அக்டோபர் 18, 2015

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்

புதுக்கோட்டையில் இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு 2015 விழா குறித்து அனேக பேர் தத்தம் வலைப்பூவில் குறிப்பிட்டிருப்பீர்கள்.  தங்களால் இயன்ற நன்கொடையும் அனுப்பி வைத்திருப்பீர்கள்.  விழா பிரமாண்டமாக நடந்தது என்பது கலந்து கொண்டவர்களுக்கும், காணொளியை (வீடியோ) இணையத்தில் கண்டவர்களுக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இணையத்தில் அண்மை காலமாக பதிவுகளைப் படிக்காத நிறைய பதிவர்களுக்கு இப்படியொரு விழா நடந்ததே தெரிய வாய்ப்பில்லை.   விழா தொடங்குவதற்கு முன்னர் விழா அழைப்பிதழ்களை நம் வலைப்பூக்களில் ஒட்டி மகிழ்ந்தோம்.  விழாவிற்கான செலவு வரவைவிட அதிகமானதால்,  மன்னிக்கவும்.  செலவைவிட வரவு குறைவானதால் உரிமையுடன் விழாக் குழுவினர் நம் உதவிகளை நாடுகின்றனர்.   நம்மால் ஆன சிறு துரும்பு உதவியாகினும் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.

குசும்பு:  பதிவர்களின் உரிமையை மீட்க கட்சி ஆரம்பித்தாலும் வியப்புற ஒன்றுமில்லை

  


விழா குழுவினர்கள் அல்லும் பகலும் விழாவுடைய வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.  ஒரு சில குறைகளென அவரவருக்கு தோன்றினாலும், ஒரு நிமிடம் சொந்த விருப்பு வெறுப்பையெலாம் ஒதுக்கிப் பார்த்தால் நமது குறை பெரிதாகவே தெரியாது.   குறை என்ற ஒன்று சொல்ல வேண்டுமே என்பதர்க்காக சொல்கிறேன், கலந்து கொண்ட அனைவருக்கும் இருந்த பெரிய குறை ஒருநாள் போதாது என்பதே அது.   ஒரு நாளைக்கே, அனைத்தையும் செம்மையுற செய்ய எவ்வளவு திட்டமிடல், உழைப்பு, அவரவர் நேரம், நிதி அத்தனையும் வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  முதல் நாளே சென்றதால் ஒரு சில ஐயப்பாடுகள் விழாக் குழுவினரிடம் இருந்ததை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அனைவரையும் மேடையேற்ற நேரமிருக்காது என்பதே அது.  அதற்கு அவர்கள் கண்ட முதல் தீர்வு விழா குழுவினர்களுக்கு அறிமுகம் தேவையில்லை எனும் தீர்மானம்.  பதிவர் அறிமுகத்தில் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டால் கூட (300 நிமிடங்கள்) பதிவர் அறிமுகத்துக்கே 5 மணி நேரம் போதாது.  நான் எனது அறிமுகத்திற்கு மேடையில் இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டேன் என்பது வேறு சேதி (ச்சை இதெல்லாம் ஒரு பொழப்பு… திட்டுங்க வாங்கிக்கிறேன்).விழா குழுவினரில் பலர் வேலைக்கு விடுப்பு எடுத்து, சொந்த அலுவல்களையெலாம் ஒதுக்கி வேலையை அல்ல, சேவையை செய்திருக்கிறார்கள்.

சனிக்கிழமை இரவு திண்டுக்கல்லில்  இருந்து வந்திருந்த தனபாலன் ஐயா (திண்டுக்கல் புதுக்கோட்டைக்கு அருகாமை மாவட்டமோ இல்லையோ, அந்த ஊர் பெரியவர் ஒருவர் :) அனைவர் மனதிற்கும் அருகாமையில் இருப்பவர்) அவரிடம் கேட்டேன் “என்ன காலையிலேயே வந்துட்டீங்களா???”, “யப்பா, அவரு நேத்தே வந்துட்டாருப்பா..” என ஒரு குரல்.


