டிசம்பர் 07, 2010

தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி?

தமிழ் நாட்காட்டி

ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லை.  
 
ஆனால் இன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.  இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது.  என் அம்மாவுக்கு என் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார்.



நம்ம ப்ரியாவோட கல்யாணமா அது மாசி 10ந்தேதி எனச் சொன்னால், நம்மிடம் 2011 நாட்காட்டி இருந்தால் ஆங்கில தேதியை தெரிந்து கொள்ளலாம் இல்லை புது நாட்காட்டி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  இதுவே ஒரு தேதி என்ன கிழமை எனக் கேட்டால் கணக்கில் மேதாவியாக இருப்பின் ஒரு காகிதமும் பேனாவும் போதும், அல்லது கணிப்பொறியின் உதவியுடன் துல்லியாமாக சொல்லிவிட முடியும்.   



கணித சமன்பாடுகள் எதையுமே கணினியில் ஏற்றி வேலைகளை எளிமை படுத்த முடியும்.  ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலை முதல் வின்னில் செலுத்தும் செயற்கைகோள் வரை அனைத்தும் கணிதம்தான் என்பதை அறிவோம்.  இந்த வரிசையில் ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியும், தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியையும் கணக்கிடும் சூத்திரம் தெரிந்தால் எளிதாக கணினியிலும் ஏற்றி விடலாம்.   இணையத்தில் இப்பணியைச் செய்து முடிக்க சில இணையதளங்கள் உள்ளன. 



http://www.prokerala.com/general/calendar/tamilcalendar.php
http://www.tamil-calendar.com 
http://www.barathonline.com/Articles/TamilCalendar2010.htm
http://tamildailycalendar.com/

கணக்கிடும் முறையை பெரும்பாலும் பகிர்ந்து கொள்ளப் படாததால் நிறைய நிரல்கள் நம்மிடம் இல்லை.  இது நமக்கு தெரிந்தால் டெஸ்க்டாப்பிலேயே தமிழ் நாட்காட்டி வைத்துக் கொள்ள இயலும், செல்பேசிகளில் பயன்படுத்தும் வண்ணம் சிறு மென்கலங்களை உருவாக்கலாம், இன்னும் நம் கற்பனை எல்லைகளை நீட்டிக் கொள்ள இயலும்.   இணையத்தில் எவ்வளவு தேடியும் தமிழ் தேதி கணக்கீட்டு முறையை அறிந்து கொள்ள முடியவில்லை.  இதனைக் குறித்து அறிந்தவர்கள் தகுந்த சுட்டியோ அல்லது விளக்கமோ அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

8 கருத்துகள் :

  1. பெயரில்லாஜூலை 16, 2011

    கடைசி வரைக்கும் கிரிகோரியன் (ஆங்கில) தேதியை, எப்படி தமிழ் தேதியாக மாற்றுவது என்றே சொல்லவில்லையே, நண்பரே! :(

    பதிலளிநீக்கு
  2. சந்திர நாட்காட்டி, சூரிய நாட்காட்டின்னு சில தகவல்கள் மட்டும் கிடைத்தது, அதற்குமேல் செல்ல முடியவில்லை. இரண்டு சோதிடர்களிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன், ஒன்றும் நடக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. பதில் சொல்வதற்காக கேள்வி கேட்கவில்லை, விளங்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி பவர்தாஸ். ஏற்கனவே பார்த்து விட்டேனென நினைக்கிறேன். சூத்திரம் (asp, php) சர்வரில் இருப்பின், நானென்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கேள்வி தான்.

    பதிலளிநீக்கு
  7. Hai nice i am share uru link in my website:
    http://vivekisravel.wordpress.com

    பதிலளிநீக்கு