அக்டோபர் 18, 2015

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்

புதுக்கோட்டையில் இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு 2015 விழா குறித்து அனேக பேர் தத்தம் வலைப்பூவில் குறிப்பிட்டிருப்பீர்கள்.  தங்களால் இயன்ற நன்கொடையும் அனுப்பி வைத்திருப்பீர்கள்.  விழா பிரமாண்டமாக நடந்தது என்பது கலந்து கொண்டவர்களுக்கும், காணொளியை (வீடியோ) இணையத்தில் கண்டவர்களுக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



இணையத்தில் அண்மை காலமாக பதிவுகளைப் படிக்காத நிறைய பதிவர்களுக்கு இப்படியொரு விழா நடந்ததே தெரிய வாய்ப்பில்லை.   விழா தொடங்குவதற்கு முன்னர் விழா அழைப்பிதழ்களை நம் வலைப்பூக்களில் ஒட்டி மகிழ்ந்தோம்.  விழாவிற்கான செலவு வரவைவிட அதிகமானதால்,  மன்னிக்கவும்.  செலவைவிட வரவு குறைவானதால் உரிமையுடன் விழாக் குழுவினர் நம் உதவிகளை நாடுகின்றனர்.   நம்மால் ஆன சிறு துரும்பு உதவியாகினும் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளலாம்.

குசும்பு:  பதிவர்களின் உரிமையை மீட்க கட்சி ஆரம்பித்தாலும் வியப்புற ஒன்றுமில்லை

  


விழா குழுவினர்கள் அல்லும் பகலும் விழாவுடைய வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.  ஒரு சில குறைகளென அவரவருக்கு தோன்றினாலும், ஒரு நிமிடம் சொந்த விருப்பு வெறுப்பையெலாம் ஒதுக்கிப் பார்த்தால் நமது குறை பெரிதாகவே தெரியாது.   குறை என்ற ஒன்று சொல்ல வேண்டுமே என்பதர்க்காக சொல்கிறேன், கலந்து கொண்ட அனைவருக்கும் இருந்த பெரிய குறை ஒருநாள் போதாது என்பதே அது.   ஒரு நாளைக்கே, அனைத்தையும் செம்மையுற செய்ய எவ்வளவு திட்டமிடல், உழைப்பு, அவரவர் நேரம், நிதி அத்தனையும் வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  முதல் நாளே சென்றதால் ஒரு சில ஐயப்பாடுகள் விழாக் குழுவினரிடம் இருந்ததை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அனைவரையும் மேடையேற்ற நேரமிருக்காது என்பதே அது.  அதற்கு அவர்கள் கண்ட முதல் தீர்வு விழா குழுவினர்களுக்கு அறிமுகம் தேவையில்லை எனும் தீர்மானம்.  பதிவர் அறிமுகத்தில் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டால் கூட (300 நிமிடங்கள்) பதிவர் அறிமுகத்துக்கே 5 மணி நேரம் போதாது.  நான் எனது அறிமுகத்திற்கு மேடையில் இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டேன் என்பது வேறு சேதி (ச்சை இதெல்லாம் ஒரு பொழப்பு… திட்டுங்க வாங்கிக்கிறேன்).



விழா குழுவினரில் பலர் வேலைக்கு விடுப்பு எடுத்து, சொந்த அலுவல்களையெலாம் ஒதுக்கி வேலையை அல்ல, சேவையை செய்திருக்கிறார்கள்.

சனிக்கிழமை இரவு திண்டுக்கல்லில்  இருந்து வந்திருந்த தனபாலன் ஐயா (திண்டுக்கல் புதுக்கோட்டைக்கு அருகாமை மாவட்டமோ இல்லையோ, அந்த ஊர் பெரியவர் ஒருவர் :) அனைவர் மனதிற்கும் அருகாமையில் இருப்பவர்) அவரிடம் கேட்டேன் “என்ன காலையிலேயே வந்துட்டீங்களா???”, “யப்பா, அவரு நேத்தே வந்துட்டாருப்பா..” என ஒரு குரல்.


முதல் நாள் இரவு விழாக் குழுவினரின் மொத்த கவலையும், அனைவரையும் திருப்தி படுத்துவது எப்படி என்ற கேள்வியாகவே இருந்தது.  நம்மில் ஒருவராலும் எல்லோரையும் நிறைவு செய்ய இயலாது.  அதற்கு முயற்சித்தால் தோற்று விடுவோம் என்பது வாழ்க்கை விதி.



கையேட்டிற்கு எழுதி அனுப்பிய தகவல்கள், கையேட்டில் இடம் பெறவில்லை என ஒருவர் (ஒருவரல்ல, இன்னும் பலர்) வருத்தம் கொண்டிருந்தார்.  இரத்திணச் சுருக்கமாக இருந்த குறைந்த அளவு அறிமுகத்திற்கே இவ்வளவு பக்கங்கள் வந்திருக்கிறதென்றால், நீட்டி இழுத்திருந்தால் தயாரிப்பு செலவுகள் இன்னும் ஏறியிருக்கும்.

போனது போகட்டும், விழா அழைப்பிதழ்களை பதிவேற்றிய நாம் விழாவிற்கான நன்கொடை அழைப்பையும் நம் வலைப்பூக்களில் பகிர்வோம்.

 படம் பார்த்து கதை சொல்லவும்.





கீழ்க்காணும் HTML வரிகளை தங்கள் வலைப்பூவில் சேர்த்துக் கொள்ளவும்
<a style="font-size:13pt" href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html">
 வலைப்பதிவர் திருவிழா - 2015</a>

<a href="http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_17.html">
    <img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfFOuN-2YtDDinVibq-LcUe7rHO1m3sH-0e1xNW5R5UfqiAUBB-E4GbkEtvT_ZqZSRB8xa_W9g4u2caGRBzawhVp7ZvADcAUEQwF4jlPO34bB4BPEC1NAuvJNu60fBgGQ0k15jEStdvKgl/s1600/Guide+wrapper.jpg"/>
</a>
 
நமது வலைப்பூக்களால் பயன் பெற்ற ஓரிருவர் பதிவர் கையேட்டை வாங்கினால் கூட, அடுத்த வருட விழா இன்னும் சிறப்பாக இருக்கும்.  அடுத்த வருடம் போட்டி போட்டுக் கொண்டு எந்த மாவட்ட (மாவட்டம் என்பதைவிட மண்டலம் என்பது மிக பொருந்தும்) பதிவர்கள் உழைக்க போகிறார்களோ தெரியவில்லை, ஆனால் வெற்றிகரமாக நடந்தி முடித்தவர்கள் சோர்வடைந்தால்… ச்சே நாமெல்லாம் என்னதுக்கு பதிவு எழுதுறோம் இல்ல வாசிக்கிறோம் (வசிக்கிறோம் குறில் அல்ல, வாசிக்கிறோம் நெடில்)