மார்ச் 29, 2012

தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது


என்னுடைய தளத்திற்கு அவிழ்மடல் (ஆளுங்க) அருண் அவர்கள் லீப்ஸ்டர் ப்ளாக் விருது அளித்துள்ளார்.  சத்தியமா இந்தப் பெயர் கொண்ட விருதை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.  மேலதிக விவரங்களை இந்த http://www.aalunga.in/2012/02/liebester-blog.html சுட்டியில் காணவும்.

  • "Liebester" என்பது ஒரு ஜெர்மன் சொல். அதற்கு "பிடித்தமான" என்று பொருள்
  • இது பதிவர்களால் பதிவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருது.
  • இந்த விருது 200க்கும் குறைவான வாசகர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • விருதின் நோக்கம் புதிதாய் எழுதும் பதிவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதே. 
இந்த விருதினை ஏற்பதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. 
  • விருது பெறுபவர் தனக்கு விருது அளித்தவருக்கு (அவரது தளத்திற்கு இணைப்பு கொடுப்பதன் மூலம்) நன்றி தெரிவிக்க வேண்டும்
  • விருதினை ஏற்றதன் அறிகுறியாக தன் வலையில் விருதைப் பொறிக்க வேண்டும்
  • தான் படித்து ரசிக்கும் ஐந்து புதிய பதிவுகளை அடையாளம் காண வேண்டும் (வலைப்பூக்களுக்கு 200 க்கும் குறைவான வாசகர்கள் (Subscribers) இருக்க வேண்டும்)
  • தான் தேர்வு செய்த பதிவுகளுக்கு விருதினைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். 
  • விருது பெறுபவர்களை ஒரு பதிவின் மூலம் அறிவித்திடல் வேண்டும். 
  • விருது அளிக்கப்பட்டவர்களுக்கு (கருத்திடல் மூலம்) அறிவிக்க வேண்டும்


தமிழ்CPU வழங்கும் லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) விருதினைப் பெறும் தொழில்நுட்பப் பதிவர்கள்:

த. வசந்தகுமார்   பண்ருட்டி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்

கணினியில் இணைய இணைப்பு அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் சற்று சிக்கலானவைதான்.  நம்மில் பெரும்பாலானோர் இணைய இணைப்பு சேவை வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரையே நம்பிக் கொண்டிருப்போம்.  உபுண்டு லினக்சில் டாட்டா ஃபோட்டான் இணைப்பை அமைப்பதற்கான இந்தப் பதிவு தமிழின் சிறந்த தொழில்நுட்ப பதிவுகளுள் ஒன்று.
http://vasanthlimax.blogspot.in/2011/08/tata-photon-whiz-internet-connect.html

D. சரவணன்  குன்றக்குடி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்

இவரது சுயவிவரக் குறிப்பு கண்டதும் எனது முதல் ஆச்சர்யம், இவர் கட்டிடவியல் (Civil engineering) மாணவர்.  கணினி மேல், குறிப்பாக லினக்ஸ் மீது இவர் கொண்ட ஈடுபாடு வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.  சிறந்த கணினித்துறை மாணவனுக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.
http://gnometamil.blogspot.in/2011/03/how-to-restore-default-gnome-desktop.html

இரா. கதிர்வேல்  பேராவூரணி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்

இவரைப் பற்றி நான் சொல்வதைவிட இவரது சுயவிவரக் குறிப்பு நன்கு தெளிவு படுத்தும். தமிழ் ஆர்வலர், திறமூல மென்பொருள் ஆர்வலர், சமூக நலன் விரும்பி எனப் பலப் பரிமாணங்களில் அடையாளப் படுத்தலாம்.  இவர் ஆசிரியராக வாய்க்கப் பெற்றால் மாணவர்களுக்கு வரம்தான்.
http://gnutamil.blogspot.in/2011/10/blog-post.html

பா. மணிகண்டன்  காரைக்குடி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்

லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் என தன்னடக்கத்துடன் தன்னை விவரிக்கும் இவர் ஒரு சிறந்த லினக்ஸ் ஆசிரியர் எனக் கூறலாம்.  ஜாவா மொழியில் நிரல் எழுத உதவும் எக்லிபிஸ் மென்பொருள் குறித்த எனது பதிவு தனக்கும் தன் நண்பர்களும் பயன் பட்டதாகக் கூறியிருந்தார்.  அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி என்கிற சம்பிரதாய பின்னூட்டங்கள் இல்லாமல், ஏதோ புதிதாய் ஒன்றை கற்றுக் கொண்டதன் மகிழ்ச்சி இவரது பின்னூட்டத்திலும் தன் நண்பர் கதிர்வேல் பின்னூட்டத்திலும் உணர முடிந்தது.  நான் ஒரு பகுதிநேரப் பதிவராய் இருப்பதில் பெருமிதம் கொள்ள வைத்த இவர்கள் என்றும் என் நினைவிலும், அன்பிலும் உள்ளவர்கள்.
http://kaniniariviyal.blogspot.in/2010/04/blog-post_94.html

R. அருள்மொழி  திருவண்ணாமலை
ஆசிரியர் / விரிவுரையாளர்

ஒரு சிறந்த ஆசிரியர் இல்லாமல் சிறந்த மாணவர்கள் உருவாகுவதில்லை.  மேலே குறிப்பிட்டது போன்ற பல சிறந்த மாணவர்களை உருவாக்கும், வணக்கத்திற்கும் நன்றிக்கும் உரிய ஆசிரியர்.  உபுண்டு லினக்ஸுக்கெனவே தமிழில் தனித்துவ வலைப்பதிவு எழுதி வருவது சிறப்பு.
http://ubuntuintamil.blogspot.in/2012/01/iso.html

8 கருத்துகள் :

  1. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. அனைத்து பதிவர்களுமே சிறந்தவர்கள்தான்..
    நட்புடன்
    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு
  3. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ஆயிரமாயிரம் நன்றிகள்.
    மனம் கொள்ளாதா அளவிற்க்கு மகிழ்ச்சியடைந்தேன். உங்களது சேவை மிகவும் பெருமைக்குரியது. இது போன்ற ஊக்குவிப்புகள் எங்களைத் தொடர்ந்து மகிழ்ச்சியாக பணிபுரிய இட்டுச்செல்லும்.

    நான் பெறும் முதல் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விருது கொடுக்கப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் பெரியார் மணியம்மை பலகலைக்கழக மாணவர்கள். மென்மேலும் மகிழ்ச்சி.

    இதுபோன்ற ஊக்குவிப்புகள்தான் எங்களை மன மகிழ்வுடன் எழுத வைக்கிறது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. விருது வழங்கியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு