நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் திரைப்பட முன்பதிவு வரை விரல்நுனியில் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது. இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.
ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி.
மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது.
மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது. டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது. நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். ஐபோன், ஆண்ட்ராய்ட், ஜாவா மொபைல் ஆகிய அனைத்திலும் மிகப்பெரிய தேவைகள் இருக்கின்றது. இதில் ஆண்ட்ராய்ட் பணிச்சூழலுக்கு மென்பொருள் உருவாக்க எங்கிருந்து தொடங்க வேண்டுமென இப்பதிவில் காண்போம்.
ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ள ஆசைப்படுவர்களுக்கு எழும் சில கேள்விகள்:
என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த முடியுமா?
ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை உருவாக்க லினக்ஸ், மேக் ஓஎஸ், விண்டோஸ் என எந்த இயக்கச் சூழலையும் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்ட் மொபைல் அவசியம் இருக்க வேண்டுமா?
மொபைல் தேவையில்லை, எமுலேட்டர் மூலமாக உருவாக்கிக் கொள்ளலாம் (சில வகையான மென்பொருட்களைத் தவிர).
எந்தெந்த மென்பொருள் உருவாக்கக் கருவிகள் தேவைப்படும்? செலவு செய்ய வேண்டியிருக்குமா? (Development tools and its cost)
ஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே, ஜாவா உருவாக்க மென்பொருளான எக்லிப்ஸ் என இலவவச திறமூலத் தீர்வுகளையே (free & open source tools) பயன்படுத்திக் கொள்ளலாம்
என் கணினியில் உருவாக்கிய மென்பொருளை எளிதாக உண்மையான பொபைலில் நிறுவ முடியுமா?
தாராளமாக இயக்க முடியும். இது ஐபோன், ஐபேட் மென்பொருட்களில்தான் சாத்தியமில்லை. ஐபோன் மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுவது சிமுலேட்டர், இங்கு நாம் பயன்படுத்துவது எமுலேட்டர். எமுலேட்டர் மென்பொருளில் உண்மையான மொபைலில் எந்த கட்டளைகள் இயங்குகிறதோ அவை அப்படியே இயக்கப் படுகிறது.
-தொடரும்
can u please mention what language the freshers could study..
பதிலளிநீக்குtheliva puriyara maadri ezhuthirukinga..mika nandri
பதிலளிநீக்குஎமுலேட்டர் மற்றும் சிமுலேட்டர் இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
thanks for your informantion
பதிலளிநீக்கு@nagarajan புதியவர்கள் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக் கொள்ளலாம். if, for loop போன்றவை கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரிதான் கையாளப்படும். புதியவர்கள் கற்றுக் கொள்ள பைத்தான் அருமயான மொழி. பாடத்திட்டத்தில் உள்ள மொழியை படிப்பது தேர்விற்கும் பயன்படும்.
பதிலளிநீக்குரம்யா, கதிர்வேல், லிண்டோ உங்கள் அனைவரது ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குcan u please tell me how to make Astrid like layout in eclipse
பதிலளிநீக்குஎன்ன சார் ஜாவா பற்றி சொல்லி த்ரேன்னு சொல்லிட்டு பாதியிலெ நிப்பாட்டிங்க.. சரிங்க சார் உங்கல மன்னிச்சிட்டேன். android application extension .apk அப்பிடினா android games க்கு என்ன extension... ஒரே கொழப்பமா இருக்கு... அது .jar file லா இல்ல வேற எதுவா???
பதிலளிநீக்கு@ganesh கொஞ்சம் விரிவாக கூற முடியுமா? என்ன கேட்க வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
பதிலளிநீக்குThanks.
நீக்குIn android market there is a software Astrid Task/To-do List. I want to design layout like above software. How to design?
Astrid is open source project only. You can avail its source at
நீக்குhttps://github.com/todoroo/astrid
Thanks. I download it already. but unable to run that project.
நீக்கு@பெயரில்லா
பதிலளிநீக்குஜாவா தொடர் எழுதிய நாட்களையும், அதற்கு பின்னர் உள்ள பதிவின் இடைவெளியையும் பார்த்தால் எவ்வளவு நீண்ட காலம் எழுதவேயில்லை என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். நண்பர்களுது கணினியைத் தான் பயன்படுத்துகிறேன். அவர்களின் தேவை போக இருக்கும் கொஞ்ச நேரம்தான் கிடைக்கிறது. மற்றொன்று சரளமாக சொல்லித் தரும் அளவிற்கு எனக்கு ஜாவா தெரியாது. ஏதேனும் தவறாக எழுதிவிடுவேனோ என ஒரு அச்சம். மேலும் ஜாவா எளிமையாய்க் கற்க புத்தகம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டேன். அதைப் படித்தாலே கொஞ்சம் தெளிந்து விடலாமே. ஜாவா பற்றி எழுதும்போது எக்லிப்ஸ் குறித்து எழுதியதே எனக்கு அதிக மனநிறைவைத் தருகிறது. நான் ஒரு சிறு தூண்டுகோல், அவ்வளவே. தத்தம் முயற்சியில் கற்றுக் கொள்ளுங்கள். ஏதேனும் புரியவில்லை எனில் மின்னஞ்சலில் கேட்கவும். என்னால் இயன்றதை செய்கிறேன்.
ஆண்ட்ராய்ட்க்கான மென்பொருள் .apk வடிவில் இருக்கும். Android Package என்பதன் சுருக்கமே apk ஆகும். jar fileல் ஜாவா .class files இருக்கும். apk fileல் ஜாவா .clasa filesசும் resource filesசும் (audio, video, images etc..) சேர்ந்து இருக்கும். all android applications will be in .apk extensions (including games)
ந.ர.செ. ராஜ்குமார்.... நான் தான் அந்த பெயரில்லா... மன்னிக்கவும்.. ஏதோ நினைப்பில் பெயரை எழுத மறந்து விட்டேன். நீங்கள் தந்த விவரங்கள் மிகவும் உதவியாக இருந்தது. சந்தேகத்தையும் தீர்த்தது. நன்றிகள்....
பதிலளிநீக்குமகிழ்ச்சி ரசிகன்.
பதிலளிநீக்கு