ஆகஸ்ட் 13, 2010

ஜாவா புரோகிராமிங் -- புதிய தொடர்

ஜாவா மொழியை எளிதாய் கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்காக இந்த தொடர் கட்டுரை.


தொழில்நுட்பத் தகவல்களை தமிழில் படித்தறிவது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.  புதுப் புது பதிவுகளும், புதிய சிந்தனைகளும் தமிழ்வழி கற்றலின் மூலம் அறிவை மேலும் மெருகேற்றும்.  இதற்கு இணையம் முதுகெலும்பாக செயல்படும்.  ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் எனப் பல மாயையைகளும் நிலவுகிறது.  


இன்று மென்பொருள் நிறுவனத்தில் பல சாதனைகள் நிகழ்த்தும் அனைத்து பொறியாளர்களும் ஆங்கிலத்திலேயே பிறந்து ஆங்கிலத்திலேயே ஊறியவர்கள் அல்ல.  ஏழை நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் சிகரங்களைத் தொட்டவர்கள் ஏராளம்.  எதில் படித்தாலும் புரிந்து கொண்டு படித்தால்தான் நமக்கும் பிறருக்கும் பயன்படும்.


இவையில்லாமல் தேர்வில் எடுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், வாங்கிக் குவிக்கும் சான்றிதழ் படிப்புகளும் வேலைக்காகாது என்பது கசப்பான உண்மை.  நிறுவனங்களும் அனைத்து திறமை உள்ளவர்களைதான் எதிர்பார்க்கிறது என்றாலும், நல்ல அடிப்படை அறிவும் புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்தாலே புதியவர்களுக்கு பயிற்சியளித்து தங்களுக்குத் தேவையான வளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.


பொதுவாக இன்றைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் கணினியைக் கையாளுகின்றனர்.   இணையத்தில் தமிழில் கட்டுரைகளைப் படிப்பவர்களும் ஆங்கிலம் அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   கணினி செயல்பாடு,  புதிய தொழில்நுட்ப தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் எனத் தமிழில் படித்தாலும் கணினி மொழி நுட்பம், மென்பொருள் உருவாக்க நுணுக்கங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள்தான் இருக்கும்,

 1. ஆங்கிலத்திலேயே அருமையான உதவிகள் கிடைக்கப்பெருகின்றது, பின்னர் பிறமொழியில் படிக்க அவசியமென்ன என்ற மனோபாவம்.
 2. மற்றொன்று அவற்றைத தமிழில் தேடினாலும் கிடைப்பதில்லை.
எடுத்துகாட்டிற்கு ஜாவா நிரலாக்கம், ஜாவா புரோகிராம், tamil java, tamil javascript... என்று எப்படி மாறி மாறித் தேடினாலும் தேடுவது கிடைப்பதில்லை.  தமிழில் கணினி தொழில்நுட்பம் குறித்து நிறைய நூல்கள் உள்ளது.   இருப்பினும் நம் மணம் முதலில் தேடுவது இலவசங்களைத்தான்.  அனைத்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்பதற்கு எங்கே வசதி இருக்கிறது.


இளங்கலை முதலாம் ஆண்டுவரை மக்கு ப்ளாஸ்த்திரியாகவே வாழ்ந்து வந்தவனுக்கு இன்று மென்பொருள் உருவாக்கத்தில் காதலை ஏற்படுத்தியது தமிழ் கம்ப்யூட்டரும், கம்ப்யூட்டர் உலகம் மாத இதழும்தான்.  இவற்றில் அடிப்படைகளை தமிழில் கற்றுக் கொண்ட பிறகுதான் ஆங்கில இதழ்களையும் கொஞ்சம் சீண்டினால் என்ன என எண்ணத் தோன்றியது.   அவற்றை மாதம் நூறு ரூபாய்க் கொடுத்து வாங்க வசதியில்லாததால் நூலகத்தை பயன்படுத்தவும் கற்றுக் கொண்டேன். 


கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டதை மாணவர்களுக்காகவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காகவும்  தாய் மொழியிலேயே பகிர்ந்து கொள்கிறேன்.  


      ஜாவா நிரலாக்கம் குறித்து புத்தம் புதிய தொடர் எழுத முடிவெடுத்துள்ளேன்.  இம்முயற்சி இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டுமென்பது என் அவா.   இம்முயற்சி வெற்றிபெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன்.


முதலில் ஏன் ஜாவாவைத் தேர்ந்தெடுத்தேன்?
 -------------------------------------------------------        
  
கணினி உலகில் மென்பொருள் உருவாக்கத்திற்கு ஏகப்பட்ட  நிரல் மொழிகள் உள்ளன.   இவை அனைத்தையும் கற்றுக் கொள்வது சாத்தியமல்ல,  அதற்கு அவசியமும் இல்லை.   எவ்வளவு மொழிகள் வந்தாலும் இன்றளவும் சி மொழி நிலைத்து நிற்கின்றது.  


காரணம் அம்மொழியைக் கொண்டு நம் கணினியுடன் பேசலாம், விளையாடலாம்.  System programmingற்கு இதை அடித்து கொள்ள இன்னொரு மொழி பிறக்க வேண்டும்.  


