ஜனவரி 07, 2012

தொழில்நுட்பப் பதிவுகளைத் தொகுக்கும் மின்னிதழ்கள்

 பொதுவாக தொழில்நுட்பம் அல்லாத பதிவுகளை நான் அதிகம் படிப்பதில்லை.  பரபரப்பாய் இயங்கும் உலகில் இதற்கென ஒதுக்கும் சில மணித்துளிகளை என் துறை சார்ந்த பதிவுகளைப் படிப்பதற்கே அதிகம் செலவிடுகிறேன்.  அவ்வப்போது ஆங்காங்கே ஓரிரு தொழில்நுட்பமல்லாத பதிவுகளைப் படித்ததுண்டு.  அறிவுசார் பகிர்தல்களை விட கூச்சல், சண்டை சச்சரவுகள் அதிகம் தென்படுகிறது.  தனிநபர் தாக்கல்கள், சாதி மத மோதல்கள், முகத்தை சுளிக்க வைக்கும் பின்னூட்டங்கள், அனானிகளின் அட்டூழியங்கள் என நல்ல கனியில் புழு பூத்தது போல் சிலர் விஷமத்தனங்களை மேற்கொள்கின்றனர்.

பொது விடயங்களை எழுதும் தமிழ் வலைதளங்களுக்கு இருக்கும் ஆதரவைப் போல தொழில்நுட்ப பதிவுகளுக்கு இருப்பதில்லை.  ஒன்று தொழில்நுட்ப பதிவுகள் சென்றடையும் பயனர்கள் மிகக் குறைவு, மற்றொன்று அதிகம் படித்த மக்களுக்கு (தாய் மொழியே தெரியாதது போல நடிக்கும் நன்மக்கள்) தாய்மொழியில் படிப்பதில் ஆர்வமில்லை.  படிப்பதற்கே அதிக ஆளில்லாத போது தொழில்நுட்ப பதிவுகளை எழுதுவது ஆங்காங்கே அத்தி பூத்தாற் போலத்தான் இருக்கும்.  தொழில்நுட்பப் பதிவுகள் யாருக்கு சேர வேண்டுமோ (கிராமப்புற மாணவர்கள்) அவர்களுக்கு கணினி, இணைய இணைப்பு போன்ற வசதிகள் எளிதாய் அணுகக் கூடிய தூரத்தில் இல்லை.  

எழுதும் சில தொழில்நுட்ப பதிவர்களும் தொழில்நுட்பம் அல்லாத பதிவுகளையும் சேர்த்து கதம்பமாய் எழுதுவதினால் எங்கு எது கிடைக்கும் எனத் தெரியாமல் போய் விடுகிறது.  இந்நிலை மாற ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் நல்ல பதிவுகளைத் தொகுத்திடல் வேண்டும்.  அச்சுப் பிரதியாக வெளியிடுவது அதிக செலவு பிடிக்கக் கூடிய ஒன்று.

போதிய விளம்பரதாரர் இல்லாததால் மூடப்பட்ட சிறு இதழ்கள் ஏராளம் உண்டு.  இதற்கு எடுத்துக்காட்டாக பதிவர்களுக்கான தென்றல் மாத இதழ் கைவிடப்பட்ட செய்தி வருத்தமளிக்கிறது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக தமிழில் இருக்கும் சில தொழில்நுட்ப பதிவுகளைத் தொகுத்து இரு மின்னிதழ்கள் வெளிவருகின்றது.
ஒன்று கற்போம் மின்னிதழ், மற்றொன்று கணியம் மின்னிதழ்.
இந்த மாத இதழ்களை கீழ்க்காணும் சுட்டியில் பதிவிறக்கிக் கொள்ளவும்




Jan 2012 கற்போம் மின்னிதழ்


Jan 2012 கணியம் மின்னிதழ்









3 கருத்துகள் :

  1. வணக்கம் நண்பரே,

    பயனுள்ள தொழில்நுட்ப மின்னிதழ்களை பதிவிறக்கி பயன்படுத்த பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    தொழில்நுட்ப தகவல்களை தொகுத்து அனைவருக்கும் பயன்படும் வகையில் மின்னிதழ்களாக வெளியிடும் நண்பர்களின் உழைப்புக்கு பாராட்டுகள்+வாழ்த்துகள் அவர்களின் பணி தொடர்ந்து சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  2. Good News............
    http://www.topsoftdown.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நன்றி மாணவன்.
    நன்றி திரு.முகம்மது ஃப்யாஸ்

    பதிலளிநீக்கு