ஜனவரி 22, 2012

பைத்தான் - உன்னதமான புரோகிராமிங் மொழி


ஒரு ப்ராஜெக்ட்டில் பைத்தான் (Python) மொழி பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது.  பைத்தான் மொழியில் ஜாங்கோ (Django) தொகுப்பு (framework) கொண்டு ஒரு இணைய பயன்பாட்டு மென்பொருள் (web application) உருவாக்கினோம்.  அப்போதே அதைப் பற்றி எழுத நினைத்திருந்தேன்.  நாளை எழுதலாம், நன்கு தெரிந்து கொண்டு எழுதலாம், முதலில் ஆகுற வேலையைப் பாக்கலாம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போட்டு காலம் கடந்து விட்டது.  பைத்தான் மொழியில் பெற்ற அனுபவம் எவர்க்கேனும் பயன்படட்டுமே என்பதற்காக இப்பதிவு.

பைத்தான் ஒரு அருமையான புரோகிராமிங் மொழி என்பதை படித்துத் தெரிந்து கொண்டதை விட அதை பயன்படுத்திப் பார்க்கையில் அது எவ்வளவு உண்மை என விளங்கியது.  பைத்தான் ஒரு ஓப்பன் சோர்ஸ் நிரல் மொழியாகும்.  எனவே உலகத் தரமிக்க இந்த மொழியை எந்தக் கட்டணமும் இன்றியே பயன்படுத்தலாம்.  வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் கூட இலவசமாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  பைத்தான் எந்தஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கும் சொந்தமானதல்ல.  பைத்தான் மென்பொருள் நிறுவனம் (Python Software Foundation) இதன் உரிமத்தை நிர்வகித்து வருகிறது.

பைத்தான் மொழி கொண்டு பல்வேறு பயன்பாட்டுக்கான மென்பொருட்களை உருவாக்க முடியும்.  பைத்தானின் கட்டளைகள் மிக மிக எளிமையானவை.  பிறர் எழுதிய புரோகிராம்களையும் பார்த்தே விளங்கிக் கொள்ள முடியும்.  இது ஒரு (Object Oriented Programming) பொருள் நோக்கு நிரலாக்க மொழி. ஆகவே எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்களையும் சிறப்பாக கையாள இயலும்.  பைத்தானுடன் தன்னியல்பாகவே இணைந்து வரும் தொகுப்பு நிரல்கள் (standard libraries) ஒரு புரொகிராமரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது.  இதோடு மட்டுமல்லாமல் third party libraries என்றழைக்கப்படும் இதர புரோகிராம்களுக்கும் குறைவில்லை.  விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், மேக் os என அனைத்து இயக்கச் சூழல்களிலும் பைத்தான் திறம்பட இயங்கும்.  



சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ல் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசைவாக இயங்கும்.


மொபைல் போன்களில் கூட பைத்தான் இயங்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.   

பைத்தானில் எழுதப்பட்ட இணையதளங்கள், டெஸ்க்டாப் மென்பொருட்கள், விளையாட்டுகள், மொபைல் அப்ளிகேஷன்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.


குறிப்பாக அதிகவேகம் தேவைப்படும் கிராபிக்ஸ் மென்பொருட்களிலும் பைத்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பைத்தானை புரோகிராமிங் மொழியாக மட்டும் இல்லாமல், ஒரு மென்பொருளின் கட்டளைகளை இயக்கும் ஸ்கிரிப்டிங் மொழியாகவும் பயன்படுத்தப் படுகிறது.  Gimp, Blender, 3D Studio Max, Maya, Autocad போன்ற அனைத்து பிரபல கிராபிக்ஸ் மென்பொருட்களிலும் பைத்தான் கொண்டு ஸ்கிரிப்ட்கள் (மேக்ரோஸ் போல) எழுத முடியும்.