முதல் நாள் இரவு விழாக் குழுவினரின் மொத்த கவலையும், அனைவரையும் திருப்தி படுத்துவது எப்படி என்ற கேள்வியாகவே இருந்தது.  நம்மில் ஒருவராலும் எல்லோரையும் நிறைவு செய்ய இயலாது.  அதற்கு முயற்சித்தால் தோற்று விடுவோம் என்பது வாழ்க்கை விதி.கையேட்டிற்கு எழுதி அனுப்பிய தகவல்கள், கையேட்டில் இடம் பெறவில்லை என ஒருவர் (ஒருவரல்ல, இன்னும் பலர்) வருத்தம் கொண்டிருந்தார்.  இரத்திணச் சுருக்கமாக இருந்த குறைந்த அளவு அறிமுகத்திற்கே இவ்வளவு பக்கங்கள் வந்திருக்கிறதென்றால், நீட்டி இழுத்திருந்தால் தயாரிப்பு செலவுகள் இன்னும் ஏறியிருக்கும்.

போனது போகட்டும், விழா அழைப்பிதழ்களை பதிவேற்றிய நாம் விழாவிற்கான நன்கொடை அழைப்பையும் நம் வலைப்பூக்களில் பகிர்வோம்.

 படம் பார்த்து கதை சொல்லவும்.

கீழ்க்காணும் HTML வரிகளை தங்கள் வலைப்பூவில் சேர்த்துக் கொள்ளவும்
<a style="font-size:13pt" href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html">
 வலைப்பதிவர் திருவிழா - 2015</a>

<a href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_17.html">
  <img src="http://1.bp.blogspot.com/-y5ub3IXIFZI/Vh6ymRXIV3I/AAAAAAAAFR8/rFR982fpnW8/s1600/Guide%2Bwrapper.jpg"/>
</a>
 
நமது வலைப்பூக்களால் பயன் பெற்ற ஓரிருவர் பதிவர் கையேட்டை வாங்கினால் கூட, அடுத்த வருட விழா இன்னும் சிறப்பாக இருக்கும்.  அடுத்த வருடம் போட்டி போட்டுக் கொண்டு எந்த மாவட்ட (மாவட்டம் என்பதைவிட மண்டலம் என்பது மிக பொருந்தும்) பதிவர்கள் உழைக்க போகிறார்களோ தெரியவில்லை, ஆனால் வெற்றிகரமாக நடந்தி முடித்தவர்கள் சோர்வடைந்தால்… ச்சே நாமெல்லாம் என்னதுக்கு பதிவு எழுதுறோம் இல்ல வாசிக்கிறோம் (வசிக்கிறோம் குறில் அல்ல, வாசிக்கிறோம் நெடில்)

11 கருத்துகள் :

 1. Gadget இணைத்து விட்டேன்... நன்றி தோழர்...

  பதிலளிநீக்கு
 2. பதிவை ரசித்தேன் !
  நாம் சந்தித்து இதற்குள் ஒரு வாரமாச்சா ,ராஜ் குமார் ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க அப்பா வைத்த பெயரை மாற்றதீர்கள். நான் ராஜ்குமர்ஜி இல்லை, வெறும் ராஜ்குமார் தான். தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வலையுலகில் இருக்கும் ஒரு மூத்த பதிவர தெரியாதுனுட்டியேடா என நீங்கள் முனகும் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. மன்னிச்சிடுங்க...

