அக்டோபர் 20, 2010

எக்லிப்ஸ் - ஆண்ட்ராய்ட் - XML பிழை செய்தி

எக்லிப்ஸ் புதிய பதிப்பில் ஆண்ட்ராய்ட் xml கோப்புகளில் பணியாற்றும்போது அடிக்கடி ஒரு பிழைசெய்தி வந்து எரிச்சலூட்டும்.

முதல்முறை இந்த பிழை செய்தியை பார்த்தபோது நிறுவதலில் ஏதேனும் குறை நேர்ந்துவிட்டதோ என நினைத்தேன். 

இணையத்தில் தேடிய போது இது எக்லிப்ஸ் ஹீலியோஸில் பணியாற்றும் அனைவருக்கும் வரும் பிரச்சனைதான் எனக் கண்டுகொண்டேன்.

இதை களைவதற்கு இணையத்தில் கண்டறிந்த இரண்டு தீர்வுகள்
 1. xml கோப்பை(file) வலது க்ளிக் செய்து Open with Android XML editor என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
 2. மற்றொன்று xml root tagல் namespace attribute கொடுப்பது
           xmlns:android="http://schemas.android.com/apk/res/android" >
 

இரண்டாவது வழி எனக்கு நன்றாக வேலை செய்தது.

சும்மாயில்லாமல் துறுதுறுவென அனைத்தையும் க்ளிக்கிப் பார்க்கும் என் வழக்கத்தால் எனக்கு ஒரு தீர்வு கிடைத்தது.

XML கோப்பை (strings.xml) Resources tabல் திறந்து கொள்ளவும்.  மேல் வலது மூளையில் இருக்கும் ஐகானை சொடுக்குங்கள்.  பிரச்சனை தீர்ந்து விட்டது, இனி எந்தத் தொல்லையுமில்லாமல் xmlல் எடிட் செய்யலாம்.
இந்த பதிவின் ஆங்கிலப் பதிப்பைக் காண
http://androidorigin.blogspot.com/2010/10/simple-solution-to-get-rid-off-null.html

9 கருத்துகள் :

 1. தொடரட்டும் உங்கள் பணி! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. enakku intha andoid install seiratha pathi tamil la sollunga nanbargale pls...

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு முறையும் தேடிவந்து ஊக்கப்படுத்தும் திரு.எஸ்.கே தங்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. //balaofficial30...
  வருகைக்கு நன்றி திரு.பாலா. தமிழில் எழுதச் சொல்லி engtamilலில் கேட்டிருக்கிறீர்கள். பயங்கரமான ஆளு நீங்க.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லாஅக்டோபர் 27, 2010

  இவ்வளவு நாட்கள் தங்களின் வலைப்பூவை சரியாகப் பார்க்காமல் இருந்திருக்கிறேனே!!!

  A picture worths 1000 words என்பார்கள். அந்த தத்துவத்தை நன்கு அறிந்துவைத்திருக்கிறீகள். ஒவ்வொறு இடுகைக்கும் தாங்களே படமெடுத்து, சிலவற்றில் தங்கள் கையாலேயே எழுதி விளக்குவதைக் கண்டால் தங்களின் அற்பணிப்பை புரிந்துகொள்ள இயல்கிறது.

  அதுமட்டுமல்ல. நானும் த.தொ துறையில் தான் இருக்கிறேன். தங்களின் துறை சார்ந்த அறிவைக் காணும்போது சற்று பொறாமை படுகிறேன். :-)

  மென்பொருட்களையும், நிரலாக்கத்திலும் (programming) இயற்கையிலேயே காதல் கொண்டவர்களைக் காண இயலுமா என எண்ணினேன். இதோ, கண்டுகொண்டுவிட்டேன்! :-)

  இனி அடிக்கடி தங்கள் வலைப்பூவிற்கு வரும் தேனிக்களில் நானும் ஒருவனாகிறேன்.

  தமிழ் CPU வெளியீடு ஊட்டத்தில் (RSS feed) சந்தாதாரராகிவிட்டேன்! ;-)

  பதிலளிநீக்கு
 6. வருகை புரிந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி திரு. மிதுன். தங்களின் எழுத்து நடை, தெளிந்த சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 7. enaku flash'ai evvaru android prograamil add pannuvadhu endru enaku koora mudiyuma.....

  pls send me to mail..
  akkravikumar@gmail.com

  பதிலளிநீக்கு