ஜனவரி 13, 2012

ஆண்ட்ராய்ட் கத்துக்கப் போறீங்களா? - பாகம் 2

ஆண்ட்ராய்ட் சூழலை நம் கணினியில் நிறுவ ஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே துணை வேண்டும்.  கூகிளில் android sdk எனத் தேடினீர்கள் என்றால் முதல் சுட்டியிலேயே சரியான தளத்திற்கு சென்று விடலாம்.  http://developer.android.com/sdk/index.html பக்கத்தில் இருந்து உங்கள் இயக்கச் சூழலிற்கேற்ற (operating system) மென்பொருளைப் பதிவிறக்கவும்.

இந்த எஸ்.டி.கே உங்களது பல்வேறு ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலை நிர்வகிக்கத்தான்.  இதை நிறுவினால் மட்டுமே உங்களால் ஆண்ட்ராய்ட் பயன்படுத்த இயலாது.  உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலையும் நிறுவ வேண்டும்.  எப்படி விண்டோசில் 98, xp, vista, 7 என பல்வேறு பதிப்புகள் இருக்கிறதோ ஆண்ட்ராய்டிலும் 1.5, 1.6, 2, 2.1, 2.2, 3 போன்று பல்வேறு பதிப்புகள் இருக்கின்றது.  ஆண்ட்ராய்ட் கற்றுக் கொள்ள இவை அனைத்தும் தேவையில்லை.  புதிய பதிப்பை மட்டும் தற்போதைக்கு நிறுவாதீர்கள், ஏனெனில் அது மிக மிக வேகமாக (ரன் ஆவ இரண்டு நாள் ஆயிடும்.. பர்வாயில்லயா) இயங்குகிறது.  ஆண்ட்ராய்ட் 2.2 (API Level 8) நிறுவிக் கொள்ளுங்கள்.

நீங்கள் நிறுவிய அடைவில் (installed folder) என்னென்ன இருக்கிறதென ஒரு நோட்டம் விட்டால் platforms என்றொரு அடைவைக் (folder) காணலாம். நீங்கள் நிறுவிய பல்வேறு ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கேற்ப தனித்தனி அடைவுகள் இங்கு இருக்கும்.  platforms folder ஆள் அரவமற்ற மொட்டைத் தெரு போல இருந்தால், ஆண்ட்ராய்ட் இயக்கச் சூழலையும் நிறுவ வேண்டுமென்பதை கவனத்தில் கொள்க.


பிறகு இன்னொரு சேதி, உங்கள் நண்பரது கணினியிலோ அல்லது கல்லூரி ஆய்வகத்திலோ அல்லது வேறு எங்கோ ஆண்ட்ராய்ட் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கித்தான் நிறுவ வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.  இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் ஆண்ட்ராய்ட் முழுதாக நிறுவிக் கொள்ளலாம்.  ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் அடைவை நகலெடுத்து (copy through pen drive or dvd) உங்கள் கணினியில் நிறுவதற்கு தேவையின்றியே பயன்படுத்தலாம்.


எக்லிப்சில் ADT (ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் டூல்கிட்) எப்படி நிறுவதென அடுத்த பதிவில் பார்க்கலாம் (இன்னும் எத்தன மாசம் ஆகப் போவுதோ?  கூகிளின் துணைகொண்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருக்கவும். எந்த பதிவிற்கும் காத்திருக்காதீர்கள்.  )

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


---தொடரும்

13 கருத்துகள் :

 1. மிக விளக்கமான நல்ல பதிவு. நானும் இதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்திருந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லாஜனவரி 14, 2012

   pls தயவு செய்து எழுதுங்க மேடம்

   நீக்கு
 2. ஆண்ட்ராயிடை பற்றி அறிந்து கொள்ள இணையத்தில் தேடிய போது, தங்களின் இந்த பதிவு கண்டேன்.மிக பயனுள்ள பதிவு. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. படத்துடன் கூடிய விளக்கம் எளிமையாக புரிகிறது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பா!

  பதிலளிநீக்கு
 4. நிறைய பசியுடன் வந்தவனுக்கு பந்தியில் இலை விரித்துவிட்டு காத்திருக்க சொல்றீங்களே சார். பிளீஸ் தொடருங்க..

  அதோட, எனக்கு SEO சம்பந்தமா படிக்க நிறைய ஆசை இருக்கு. ஆனா புரியத்தான் மாட்டேங்குது. நீங்க உதவுவீங்களா?

  தனிப்பட்ட முறையில் உதவினீர்கள் என்றாலும் பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. ”எந்த பதிவிற்கும் காத்திருக்காதீர்கள்” இந்த வரியைப் படிக்கவில்லையா? இந்த பதிவு எழுதும்போதாவது கொஞ்சம் நேரம் இருந்தது. இப்போது புது ப்ராஜெக்ட், புதுப் புது தலைவலி... ஆரம்பமாகிவிட்டது. இருப்பினும் அவ்வப்போது எழுதுகிறேன் நன்பரே. SEO குறித்து நான் எதுவும் அறியேன்.

   நீக்கு