டிசம்பர் 09, 2011

தமிழுக்கு சொல்திருத்தி (Tamil Spellchecker) வந்தாச்சு


சொல்திருத்தி (Spell checker) எந்தவொரு மொழிக்கும் இன்றியமையாத ஒன்று.  வெவ்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு எழுது பொருட்களிலும் கையாளப்பட்ட மொழி இன்று கணினி மூலம் பயன்படுத்தப் படுகிறது.  

எழுத்து வடிவில் மொழியானது கணினி மூலம் பயன் கொள்ளப் படுகிறது (used by computer) எனவும் சொல்லலாம், கொல்லப் படுகிறது (killed by computer) எனவும் சொல்லலாம்.  அந்த அளவிற்கு பிழைகள் மலிந்து இணையத்தில் பயன்படுத்தப் படுகிறது.  ஆங்கில மொழியிலேயே ஆரம்பம் தொட்டு கணினி உருவாகி வருவதால், அந்த மொழிக்கு நல்ல சொல்திருத்தி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.  ஆங்கிலமல்லாத எழுத்துகளை திரையில் தோன்றச் செய்வதே பெரிய வேலையாக இருக்கிறது (எடு: அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் தமிழ் நன்றாகத் தெரிவதில்லை).  

இணையமே இளைஞர்களின் இல்லம் என்றாகிவிட்ட நிலையில், மொழியின் செழுமையைக் காக்க காலத்திற்கேற்ற கருவிகள் தேவைப் படுகிறது.  



தமிழில் திறமூல மென்பொருட்களை 
(opensource tamil applications) உருவாக்கும் தமிழா குழுமம் தமிழுக்கு சொல்திருத்தி வெளியிட்டுள்ளது.

இந்த சொல்திருத்தி தன்னைப் பற்றி இவ்வாறாக கூறுகிறது.

" இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும்.

இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், 2009 ஆம் ஆண்டு,  அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஸ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர்.

2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார்.
 - தமிழா! குழுவினர். "

தற்போது நெருப்புநரி உலாவிக்கும் (firefox browser :)) லிபர் ஆபிஸ் (libreoffice ஓப்பன் ஆபிஸுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது) தொகுப்பிற்கும் நீட்சிகள் (extensions/plugins) கிடைக்கின்றது.


இவற்றை எப்படி நிறுவி இயக்குவதென அடுத்த பதிவில் பார்க்கலாம்.

6 கருத்துகள் :

  1. ஆகா... இனி ஆர்வத்துடன் எழுத வருபவர்கள் தங்கள் சொற்பிழைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
    திருத்தி இன்னும் கொஞ்சம் பழகட்டும்... அதன் திறன் உயரும்.

    பின்குறிப்பு: மேற்கண்ட வரிகளில் தெரிந்தே சில பிழைகள் புகுத்தப்பட்டு அவை சொற்திருத்தியினைக் கொண்டு சரி செய்யப்பட்டன!!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே. முயற்சித்துப் பார்த்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி பொன்மலர்
    நன்றி மணிகண்டன்

    பதிலளிநீக்கு