தமிழக அரசு இணையதளத்தைப் பார்த்ததுமே எனக்கு பெரும் அதிர்ச்சி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அண்மையில் நடந்து முடிந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் அதனையொட்டி அரங்கேறிய உலகத் தமிழ் இணைய மாநாடு பெரும் எதிர்பார்ப்பிற்கிடையேயும், பல்வேறு விமர்சனங்களிடையேயும் நடந்து முடிந்துள்ளது. தமிழின் பழம்பெருமையையும், அதன் அடுத்தகட்டமாக இணையத்தில் தமிழ் வளர்க்கப் போவதைப் பற்றியும் வாய் கிழிய பேசி ஓய்ந்தாயிற்று. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தீர்மாணங்களில் ஒன்றாக இனிமேல் ஒருங்குறியை (யுனிகோட்) இணையத்தில் பயன்படுத்தும் முதன்மைக் குறியீடாகவும், பதிப்புத் துறைக்கு TACE16 - Tamil All Character Encoding 16 bit என்பதை துணை குறியீடாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையும் பிறப்பிக்கப் பட்டது. இதில் என் கோபம் இந்தக் குறியீடுகளில் இல்லை. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்த்தால் உங்களுக்கு என் கோபத்தின் காரணம் புரியலாம்.
தமிழக அரசின் இணையதளமே தமிழில் பயன்படுத்த எளிமையாக இல்லை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது?
http://www.tn.gov.in/
ஒருங்குறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் இணைய தளங்களில் TSCII - Tamilnadu Standard Code for Information Interchange குறியீடு பயன்படுத்தி வந்தோம். தற்போதும் அந்த வழக்கொழிந்த குறியீடுகளை இணையத்தில் பயன்படுத்துவது அறிவுடமை ஆகாது. உலக மொழிகள் ஒருங்குறி என்ற ஒரு குடையின் கீழ் வந்தபின், மின் ஆளுகை (E-governance) என்பது தகுதரப்படுத்தப்பட்ட குறியீடுகளை (universally standardized) தழுவாது முழு வீச்சில் சாத்தியமில்லை. இணைய தளங்களில் ஒருங்குறி குறியீட்டைத்தான் தமிழக அரசு அதிகாரப்பூர்வ குறியீடாக ஏற்கும் என பலகோடிகள் செலவு செய்து பெரும் அறிஞர்களைக் கொண்டு பெயரளவில் தீர்மாணத்தையும், அதற்கேற்ற அரசாணையையும் பிறப்பித்துவிட்டு அரசு இணையதளமே வேறு குறியீட்டில் இருந்தால் நகைக்காமல் என்ன செய்ய முடியும்.
ஆங்கிலத்தில் எளிமையாக தமிழக அரசின் இணையதளத்தை பயன்படுத்தலாம். ஆனால் தமிழில் அவர்கள் குறிப்பிட்ட குறியீட்டில்தான் பயன்படுத்த வேண்டும் எனத் திணிப்பது வெட்கச் செயல். இதற்கு வேறு எந்தக் காரணத்தைக் கூறியும் தேற்ற முடியாது. தற்போது வரும் அணைத்து இயக்கச் சூழல்களும் ஒவ்வொரு மொழிக்கான ஒரு எழுத்துருவேனையும் (font) தன்னியல்பாகவே பெற்று வந்து விடுகிறது, பின்னர் எதற்காக பழைய முறைகளையே பின்பற்ற வேண்டும். பட்டியல்களில் (மெனு) உள்ள தொடுப்புகள் படக் கோப்பாக (.jpg) இருப்பது வேதணை.
மாநாட்டு விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் ஒருங்குறியில் இருக்கையில், தமிழக அரசு இணையதளமே ஒருங்குறியில் இல்லாமல் இருப்பது கோபத்தை மட்டுமல்ல மன உளைச்சலையும் தந்துள்ளது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியெனப் பழங்கதைகளைப் பேசாமல் தமிழை கணினியில் எளிதாய்ப் பயன்படுத்த என்ன செய்யலாம் என்பதைச் சிந்தித்து செயல் படுவோம்.
பின்குறிப்பு: தமிழக அரசின் குறியீட்டுக் கொள்கையைப் பரப்ப நினைத்து இணையத்தில் கருத்துகளைத் தேட தமிழக அரசின் அரசாணையே கேள்விக் குறியாகும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சாட்டையடி! சபாஸ் !!
பதிலளிநீக்குசில நாட்களில் ஒருங்குறிக்கு மாறிவிடும் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குகருத்து தெரிவித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்கு