செப்டம்பர் 18, 2010

மென்பொருள் விடுதலை நாள்

மென்பொருள் விடுதலை நாள்
Software Freedom Day 2010

நாள்:   18-09-2010 சனிக்கிழமை
இடம்: பிர்லா கோளரங்கம், கோட்டூர்புரம், சென்னை.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

         இன்று உலகெங்கும் உள்ள கணிப்பொறி/மென்பொருள் ஆர்வலர்கள் பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய நாள்.  ஒரு மென்பொருளை பயன்படுத்துவதற்கு எந்தவொரு குற்ற உணர்வுமில்லாமல் நம் விருப்படி பயன்படுத்த உரிமையளிக்கும் கட்டற்ற திறமூல கொள்கையைக் கொண்டாட ஒரு விழா.  இதனை உலகெங்கிலும் கொண்டாட பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள்.. ஏற்பாடு செய்திருக்கின்றன.  நம் சிங்கார சென்னையில் சென்னை லினக்ஸ் பயனர் குழு இவ்விழாவினைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கலந்து கொள்ள முடிபவர்கள் கலந்து கொண்டு பயனடையளாமே.

சென்னையில் விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.  விழா ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓப்பன் சோர்ஸ் - விளக்கம்: புதியவர்களுக்காக ஒரு புதிய கோணத்தில்இவன்,
ந.ர.செ. ராஜ்குமார்
http://tamilcpu.blogspot.com

6 கருத்துகள் :

 1. எங்கள் நிறுவனத்தில் சிறப்பாக கொண்டாடினோம். உங்க ஊர்ல கொண்டாட்டம் எப்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் தாமதமாக படித்துவிட்டேன். அதனால் என்ன அடுத்த ஆண்டு அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்!!!

  நன்றி தோழர் ந.ர.செ. ராஜ்குமார் அவர்களே!!!

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் கடைசி நேரத்தில்தான் தெரிய வந்ததது(kaniporul.blogspot.com). யாராவது தமிலிஷில் செய்தி வெளியிட்டிருக்கலாம். விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். நீங்கள் கட்டுமானத் துறை மாணவராக இருந்தாலும் லினக்சில் ஆர்வம் காட்டுவது மற்றவருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும். உங்கள் துறை சார்ந்த பதிவுக்கும் வாசகர்கள் காத்திருக்கிறார்கள். அது எப்போது?

  பதிலளிநீக்கு
 4. வணக்கம். நான் இளங்கலை நுண்கலை (B.F.A) முடித்துள்ளேன். தற்போது animator ஆக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு opensource Software's பற்றி தங்களது மட்டும் தங்களை ஒத்த நண்பர்களிளின் பதிவுகள் மூலம் நீண்ட காலமாக அறிமுகமும் ஆர்வமும் உண்டு. நான் ஸ்கிரிப்ட் கற்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எதிர்கால கணினி துறை தேவைகள் பற்றி தங்களது பதிவின் மூலம் அறிந்தேன் மிகவும் நன்றி, நான் கற்றுக்கொள்ள வேண்டிய நிரல் மொழி அல்லது மொழிகள் பற்றியும் தயவு செய்து பகிரவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் பின்னூட்டம் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் நிரலாக்கத்திற்கு முற்றிலும் புதியவராதலால், கடினமான மொழிகளை விடுத்து எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய மொழியிலிருந்து துவங்கலாம். HTML5 நன்கு கற்றுக் கொள்ளுங்கள். பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. மொபைல் சாதனங்களுக்கான இணையப் பக்கம் வடிவமைத்தலிற்கும், மென்பொருள் உருவாக்குவதற்கும் ஏகப்பட்ட நபர்கள் தேவைப்படுகிறார்கள். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் மொழியில் எவ்வாறு அனிமேஷன் செய்திருக்கிறார்கள் என்பதை http://www.chromeexperiments.com/ சுட்டியில் காணுங்கள். தங்களது வரவிற்கு மிக்க நன்றி.

   நீக்கு