இன்னும் எத்தனையாயிரம் மொழிகள் வந்தாலும் அடிப்படை மொழிக் கூறுகள் பெரும்பாலும் இம்மொழியைச் சார்ந்தே இருக்கும்.  ஒரு மொழியில் if, while, for, main()... எனப் படித்துவிட்டு முற்றிலும் புதிதான நிரல் தொடர்களைக் கற்பது கடினம்.   எழுதப்படாத இச்சட்டங்களை மீறி  முற்றிலும் புதியாதாக உருவாக்கும் எந்த நிரல் மொழியும் வெற்றியடையாது.  இருப்பினும் சி மொழி உருவான காலகட்டம் வேறு, தற்போது உள்ள அதி நவீன வசதிகளை மேலும் மேலும் எதிர்பார்க்கும் காலகட்டம் முற்றிலும் வேறு.  இன்று இருக்கும் சிக்காலான அமைப்புகளை அன்று 1970..(எழுபதுகளில்) கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம்.


தொடரும்....

19 கருத்துகள் :

 1. மனித வளத்துறையைச் சேர்ந்தவன் நான். எனக்கும், ஜாவாவிற்கும் எந்தத் தொடர்புமில்லை. நிறைய நண்பர்கள் தமிழில் ஜாவா படிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்துகிறேன். தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 2. Naan Palamurai Muyandrum Kattrukolla mudiyadha mozhiyaga ullathu java mozhi. ippozhuthu neengal tamilil arimugam seiya pogum vagupirkaga aarvamaga irukiren.

  Nandriyudan.

  A.Venkatesu

  பதிலளிநீக்கு
 3. wow.. i want clear information on constructors.. pls help me

  பதிலளிநீக்கு
 4. Thats true.
  I did my education through Tamil Medium. But My kids are doing in English Medium. That is different story.


  I posted about SQL Server Basics in Tamil in :
  If you have free time. just visit there..


  //இன்று மென்பொருள் நிறுவனத்தில் பல சாதனைகள் நிகழ்த்தும் அனைத்து பொறியாளர்களும் ஆங்கிலத்திலேயே பிறந்து ஆங்கிலத்திலேயே ஊறியவர்கள் அல்ல. ஏழை நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் சிகரங்களைத் தொட்டவர்கள் ஏராளம். எதில் படித்தாலும் புரிந்து கொண்டு படித்தால்தான் நமக்கும் பிறருக்கும் பயன்படும்.

  Thanks for posting articles in Tamil.. Congrats.

  பதிலளிநீக்கு
 5. தெளிவான விளக்கங்களுடன் சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. வேண்டியவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
 7. //அஸ்பர் கேட்டது constructors..
  ஒவ்வொன்றாக பார்க்கலாமே. ஒரு பொருளை (object) உருவாக்கும்போது கன்ஸ்ட்ரக்டரிலிருக்கும் கட்டளைகள் தானாகவே இயங்கும். சூப்பர் கன்ஸ்ட்ரக்டர், வகைகள், பய்ன்பாடு.. என ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஜாவா எளிமையாக கத்துக்கலாம் அஸ்பர். உங்களுக்கு தெரிந்ததையும், விமர்சனங்களையும் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. //இம்முயற்சி வெற்றிபெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன்.//

  என்னுடைய துணை என்றுமே உங்களுக்கு இருக்கும்.தமிழ் தொழில்நுட்ப மொழியாக வேண்டும்.இந்த கூற்றை மெய்பிப்போம்.மெய்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 9. அருமை . தொடர்ந்து பதிவுகளை இடவும்

  இந்த பதிவுகளை என்னுடைய வலை பூவிலும் இடலாமா ??? நண்பரே

  பதிலளிநீக்கு
 10. ARIVU said... // இந்த பதிவுகளை என்னுடைய வலை பூவிலும் இடலாமா ??? நண்பரே

  தாராளமாக, இங்கிருந்து பெறப்பட்டது எனத் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அருமையான முயற்சி நண்பரே.,,,, எனக்கு ஜாவாவை புரியவையுங்கள்...

  பதிலளிநீக்கு
 12. மிக அருமை தோழாரே.......

  உஙகள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்துக்கள்...

  ”தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்”

  பதிலளிநீக்கு
 13. java katru kolla
  nanum arvamaga than irukkiren.
  ningal ezhuthinal.......


  Thank you .......

  பதிலளிநீக்கு
 14. // nanum arvamaga than irukkiren.
  ningal ezhuthinal.......

  அட அப்படி யெல்லாம் ஒன்னும் இல்லீங்க. யாரு வேணும்னாலும் கத்துக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. உங்களின் இந்த முயற்சியை வாழ்த்துகிறேன் ராஜ்குமார். Design Patterns பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் நண்பரே. இந்த கட்டுரையை படித்த பிறகு இனி யாரும் OOP பற்றி வாயே திறக்கக்கூடாது அந்த அளவுக்கு நீங்கள் விளக்க வேண்டும். ;)

  பதிலளிநீக்கு
 16. ஊக்கப் படுத்தியதற்கு நன்றி திரு.கமீல்

  பதிலளிநீக்கு
 17. உஙகள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்துக்கள்..

  பதிலளிநீக்கு