்றேன்.
நினைவோ ஒரு பறவை ninaivoo oru par;avai
gangai kangai   sangu   nungu   pangu    vaangu   vankam  thangam  thangai
kur;inji  kaanjipuram  banaaras; பனாரஸ் pattu  kungumam
எடு: உண்டு, வண்டு, கண்டு, உண்டியல், பண்டிகை, கொண்டான், கொண்டை, காண்டீபன்...
ஆகவே இதுபோன்று உள்ளீடு செய்ய uNdu, un;du என உள்ளிடுவதற்கு பதில் undu, kondai, mandu.. என உள்ளிட்டாலே போதுமானது.
ஆகவே onRu என்பதற்கு பதில்  onru என உள்ளிடுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்.
இவை இரண்டு ற்ற் வரும் எல்லா எழுத்துக்களுக்கும் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தும். நீங்கள் என்னை சந்தேகிக்கலாம், நம் மொழியின் இலக்கணத்தை எவர் மறுத்து பேச இயலும்.
 ர்ர் ர்ரு ர்ரி ர்ரா ர்ரை... என வரவே வராது.
                                                                               
ர, ழ இந்த இரண்டு எழுத்துக்களைத் தவிர எல்லா உயிர்மை எழுத்துக்களும்(க,கா,கி,கீ,கை..) தனக்கு முன்னர் அதே மெய்யெழுத்தை பெற்று வரும்(க்).
ச்சா, ச்சி, க்கை, ட்டு ...
ழ்ழா, ர்ரா, ழ்ழி... என வந்தால் தமிழிலணக்கனத்தில் நீங்கள்தான் நூற்றுக்கு நூறு.
orrai என்பதை "ஒற்றை" என வரவழைப்பதில் என்ன சிக்கல். 
மாற்று marru  நேற்று neerru  nEtru 
tr என்பதற்கு ற்ற் போட்டாலும் எளிமைதானே.
குற்றாலம் kutraalam  kurraalam
ஐந்து aindhu   ஷர்மிளா sharmil;aa sharmilaa;
நாதஸ்வரம் naathaswaram   சுஜாதா sujaathaa  ஹரிணி harini;
tth த்த்   முத்தம் muttham   சொத்து sotthu
murugan    ஞானப் பழம் gnaanap pazam.
        லினக்சில் executable jar கோப்பை திறக்க               
                                                                                                   
நிரலை இயக்க                 java TamilPad
compile செய்ய            javac encoding -utf16 TamilPad.java
ஒருங்குறியில் ஸ்ரீ என்பது தனி எழுத்தல்ல.  நான்கு குறியீடுகளால் ஆனது. 
ஸ + ் + ர + ீ --->; ஸ்ரீ   Ligature எனப்படுகிறது (complex symbol).
'ட'கரத்திற்கு முன்னர் 'ண'கரம்தான் வரும் 'ன'கரம் வராது.
அதேபோல் 'ற'கரத்திற்கு முன் ‘ன'கரம்தான் வரும்.
எடு: கன்று, தின்றான், ஒன்று, பன்றி, மன்றம், தென்றல், ஊன்றுகோல், ஏனென்றால்...
indru இன்று   inru  இதுவும் இன்று எனச் சரியாக வரும்.
காற்று kaaRRu  kaatru  kaar;ru  karru
rr அழுத்தினாலே "ற்ற்" என உள்ளீடு செய்து விடலாம்.
     மெய்ந்நிலை  சுட்டின்  எல்லா  எழுத்தும்
    தம்முன்  தாம்  வரூஉம்  ர, ழ  அலங்கடையே
                                                                               -(30வது பாடல்), தொல்காப்பியம்.
நம் மொழியின் தொன்மையான இலக்கணம் அனைத்தையும் நிரலாக்கப் படுத்தினால் எப்படியிருக்கும் என எண்ணிப் பாருங்கள், விழிகள் விரியும்.
right click ---> open with java   
or
      use a custom command
            java -jar             
 
 
Please add tamilish button and add to tamilish now itself.
பதிலளிநீக்குit is a great mistake not to have added tamilish earlier.
Sir
பதிலளிநீக்குThank you for your comment. Later only i have to concentrate on all the things you have said. Now i m busy in searching a job.
அருமையான முயற்சி.
பதிலளிநீக்கு(காரைக்கால் வளர்த்த உதவாக்கரை என இனிமேல் காரைக்காலை யாரும் குற்றம் சொல்ல முடியாது; உங்களால் பிழைத்தேன்; நன்றி)
முன்னனி பதிவர் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமிட்டதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே நினைக்கிறேன். இவ்வளவு லேட்டாவா ஒருத்தர வரவேற்கிறதுன்னு சண்டைக்கு வரக் கூடாது. :)
நீக்குsuper article pa
பதிலளிநீக்குplease give me the exact link to this java file. i cant find pa
பதிலளிநீக்குபின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி பொன்மலர். வேறு எந்த கட்டுரைக்கும் நான் பின்னூட்டங்களை அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பதிவு எவர்க்கேனும் சென்றடைந்ததா என அறிவதில் எனக்கொரு தனி ஆசை. ஜாவாவில் நானாக எழுதிப்பார்த்த தமிழ் நிரல் இது.
பதிலளிநீக்குIs jar file accessible for you? Haven't you noticed its file name itself expose its intention 'source code included'. It is just a compressed java archive file. You can extract using any compression software like Winrar, Winzip etc.,
பதிலளிநீக்குPlease let me know is there any other problem?
please give a direct link to this file. I can't find the file sir
பதிலளிநீக்குThanks for you interest. Unfortunately all files were removed from Google groups and I lost all files in my old (dead) system. I am glad to help you if I can. Please contact me in mail.
நீக்கு