மே 03, 2012

மொபைல் மென்பொருள் உருவாக்கம் - வெப் டிசைனர்கள் கவனத்திற்கு...

மொபைல் மென்பொருள் உருவாக்கத்தில் சந்திக்கும் மிகப்பெரிய சவால் வெவ்வேறு வகையான மொபைல்களுக்கு தீர்வுகள் வழங்குவது. ஒவ்வொன்றும் ஒருவகை. ஆண்ட்ராய்ட், ஐபோன், நோக்கியா, கீக்கியா என ஆயிரத்தெட்டு வகைகளுக்கும் அத்தனை விதமாக புரொகிராம் எழுதினால் எங்கே போவது? அனைத்து மொபைல் பயனாளர்களையும் உள்ளடக்கா விட்டாலும் குறைந்தது எந்தளவு அதிகமாக் கொண்டு சேர்க்க வேண்டுமோ அந்தளவிற்கு சிக்கல்களும் பொருட்செலவும் மிகுந்ததாக இருக்கும். பயனர்களுக்கு தான் எந்த இயக்கச் சூழல் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்களுக்குத் தேவை தீர்வுகள் மட்டுமே. எடுத்துகாட்டிற்கு விண்டோசில் பயன்படுத்தும் ஃபயர்பாக்ஸ், குரோம், லிபர் ஆப்பிஸ், வி.எல்.சி போன்ற மென்பொருட்களின் அதே வசதிகள் லினக்ஸ், யுனிக்ஸ், மேக் என எல்லாக் கணினிகளிலும் கிடைக்கிறது. இதே விதி மொபைல் பயன்பாடுகளுக்கும் பொருந்தும். ஐபோனில் ஆங்க்ரி பேர்ட்ஸ் கிடைக்கும்போது ஆண்ட்ராய்ட் பயனாளர்களும் அதை எதிர்பார்ப்பது இயற்கைதானே. இவ்வாறான தேவைகள் மொபைல் சாதனங்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தை சிக்கல் நிறைந்ததாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் ஆக்கி விடுகிறது.

எடுத்துகாட்டிற்கு ஒரு வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் தீர்வுகளை தர விழைந்தால், குறிப்பிட்ட மொபைல் வைத்திருப்பவர்களுக்கு (ஐபோன் மட்டும்) மட்டும் தர விரும்பாது. தனக்கு ஆண்ட்ராய்ட், ஐபோன் இரண்டிலும் வேண்டுமென ஒரு மென்பொருள் நிறுவனத்தை அணுகும்போது அதற்கேற்ப கூடுதல் செலவு பிடிக்கும். எனக்கு ஐபோனில் உள்ளதை ஆண்ட்ராய்டுக்கு மாற்றிக் கொடு, அதிலிருப்பது இதிலும் வேண்டும் என வரும் பிராஜெக்டுகளே அதிகம். ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்ட்டில் பணியாற்றக் கூடிய குழுவையும், ஐபோனுக்கு பணியாற்றும் வேறொரு குழுவையும் நிர்வகிப்பது பெரிய தலைவலி பிடித்த வேலை. காரணம் ஒன்றில் உருவாக்குவது மற்றொன்றில் அப்படியே வேலை செய்யாது. சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமென்றால் வெவ்வேறு மொபைல்களுக்கு வேறுபாடே இல்லாமல் போயிருக்கும்.



ஆண்ட்ராய்டுக்கு மென்பொருள் உருவாக்க விண்டோஸ், லினக்ஸ், மேக் என எந்தக் கணினியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐபோன், ஐபேட் ஆகியவற்றுக்கு மேக் ஓ.எஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக் ஓ.எஸ் இயங்கு தளத்தை நினைத்த கணினியிலெல்லாம் நிறுவிட முடியாது. அதற்கென பிரத்யேக கணினிகளை வாங்க வேண்டும். அதில் பயன்படுத்தும் மென்பொருள் உருவாக்க கருவிகளிலிருந்து புரொகிராமிங் மொழி வரை ஒவ்வொன்றும் மாறுபடுகிறது. இந்த சிக்கல்களை தீர்க்க வல்ல ஒரு ஓப்பன்சோர்ஸ் தீர்வே ஃபோன்கேப். மொபைல் மென்பொருள் உருவாக்கத்தில் இருக்கும் இடைவெளியை குறைக்க ஃபோன்கேப் முனைகிறது. எப்படி எச்.டி.எம்.எல் லில் உருவாக்கும் இணையப் பக்கம் விண்டோஸ், லினக்ஸ், மேக் என அனைத்து இயக்கச் சூழல்களிலும் இயங்குகிறதோ, அதே தொழில்நுட்பத்தை மொபைல் மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது வெப் டெவலப்பர்களுக்கு எவ்வளவு இனிப்பான செய்தி?!. தங்களது html, css, javascript திறமைகளை அப்படியே மொபைல் மென்பொருள் உருவாக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் மொபைலில் இருக்கும் கேமரா, முகவரிகள் போன்ற வசதிகளையும் ஜாவாஸ்கிரிப்ட் மூலமாகவே அணுக முடியும். இணைய பக்கங்களை உருவாக்க உதவும் எந்த மென்பொருட்களையும் (Dreamweaver, Visual Studio, Eclipse etc...) இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

6 கருத்துகள் :

  1. பெயரில்லாமே 03, 2012

    ஃபோன்கேப் - இன்று தான் தெரிந்தது நண்பா

    பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜூன் 18, 2012

    அருமையான தொகுப்பு !

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜூன் 18, 2012

    அருமையான தொகுப்பு !

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஆகஸ்ட் 30, 2012

    hi Rajkumar,
    ur notes for the tamizhans are very useful, we really thankful for this...and i want to know about the ethical hacking (white), could u pls help me.

    Thanks & Regards,
    Rudhresh
    Jai hind......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks Rudhresh. I have no idea about ethical hacking. I just know its the technique of knowing all loop holes in a system to prevent cyber attacks and to fix it. To be a good hacker you need thorough understanding of basic concepts. all the best.

      நீக்கு
  5. பெயரில்லாஅக்டோபர் 16, 2013

    how to download and install phonegap please mail me blueboykarthi@gmail.com

    பதிலளிநீக்கு