கமாண்ட் ப்ராம்ப்ட் வழியாக உள்ளீடு வாங்குவதெல்லாம் கற்றுக்கொள்ளும்போதுடன் நின்றுவிடும். பெரிய பெரிய ப்ராஜெக்ட்களில் எல்லாம் ஒவ்வொரு உள்ளீட்டையும் டெர்மினலில் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. அங்கு எளிதான GUI (Graphical User Interface) பயனர் இடைமுகப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு ஜாவா ப்ராஜெக்டில் பல வகைகளில் GUI வடிவமைக்க முடியும். Swing, SWT, GWT... போன்ற frameworkகளை கொண்டு ஜாவா டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை உருவாக்கலாம். அதுவே ஜாவா வெப் ப்ராஜெக்டாக இருந்தால் இருக்கவே இருக்கிறது HTML. JSP, Servelet போன்ற ஜாவா தொழில்நுட்பங்களை தீர்வுகள் அளிக்கவும் (business logic), CSS, HTML, Javascript போன்ற தொழில்நுட்பங்களை பயனர் இடைமுகப்பு வடிவமைக்கவும் பயன்படுத்தலாம். இன்று பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்களில் GUI வடிவமைப்பு முழுக்க முழுக்க வெப் பக்க வடிவமைப்பாகவே உருவாக்கப் படுகிறது. இந்த முறையில் இருக்கும் பெரிய நன்மை, தீர்வுகள் வழங்கக்கூடிய மையப் பகுதியை (business logic) ஒரு குழுவும், பார்த்தவுடன் கண்ணைக் கவரும் இடைமுகப்பை வேறொரு வெப் டெவலப்பரும் தனித்தனியே அவரவர் தனித்திறமைகளைக் கொண்டு கச்சிதமாகவும் விரைந்தும் முடிக்க இயலும்.
வெப் பக்கங்களில் இருந்து இயங்கும் ஜாவா அப்ளெட்டுகள் (Applet) மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. மென்பொருள் நிறுவனங்களில் டெஸ்க்டாப் மென்கலங்களை விட இணைய மென்கலங்களே (web application) அதிகம் உருவாக்கப் படுகிறது. மேலும் J2ME, Android போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் இடைமுகப்பு உருவாக்க அதிக வளங்கள் தேவைப்படும் Swing போன்ற பேக்கஜ்கள் இருக்கவே இருக்காது. ஏனெனில் மொபைல் அப்ளிகேஷன் வடிவமைப்பைப் பொருத்தவரை அதன் இடைமுகப்பு வெப், டெஸ்க்டாப் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு எளிமைக்கும் வேகத்திற்குமே முக்கியத்துவம். மற்றபடி ஜாவா மொழியின் அம்சம் (classலிருந்து threads கள் வரை) அதேதான். இதனால் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு கன்சோல் இன்புட் முறைகள் (DataInputStream, BufferedReaderInputStream ...blah blah..), Appletகள் (தாரளமாக படிக்கத் தேவையில்லை... விதிவிலக்கு: தேர்வுகளுக்கு மட்டும்), swings (அவசியம் ஏற்பட்டாலே தவிர) போன்ற ஜாவா கருத்துருக்களை அதிக சிரத்தை எடுத்து படிக்கத் தேவையில்லை. அதற்கு HTML5, jQuery போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள், அவசியம் பயன்படும். Core javaவில் நன்கு தெளிந்திருந்தாலே servlet, struts, spring... போன்ற எந்த ஜாவா தொழில்நுட்பமும் வசப்படும்.

- தொடரும்
இப்பொழுது மென்பொருள் துறையில் ஜாவாவில் என்னென்ன பயன்படுத்தப்படுகிறது என்பதை மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தொடரும் என போட்டு விட்டீர்கள் இது போன்ற கட்டுரைகளின் தொடர்ச்சிகளை உடனே எழுதி முடித்து விட்டால் ஜாவா படிக்கும் பலபேருக்கும் பயனுள்ளாதாக இருக்கும். படிப்பவர்கள் எதைப்படிக்கலாம் என தேர்வு செய்து படிப்பார்கள். நேரமும்,காலம், உழைப்பு எல்லாம் மிச்சமாகும். இரண்டு மூன்று பதிவுகள் எடுத்துக்கொண்டாலும் இதைப்பற்றி மிச்சம் வைக்காமல் எழுதிவிடுங்கள் தோழரே. இதை என் அன்புக் கட்டளையாக ஏற்கவும். நன்றி இந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் வலைப்பூவில் கொடுத்துள்ளேன்..எல்லோரிடமு செல்ல வேண்டுமல்லவா....
பதிலளிநீக்குநன்றி. எழுதி ரொம்ப நாளா ஆச்சேன்னுதான் எழுதுனேன். அலுவலகம் முடித்து ஒரு பெரிய சவாலான பேருந்து பயணத்திலேயே எல்லா சக்தியும் குறைந்து விடுகிறது. என்ன செய்ய? :)
நீக்குThank you for your clear valuable posting.
பதிலளிநீக்குபின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நண்பரே
நீக்குHi Buddy,
பதிலளிநீக்குThis is Adaleru from http://adaleru.wordpress.com i really like and love this post may i have the author contact number.
உங்கள் தளத்தில் தமிழிலிருக்கும் காப்பகம் பார்த்ததும் கவர்ந்தது. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.
நீக்குநானும் ஜாவா படிக்க வேண்டி ஏற்பட்டு உள்ளது. தேடினேன். உங்கள் தளம் கிடைத்தது. இன்றிலிருந்து ஒவ்வொரு பதிவாக வாசிக்க ஆரம்பிக்கிறேன்.
பதிலளிநீக்கு