   நீக்கு
 3. நன்றி நண்பரே. எதார்த்தமாக யோசித்து, செயல்படுத்தியதை எதார்த்தமாகப் பார்த்து எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
  தங்களது வலைப்பக்கத்தின் வலது மூலையில் சேமித்திருக்கும் “தமிழ்வலைப்பதிவர் கையேட்டை வாங்கிக் கொள்ளுங்கள்“ எனும் குறிப்புடன் அதனை எப்படித் தத்தம் வலைப்பக்கத்தில் ஏற்றுவது என்ற குறிப்பை எனக்கு அனுப்பினால் அதையே ஒரு பதிவாக இட்டு, நண்பர்களை வலையேற்றச் சொல்லி -தங்களுக்கும் நன்றி சொல்லி- ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன். உதவ முடியுமா நண்பா? அப்புறம், தங்கள் தளத்தைப் பின்பற்றுவோர் பெட்டியை இணைத்திருக்கலாமே? இணைக்காததன் காரணம் சொன்னால் தெரிந்து கொள்வேனே? (இதுபோல எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு. நான் படித்தது தமிழிலக்கியம். ஆர்வத்தின் காரணமாகவே எந்தக் கணினி வகுப்புக்கும் போகாமல் கற்றுக்கொண்டு, சந்தேகம் வந்தால் அவ்வப்போது பயிற்சி வகுப்பு நடத்தி எனது சந்தேகத்தைப் பொதுமைப் படுத்தி கணினி வல்லாரை அழைத்துப் பயிற்சி தரச்சொல்லி தெரிந்துகொள்வேன். இப்படித்தான் வண்டி ஓடுது!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கையேட்டை வாங்கிக் கொள்ளுங்கள்" குறிப்பை தங்கள் வலைப்பக்கதில் ஏற்றுவது குறித்து விரிவான மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை என வருந்துகிறேன்.
   // .. தளத்தைப் பின்பற்றுவோர் பெட்டியை இணைத்திருக்கலாமே?
   வலைப்பூ தொடங்கிய நாட்களில் இவ்வசதியை இணைத்திருந்தேன். ஒவ்வொரு வாரமும் எவரேனும் புதிதாகத் தொடர்ந்திருந்தால் என் மகிழ்ச்சி சொல்லி மாளாது. துறை சார்ந்த பதிவுகளையே அதிகம் படிக்க விரும்புவதால் மற்ற வலைப்பூக்களை நான் தொடருவதில்லை. நான் செய்யாததை அடுத்தவரிடம் எதற்கு எதிர்பார்க்க வேண்டுமென்ற தெளிவே அதை நீக்க உதவியது. பின்னூட்ட வசதியை நீக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்பு கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள் எப்படியும் தொடர்பு கொள்வார்கள். தொழில்நுட்ப பதிவு எழுதும்வரைதான் பின்னூட்ட பெட்டி இருக்கும். பொதுப் பதிவுகள் எழுதத் தொடங்கினால் நிச்சயம் நீக்கி விடுவேன்.

   நீக்கு
 4. நன்றி..ராஜ்குமார்..முன்னிரவு உங்களை சந்தித்தேன்....நான் வலைப்பூ உலகுக்கு கிட்டத்தட்ட புதுமுகம் தான்..உங்களைப்போன்றோரின் ஆர்வம் மிரள வைக்கிறது..நிறைய பேசியிருக்கலாம்...உறுத்துகிறது..தோழா...பின்னொரு முறை பேசுவோம்....நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ முன்னிரவு சந்தித்தீர்களா. மன்னிக்கவும், என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஒவ்வொருத்தரா குழு போட்டோக்களை எடுக்கும் போது எனக்கும் கூட நிற்கனும்னு ஆசைதான் ஆனா அங்கிருந்த ஒருவரைக் கூட நான் முன்னர் அறிந்திருக்கவில்லை என்பதே தயக்கமாகிவிட்டது. அடுத்த சந்திப்பில் அளவுலாவுவோம். ஒவ்வொருத்தர் பதிவா படிக்க வரேன், உடனே வரலைன்னு கோபித்துக் கொள்ளாதீர்கள். :)

   நீக்கு
 5. அங்க அடையாளத்தோடு சொல்லுமளவுக்கு
  என் அகத்தை (அகந்தையை அல்ல)
  படம்பிடித்து சொன்ன தங்களின் நடை சிறந்ததே..
  நன்றி..

  (கோவைக்காரர்தானே நீங்களும்..
  ஒரு வேளை...!!!!
  நீங்களும் கோவக்காரரோ என்று ஒரு தயக்கம்தான்,, அன்பரே)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நான் கோவக்காரந்தான், கோவைக்குதான் புதிது. சொந்த ஊர் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திலுள்ள எருக்கட்டாஞ்சேரி கிராமம். சென்னையில் மூன்று வருடங்களுக்கு மேல் பணி புரிந்து விட்டு, தற்போது நாடோடியாக வந்து சேர்ந்திருக்கும் இடம் கோவை. (வந்து 8 மாத காலம் ஆகிறது)
   இயற்கை சூழ் சேர மண்டலம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெயில் மண்டைய பிளக்கும் உங்க ஊர்ல் மனுசன் இருப்பானா? உங்களைப் போன்ற தெய்வங்களே இருக்கும்.

   நீக்கு
 6. மிக்கநன்றி சகோ...ஒதுங்கியே அமர்ந்திருந்த நீங்கள் இத்தனையையும் கவனித்து எழுதியுள்ளமைக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரையும் தெரியாத கூட்டம் என்பதே அந்த தயக்கம். வேறொன்றும் இல்லை.

   நீக்கு