பைத்தானை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களில் கூகிளை விட ஒரு சிறந்த எடுத்துகாட்டை தந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. நம் கணினி பயன்பாட்டின் அங்கமாகிவிட்ட கூகிள் தேடுபொறி (Google Search engine), கூகிள் வரைபடங்கள் (Google Maps)கூகிள் குழுமம் (Google groups), வீடியோ பகிர்வு தளமான Youtube அனைத்தும் பைத்தான் மொழியில் உருவாக்கப் பட்டவையே.  நாசா (NASA), யாஹூ (Yahoo) போன்ற உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களிலும் பைத்தான் பயன்படுத்தப் படுகிறது.
                                     
விசுவல் பேசிக் போன்ற காலம் கடந்த புரொகிராமிங் மொழிகளை பாடத்திட்டதிலிருந்து நீக்கிவிட்டு, நவீன காலத்திற்கேற்ப திறமூல (open source) தீர்வான பைத்தான் மொழியை பாடத்திட்டதில் சேர்த்திட வேண்டும்.  கல்லூரி ப்ராஜெக்ட்களை பைத்தான் போன்ற மொழிகளில் செய்ய மாணவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.  கணினித் துறையில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் பைத்தான் படிக்கும் நிலை வரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இம்மொழியை சுவைக்க நினைக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.


12 கருத்துகள் :

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. but i think creating gui based softwares in python is hard when compared to vb,whats your answer regarding this.......?waiting for ur answer..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைத்தானில் GUI மென்பொருட்கள் எளிதாக உருவாக்க முடியும். விபியில் மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோவில் வரும் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். இதுபோல பைத்தானில் wxpython, PyQt... என நிறைய லைப்ரரிகள் உள்ளது. விபியில் drag and drop மூலம் எளிதாக உருவாக்குவது போலவே இதிலும் மென்பொருட்களை உருவாக்க முடியும். Bittorent, Skype போன்ற பிரபல மென்பொருட்கள் பைத்தானில் உருவாக்கப் பட்டவையே என்பதை அறிய வேண்டும். இந்த படத்தை பார்க்கவும் http://www.bitools.eu/image/qt.jpg . தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தோழா வலைப்பூவில் இணைப்பு கொடுத்தாச்சு.

    பதிலளிநீக்கு
  4. பைத்தான் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு தேவையான பதில்கள் அனைத்தும் உங்களுடைய இந்த பதிவில் இருக்கிறது தோழா.
    அருமை, மிகவும் அருமை.
    உதாரணமாக கணினி அறிவியலைப் படமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு முதலில் அறிமுகமாகும் கணினி மொழி, சி மொழிதான். சி மொழியில் முதலில் அனைவரும் எழுதும் நிரல் Hello World . ஆனால் அதை செய்யும் மாணவனுக்கு ஏற்படும் முதல் சந்தேகம் ஒரு வாக்கியத்தை திரையில் திரையிட இத்தனை வரிகளையும் இந்த மொழியில் எழுத வேண்டுமா என்பதுதான். அத்துடன் முதலில் சி மொழி கற்கும் அனைவருக்கும் அதனுடைய Syntax கள் ஆசிரியர்களால் முறையாக கற்பிக்கப்படுவதில்லை. ஒரு நிரலை முழுமையாக விளக்கிக் கூறுவதும் இல்லை.
    இந்த குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஒரு அருமையான மொழி பைத்தான் மொழி.
    அத்துடன் கற்றுக்கொள்வதற்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு மொழி என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கதிர்வேல்.

      நீக்கு
    2. எதையும் யாரும் முழுமையாக கற்றுதரமுடியாது. நாமாக முயற்சி செய்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். சி தெரிந்தால் மற்ற எதையும் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.

      நீக்கு
  5. thanks Surya. definitely i write about your invaluable site.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாபிப்ரவரி 14, 2012

    மிக அருமையான பதிவுகள்... நன்றி பாஸ்(குரு)...!!

    பதிலளிநீக்கு
  7. நண்பரே,
    தங்களின் இந்த பதிவிற்காக "லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)"விருதினை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி! பதிவிற்கு வருகை புரிந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Liebster விருது பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு